Monday, January 28, 2013

புகைப்படத்தொகுப்பு_ப்ரிட்ஜ்

எந்நேரமும் லேப்டாப்பையே பிடித்துக்கொண்டிருந்தால் எப்படி?வாங்க,எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு overbridge / மேம்பாலத்துக்குப் பொடிநடையாகப் போய்வரலாம்.எனக்கு முதன்முதலில் இந்தப் ப்ரிட்ஜைப் பார்த்ததும் பிரம்மாண்டமாகத் தெரிந்தது.இன்றும் அப்படியேதான்.

ஒரு Hiway/ஹைவே_யின் மேல் தெற்குவடக்காகக் கட்டப்பட்டுள்ளது.இதை சைக்கிளில் செல்வோரும்,நடந்து செல்வோரும் பயன்படுத்துகின்றனர்.450 அடி நீளமுடையது."This beautiful bridge is the longest cable-stayed bridge in California"னு ஒரு article_ல் படித்தேன்.இரண்டு டவர்கள்/Towers இரும்புக் கம்பிகளால் ப்ரிட்ஜுடன் இணைத்துக் கட்ட‌ப்பட்டுள்ளன.டவர்களின் உயரம் 90 அடி.சில்வர் நிறத்தில் பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். 9 வருட திட்டமிடலில்  15 மில்லியன் டாலர்கள் செலவில் கட்டப்பட்டுள்ளது.


போகும்வழி கொஞ்சம் மேடாக இருக்கும்.உடல் இளைக்க விரும்புபவர்கள் தினமும் இங்கே வந்து நடை பயிற்சி மேற்கொள்ளலாம்.


                                                          வாங்க,போகலாம்...
                                         


                                             இன்னும் கொஞ்சம் தூரம்தான்....
                                   

                                                          
                                       இன்னும் கொஞ்சமே கொஞ்சம் தூரம்தான்....
                   


                     ப்ரிட்ஜுக்குப் போக வழியிலேயே இரண்டு பாதைகளாகப் பிரியும்.
                      

இடது பக்க பாதை கொஞ்சம் நேரானது.
வலது பக்கத்தில் உள்ளது வளைந்து, நெளிந்து செல்லும்.நடந்து செல்வோர் இந்த பாதையில் செல்லலாம். இல்லையென்றால் பின்னால் சைக்ளிஸ்ட்/cyclist வர்ராங்களா, இல்லையா என அடிக்கடித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நட‌க்க வேண்டும். நம்ம‌ ஊர் மாதிரி 'க்ளிங்' சத்தமெல்லாம் கொடுக்கமாட்டாங்க. இது வளைந்துவளைந்து செல்லும் வலதுபக்க பாதை.உட்கார வழியில் ஒரு மரபென்ச்/wooden bench உண்டு. 


 இது கொஞ்சம் நேராக செல்லும் பாதை.அதோ தூரத்தில் தெரிகிறதே ஒரு டவர்/tower அங்குதான் போகவேண்டும்.


 ஒருவழியாக ப்ரிட்ஜுக்கு வந்தாச்சு.அடுத்தப் பதிவில் ப்ரிட்ஜின் அந்தப் பக்கம் போவோம்.

சூரியஒளி எதிர்திசையில் இருந்து வருவ‌தால் வெளிச்சம் குறைவாக இருக்கிறது.அந்தப் பக்கம் போனபிறகு 'பளிச்' tower / டவரைப் பார்க்கலாம்.

19 comments:

 1. /// 9 வருட திட்டமிடலில் 15 மில்லியன் டாலர்கள் ///

  தகவல்கள் + படங்கள் அருமை... நன்றி...

  ReplyDelete
 2. திண்டுக்கல் தனபாலன்,

  வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றிங்க‌.

  ReplyDelete
 3. america vanthu parka thoondukoolai ulathu unga pathivugal..ithe mathiri pathivugal podungal..nanum america vanthuruven oru naal :P

  ReplyDelete
  Replies
  1. ஞானகுரு,

   முயற்சி செய்தால் முடியாதா என்ன!வாங்க!வாங்க!

   "ithe mathiri pathivugal podungal"___ஏதோ வீட்டுக்கு பக்கத்தில் இருக்கவும் எடுத்து போட்டாச்சு.இதே மாதிரி பதிவுகளுக்கு எங்கே போவது!

   Delete
  2. ungal pathiluraikaiku nandri...ஏதோ வீட்டுக்கு பக்கத்தில் இருக்கவும் எடுத்து போட்டாச்சு.இதே மாதிரி பதிவுகளுக்கு எங்கே போவது!// haha..america vil idangal peyargal avalavu theriyathu..therindhal ange sendru oru pathivu podungal endrirupen chitrakka :P

   Delete
  3. ஞானகுரு,

   "therindhal ange sendru oru pathivu podungal endrirupen chitrakka"____ அதுக்கு பணம்,நேரம் எல்லாம் வேண்டுமே.

   Delete
 4. 'உடல் இளைக்க விரும்புபவர்கள் தினமும் இங்கே வந்து நடை பயிற்சி மேற்கொள்ளலாம்'
  ஏங்க, இதுக்குன்னு அமெரிக்கா வர முடியுமா? (சும்மா, தமாஷ்!)

  ரொம்ப அழகா இருக்கு பாதைகள், அது முடிவடையும் பாலம் எல்லாம். மனித நடமாட்டமே இல்லையே! எப்பவுமே இப்படித்தானா?

  வெற்றிகரமான ஆரம்பத்திற்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. ரஞ்சனி,

   "ஏங்க, இதுக்குன்னு அமெரிக்கா வர முடியுமா?"___இந்த வரியை யாரோ மனத்திரையில் கேட்பதாக அங்கு நானே எழுதாமல் விட்டுட்டேனே!அடுத்த தடவ, எப்படியெல்லாம் யோசிப்பாங்கன்னு வரிக்குவரி ச்செக் பண்ணிட வேண்டியதுதான்.

   ஒரு தெருவுல இருந்து அடுத்த தெருவுக்குப் போக(குறுக்கே ஹைவே இருப்பதால்) கட்டியிருக்காங்க.வாக்கிங்,ஜாகிங்,சைக்ளிங்,மற்றும் ரோடை கடக்க வேண்டியவர்கள் மட்டுமே போவாங்க.சில சமயங்களில் நிறைய பேர் வந்துட்டு போய்ட்டு இருப்பாங்க.இந்தப் படம் எடுத்த‌போது அவர்கள் போகும்வரை வெயிட் பண்ணி எடுத்தேன்.ஒருசில படங்கள்ள இருப்பாங்க. ஐந்தாவது படத்தில்கூட‌ ஒருத்தர் இருக்காங்க பாருங்க.இங்கு முடித்த‌ பிறகு வேர்ட்ப்ரஸ்ஸில் போட்டுவிடுகிறேன்.வேண்டுமட்டும் லார்ஜ் பண்னி பாத்துக்கலாம்.

   Delete
 5. ஸரி அந்தப்பக்கம் போவோம். படங்களெல்லாம் அழகாயிருக்கு. பார். தனபாலன்ஸார் முன்னாடி வந்துள்ளார்.
  ஹலோ மிஸ்டர் தனபாலன் ஸவுக்கியமா?
  அப்புறம் வரேன்.

  ReplyDelete
  Replies
  1. காமாஷிமா,

   அடுத்த பதிவில் கூட்டிட்டுப் போறேன்.ஆமாம் அம்மா நேரில் பார்க்கும்போதும் அழகாகவே உள்ளது.அன்புடன் சித்ரா.

   தன‌பாலன் அவர்களின் கமெண்டைப் பார்த்ததும் எனக்கே ஆச்சரியம். பரவாயில்ல,நீங்க விசாரிச்சுட்டீங்க.எங்குமே அவரது பின்னூட்டத்தைக் காணவில்லை.

   Delete
 6. அடுத்த முறை california இந்த ப்ரிட்ஜ் பார்க்க வேண்டும் .

  அழகாய் பதிவு செய்துள்ளீர்கள். ப்ரிட்ஜிற்கே அழைத்துக் கொண்டு போனது போல் இருந்தது பதிவு.

  நன்றி பகிர்விற்கு,

  ராஜி

  ReplyDelete
  Replies

  1. ராஜலஷ்மி,

   வரும்போது,முடிந்தால் வந்து பாத்துட்டுப் போங்க.இங்குதான் எங்கு பார்த்தாலும் ஒரே ப்ரிட்ஜ்மயமாக உள்ளதே.இது வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பதால் அடிக்கடி போவேன்.ஒரு பதிவுக்கும் கைகொடுத்துவிட்டது. பாராட்டுக்கு நன்றிங்க.

   Delete
 7. Nice hiking trail Chitrakka..waiting for the next post. So that I can do some google n locate your exact location! Hahaha! :)

  ReplyDelete
  Replies
  1. நாங்க மட்டும் யாரு?வேற ஊருக்கு வீட்டை மாற்றின பிறகுதானே பதிவையே போட்டோம்!!!

   Delete
 8. Wow! Nice Pictures :) Thanks for taking us a thrilling ride to ur favourite spot :)

  ReplyDelete
 9. இங்கும் நடைபாதைக்கும்,சைக்கிள்காரங்களுக்கும் இரு வேறு வழி இருக்கு.சிலவேளைகளில் 2ம் ஒன்றுதான். பெல் அடிக்கமாட்டார்கள்.அதனால் ஒரு அண்டர்ஸ்டாடிங் ஆக நாங்க நடப்போம்.அதாங்க வலதுபக்கமா.........
  சித்ராவா...கொக்கா...அதானே இடம்மாத்திவிட்டுத்தான் பதிவு போட்டிருப்பீங்கன்னு முதல்லேயே தெரியும் ஏன்னா வரிக்கு எங்க வீட்டுக்கு பக்கம் என எழுதியிருக்கமாட்டீங்க துணிந்து.
  சூப்பரா ப்ரிட்ஜ் இருக்கு.படங்கள் அப்பவே நல்லாயிருக்கு அழகாயிருக்கு..!!

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி , வளைந்து செல்லும்போதை 'வீல் செயர்'காரங்களுக்கு என்பது லேட்டாதான் தெரிய வந்தது. அதானே, சித்ராவா கொக்கா !

   சமையல் 'ப்ளாக்'னாலதான் படங்கள் எடுக்கப் பழகிக்கொண்டேன்.

   Delete