Sunday, February 10, 2013

எங்கள் ஊர் உழவர் சந்தை


உழவர் சந்தைக்குப் போவதாக இருந்தால் சனிக்கிழமை விடியற்காலமே அதாவது 8:00 மணிக்கே எழுந்து டீ,காபி குடிப்பதாக இருந்தால் குடிச்சுட்டு ரெடியாகி 8:45 க்கு கிளம்பிவிட வேண்டியதுதான்.காலையிலேயே போனால்தான் கூட்டம் குறைவாக இருக்கும்.நேரமாக ஆகக் கூட்டம் சேர்ந்துவிடும்.நேரமானபிறகு போனால் எல்லாக் கடைகளிலும் பெரியபெரிய Q ஆரம்பித்துவிடும்.சீக்கிரமே போனால் சின்ன Q வோடு தப்பிக்கலாம்.

சில வருடங்களுக்கு முன்புவரை முக்கியமான விசேஷங்களின்போது மட்டும் (Thanksgiving,Christmas,Newyear) அந்த சனிக்கிழமை சந்தை இருக்காது.அதை முன்கூட்டியே அறிவிப்பு பலகையில் எழுதி வைத்து விடுவர்.ஆனால் இப்போது (rain or shine) வருடம் முழுவதும் உண்டு.

 இதில் சில கடைகள் வருடம் முழுவதும் இருக்கும்.இங்கு பழங்கள், காய்கறிகள்,கீரைகள்,நட்ஸ்,கிழங்குகள்,தேன்,ஃப்ரெஷ் மீன்,மீட் வரை அந்தந்த சீஸனுக்கு ஏற்றார்போல் வரும்.ஒருசில கடைகள் அந்தந்த சீஸனுக்கு மட்டுமே வரும்,சீஸன் முடிந்ததும் காணாமல் போகும்.

தொடர் வாடிக்கையாளர் என்றால் சில சலுகைகள் உண்டு.அதாவது சாதாரணமாகவோ அல்லது விசேஷ தினங்களின்போதோ நாம் வாங்கும் பொருளுடன் இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் போட்டுத் தருவர்.சில கடைகளில் விலையைக் குறைத்தும் கொடுப்பர்.வாராவாரம் நலன் விசாரிப்புகளும் நடக்கும்.

ஒருசில புகைப்படங்கள் மட்டுமே போட்டிருக்கிறேன்.சிலபல காரணங்களால் எல்லாப் படங்களையும் போட முடியவில்லை.வேறென்ன,குளோசப் படங்கள்தான்.

வீட்டில் இருந்து கிளம்பி இதுமாதிரி சிலபல சாலைகளைக் கடந்து செல்ல‌ வேண்டும்.

பார்க்கிங் கிடைப்பது கஷ்டம்.எங்காவது தேடிப்பிடித்து போட வேண்டியதுதான்.

நாங்க எப்போதும் தூரத்திலேயே காரை பார்க் செய்வோம்.பிறகு கார்களைக் கடந்து ஊர்ந்து வரவேண்டியதுதான்.

அதோ டெண்ட்டெண்டாகத் தெரிகிறதே அதுதான் உழவர் சந்தை நடைபெறும் இடம்.

காலை 9:00 மணியிலிருந்து 1.00 மணி வரைதான் மார்க்கெட் இருக்கும். இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இருக்கும் என்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கும்.

                                        9:00 மணிக்கே வந்ததால் கூட்டமில்லை

                                 
 உழவர் சந்தை நடைபெறும் சாலையின் இரண்டு பக்கமும் உள்ள கட்டிடங்களில் புக் ஸ்டோர்,துணி,சாப்பாட்டுக் கடைகள் உண்டு.


பார்ப்பதற்கு நல்ல வெயில் அடிப்பதுபோல் இருந்தாலும் குளிரும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது.


                  கூட்டம் கொஞ்சம்கொஞ்சமாக சேரத்தொடங்கிவிட்டது.


        
 ஒருசில கடைகளைப் பார்த்துக்கொண்டே செல்வோமே.அடுத்த முறை காமிராவுடன் போனால் மேலும் சில கடைகளைப் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.
 உழவர் சந்தை முழுவதும் பெரும்பாலும் ஆர்கானிக் பொருள்களாகவே இருக்கும்.


இது பாப்கார்ன் கடை.சூடாகப் பொரித்து உப்பு&தேன் டச்சிங்குடன் சூப்பரா இருக்கும்.சிறிய பை $ 3 .நடுத்தர பை $ 5. பெரிய பை $ 8 .நான் எப்போதும் சிறிய பையுடன் நடையைக்கட்டுவேன்.

                   இந்த சாலை  முழுவதும் ப்ரெட்,சாப்பாட்டுக்கடைகள் தான்.

11 comments:

  1. Replies
    1. தனபாலன்,

      அங்குமிங்கும் உங்கள் பின்னூட்டங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.வருகைக்கும் நன்றிங்க.

      Delete
  2. நல்ல பெரிய சந்தையாத்தான் இருக்கு உங்கூர் சந்தை! :) ரெகுலராகப் போயிடறீங்களா..அப்ப காய்-பழங்கள் ஒன்லி இங்கே வாங்குவதுதானா?

    என்னவருக்கு உழவர்சந்தை மேல ஒரு ஆர்வம் வந்து, நான் இந்தவாரம் நான் வேணாம்னு சொன்னாலும் கேக்காம இந்த வாரமும் அருகில்[அதிகமில்லை, ஒரு 16 மைல்தான்...அவ்வ்வ்வ்வ்வ்வ்]இருக்கும் இன்னொரு சந்தைக்கு கூட்டிப்போனார் சித்ராக்கா. நாங்க போகும்போது 11 மணியாச்சா..பார்க்கிங்கே கிடைக்கலை..ஒருவழியா பார்க் பண்ணிட்டு ஷாப்பிங் முடித்தோம். :)

    நல்ல படங்கள்..பகிர்வுக்கு நன்றி! நாங்களும் பாப்கார்ன் சாப்பிட்டோமே! :o)

    ReplyDelete
    Replies
    1. பழங்கள் இங்குதான்.இந்த சீஸனுக்கு பாவக்காய்,அவரை,புடலை, பீர்க்கை,வெண்டை இவையெல்லாம் வருவதில்லை.அதனால் நம்ம ஊர் கடையில் கொஞ்சம் வாங்குவேன். சுரை,காலிஃப்ளவர்,கேரட்,பூசணி, ப்ரோக்கலி,தக்காளி,வெங்காயம்,பூண்டு,புதினா & கொ.மல்லி,கீரை எல்லாம் இங்கே.

      வெளியில் நாம் வாங்கும் பொருள்கள் இங்கு கிடைத்தால் வாங்கிடுங்க.ட்ரை ஃப்ரூட்ஸ், டேட்ஸ்,உலர் திராட்சை,நட்ஸ் போன்றவை.

      இவருமே அப்படித்தான்,'ஒரு வேளை முடிஞ்சிடும் கெளம்பு'என்பார்.

      ஓஓ பாப்கார்ன் சாப்டாச்சா!இங்கே'no pets allowed'னு போர்ட் பார்த்திருக்கேன்.நீங்க என்ன பண்ணுவிங்க?

      Delete
    2. /'no pets allowed'னு போர்ட் பார்த்திருக்கேன்.நீங்க என்ன பண்ணுவிங்க?/ அதுவா? இங்கே ஞாயித்துக் கிழம OC Great park-ல நடக்கும் சந்தையில் pets allowed. ஜீனோவையும் கூட்டிப்போனோம், ஆனால் அவனுக்கு கூட்டம் கொஞ்சம் அலர்ஜி, கூடவே மத்த pets-ரொம்பவே அலர்ஜி! கத்திக் குமிச்சான்! ;))) பொறுக்க முடியாம காருக்கு கொண்டுவந்து விட்டுட்டுப் போனோம் சித்ராக்கா. சனிக்கிழமை சந்தை பார்க்கிங் லாட்டில் நடப்பதால் இவனை வீட்டிலயே விட்டுட்டுப் போயிட்டோம். :)

      Delete
    3. pets வளக்கணும்னா பொறுமை அவசியம்,முதலில் அவங்கள புரிஞ்சுக்கணும்,நிறைய வேலையும் இருக்கும்.தனியா இருந்தா அதுக்கு போரடிக்காதா!முடிந்தால் உங்க 'ஜீனோ'வைப் பற்றிய ஒரு நாள் நிகழ்வைப் பதிவா போடுங்க.நன்றி மகி.

      Delete
  3. சித்ராக்காஆஆஆ! :) உங்க ஏரியா எங்கன்னு கண்டுபுடிச்சிட்டேன்ன்ன்ன்! :))))))))))

    படங்களையெல்லாம் கவனிச்சிருக்கீங்க, ஆனா எல்லாப் படமும் கவனிக்கப்படலை,. ;) ஒரு lead கிடைச்சாப் போதும்ல, ஊரைக் கண்டுபுடிக்க??! :)

    சூரியரே..சந்திரரே..நட்சத்திர நாயகரே..சும்மா பாடிகிட்டே நடையக் கட்டிடறேன். ஹஹஹா!

    ReplyDelete
    Replies
    1. நாங்கள்ளாம் 'யாதும் ஊரே...'கோஷ்டிக்காரங்க.அதனால சாண்டா கிளாரா கவுண்டியோ,ஆரஞ்சு கவுண்டியோ எல்லாமே எங்களுக்கு 'நம்ம ஊருதான்'.

      கொடுத்த 'க்ளு'வை வைத்து வெட்டி ஒட்டி சொன்ன வேலைய கரெக்ட்டா செஞ்சிட்டீங்க.இந்த பின்னூட்டத்தோட நேத்தே வருவீங்கனு நெனச்சேன்.

      தெரியும் மகி.நேத்து பதிவைப் போடும்போதே ஆப்பிள் ஐபேட் & கம்ப்யூட்டரில் ச்செக் பண்ணினேன்.எல்லாமே (எழுத்துக்கள்) பளிச்.சரி நாமதான் பக்கத்து ஊராச்சேன்னு விட்டுட்டேன்.இதுவும் ஜாலியாதான் இருக்கு.

      Delete
    2. :) ஆமாம், ஜாலியாத்தான் இருக்குது! :)

      Delete
  4. போட்டோவெல்லாம் பிரமாதம்
    ஆப்பிள் , ஆரஞ்சு , எல்லாம் , இப்பொழுதுதான் , பறித்து வந்தது போல் ப்ரெஷ்.
    நல்ல பதிவு.
    ஆமாம் உங்களை எந்த போட்டோவிலும் பார்க்க முடியவில்லையே.இல்லை
    எனக்குத் தான் தெரியவில்லையா...

    ராஜி.

    Sent from http://bit.ly/itamil

    ReplyDelete
    Replies
    1. ராஜலஷ்மி,

      உழவர் சந்தையில் பழங்கள் & காய்கறிகள் எல்லாம் முதல் நாள் பறித்து இரவோடு இரவாக நீண்ட தூரம் பயணம் செய்து எடுத்து வருவாங்க. அதனால ஃப்ரெஷ்ஷா இருக்கும்.வெளியில் கடைகளில் வாங்கினால் ஐஸில் வச்சதுதான் இருக்கும்.

      "இல்லை எனக்குத் தான் தெரியவில்லையா...." இல்லிங்க,நான்தான் வேண்டாம் என விட்டுவிட்டேன்.வருகைக்கு நன்றிங்க.

      Delete