Tuesday, February 19, 2013

எங்கே செல்லும் இந்தப் பாதை!!!


எங்ங்கேஏஏ செல்ல்லும்ம் இந்தப்ப் பாஆஆதைஐ!!!...

எனக்குத் தெரியும், பதிவின் முடிவில் உங்களுக்கும் தெரிந்துவிடும்.நடந்து (கடந்து) வந்த பாதையை மறக்கக்கூடாது என்பதால் பதிவு செய்து கொள்கிறேன்.

வீட்டிலுள்ளவர்கள் அவரவர் வேலையைப் பார்க்க வெளியே கிளம்பியதும் நானும் ஒருமணி நேரம்'வாக்'போக வெளியில் செல்வேன்.வார நாட்களில் ஒரு மணி நேரமும் (சதுர வடிவில்),வார இறுதி நாட்களில் ஒன்றரை மணி நேரமும் (பெரிய சதுரமாகவும்) போவேன்.அந்தந்த சீஸனைப் பொறுத்து நேரத்தையும் மாற்றிக்கொள்வேன். எப்படியிருந்தாலும் அது காலை 7:30 யிலிருந்து 9:30 க்குள் இருக்கும்.

ஒவ்வொரு தெருவிலும் நடப்பவர்களுக்கென sidewalk உண்டு.உடன் யாராவது வந்தால் எவ்வளவு தூரம் நடந்தாலும் நடந்த களைப்பே தெரியாது.

ஒவ்வொரு தெருவும் இப்படித்தான் வளையாமல்,நெளியாமல் நீளமாகப் போய்க்கொண்டே இருக்கும்.நாம்தான் எங்கு வேண்டுமோ அங்கு 'கட்' பண்ணிக்கொள்ள வேண்டும்.

வீட்டிலிருந்து வெளியே வந்து நேராக இந்தப் பாதையில் ஒரு 15 நிமி வாக். காலை 9:30 மணி இளம் வெயிலில் பார்க்கவே அழகாக இருக்கும்.


 ஒரு இடத்தில் அப்படியே வலது பக்கம் திரும்பி (நாங்க UPS மாதிரியாக்கும்) ஒரு 15 நிமி 'வாக்'. கீழேயுள்ள இரண்டு படங்களும் ஒரே தெருதான்.இந்தத் தெருவில் மட்டும் வெயில்,நிழலைப் பொறுத்து ஏதாவது ஒரு side walk ஐ  தேர்ந்தெடுத்து நடப்பேன்.                                                
                                                   

             அதேதான் இங்கேயும்.மீண்டும் வலது பக்கம் திரும்பி 15 நிமி 'வாக்'.

மீண்டும் வலது பக்கம் திரும்பி 15 நிமி நடையைக்கட்டினால் வீடு வந்துவிடும்.

தினமும் இவ்வளாவு தூரமெல்லாம் 'வாக்'போய் ஒல்லியா இருப்பேன் என்று நினைத்துப் பொறாமைப்பட்டால்... ஹா ஹா ஹா!!!. ஒருவேளை மருத்துவர் அறிவுரைப்படி 'jogging' போயிருந்தால் அது நடந்திருக்குமோ என்னவோ!

20 comments:

  1. :)
    Could not control laughing while reading the last 2 lines!
    :)

    Nice streets Chitra Akka! I love to walk but unlike you, I explore all the streets. ;) I won't make squares, because our roads do wind, go uphill, downhill and plains.

    We are having winter storms today...it's soooo...oo cold and windy! Hence me n Geno are sitting like coach potatoes! LOL! :)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மகி.மீதமாவதை சாப்பிட்டுசாப்பிட்டு எவ்வளவு வாக் போனாலும் பழைய நிலைதான்.

      உங்க ஊர் தெருக்கள் மாதிரி இருந்தால் இன்னும் நன்றாகத்தான் இருக்கும். இங்கு எல்லா தெருவுமே ஒன்னுபோலத்தான் இருக்கும்.

      இங்கும் திங்கள்&செவ்வாய் மேகமூட்டம்&மழை+நல்ல குளிர்.இன்று அப்படியே தலைகீழ். இன்னைக்கு நாங்க இருக்கும் பகுதியிலிருந்து தொலைவிலுள்ள ஒரு மலையில் பாதிக்குமேல் ஸ்னோ இருந்ததைப் பார்க்க முடிந்தது.நேரில் பார்த்ததில்லை.

      வருகைக்கு நன்றி மகி.

      Delete
  2. 'வாக்கிங்' செல்ல சரியான பாதை தான்...

    ReplyDelete
  3. haha me too laughing...heading superb...semaya eluthuring ponga..:P

    ReplyDelete
    Replies
    1. ஏதோ படங்களை வைத்து ஓட்டுகிறேன்.வருகைக்கு நன்றி ஞானகுரு.

      Delete
    2. ella vaarthaikalum manathil thondrum padangalil irundhe thondrum chitrakka..camera vai vaithu edutha padangalai vaithu uruvakkum pathivugal nandru...manathil thondrum padangalaiyum pathivugalai aakungal...vaanam vasapadum...boomi ungalai thirumbi paarkum...juzt kidding..:P

      Delete
  4. ரொம்ப அருமையாய் இருக்கிறது பாதை.தினமும் நடந்தால் கண்டிப்பாக இளைப்போம்.
    என் வலைதளத்தில் பீச்சில் வாக் போகிறவர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். படித்து கருத்திடுங்களேன் சித்ரா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க,சுத்தமாகவும்,அழகாகவும் இருப்பதால் நடப்பதற்கும் நன்றாக இருக்கும்.என்ன ஒன்று,யாராவது எதிரில் pet அழைத்து வந்தால் மட்டும் பயம்.

      காலையே நான் போய் பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.இங்கு வாக்,அங்கு பீச் வாக்.நல்ல நகைச்சுவையா எழுதியிருக்கீங்க.வருகைக்கும்,தகவலுக்கும் நன்றிங்க.

      Delete
  5. ///.என்ன ஒன்று,யாராவது எதிரில் pet அழைத்து வந்தால் மட்டும் பயம்.//// grrrrrrrr! :)

    ReplyDelete
  6. உண்மையையைச் சொன்னால் உங்களை எல்லாம் பார்த்தால் கொஞ்சம் பொறாமைதான்.எனக்கு அவ்வளவு பயம்.தொலைவில் வரும்போதே எதுத்தாப்ல இருக்கற'சைட்வாக்'குக்கு தாவிடுவேன்.

    இல்லை என்றால் எப்போதோ என் மகளுக்கு pet வாங்கிக் கொடுத்திருப்போமே.

    ReplyDelete
  7. nethu night than na marina beach ponen...miga pramandamaga irupathalo illai aathi kaalathilirunthu irupathalo illai eppoluthum salikamal karaiyai thottu thottu vilayaduvathalo enavo enaku kadal migavum piditha ondru...chennai ku ponal beach irukirathu enbathum nan chennai varuvatharku oru karanam..

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்குமே மெட்ராஸ் என்றதும் நினைவுக்கு வருவது மெரினாவும், எப்படியாவது ஒரு ஃப்லைட்டையாவது கொஞ்சம் கிட்டத்தில் பார்க்க மாட்டோமா என்ற ஆவலும்தான்.

      Delete
  8. இந்தப் பதிவிலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம்: வட்டமாப் போனாலும், சுத்தி சுத்தி போனாலும், ஒல்லியா இருக்கறவங்க ஒல்லியாவே இருப்பாங்க....குண்டா இருக்கறவங்க ...ஹி....ஹி...ஹி....!
    பாதை எங்கே போனாலும் நாம் நம் வீட்டுக்குத்தானே வரணும்! - என்ன ஒரு தத்துவம் பாருங்க!

    மிக அழகான பாதை (இதுதான் நிஜமான கருத்துரை. மற்றதெல்லாம் உங்களை கொஞ்சம் நக்கல் பண்ண - கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நாமெல்லாம் சரியான வெயிட்டுதாங்க.என்ன ஒன்னு,இன்னும் கொஞ்சம் உயரமிருந்தால் இந்த வெயிட்டெல்லாம் சும்மா தூசு மாதிரி.

      "பாதை எங்கே போனாலும் நாம் நம் வீட்டுக்குத்தானே வரணும்! - என்ன ஒரு தத்துவம் பாருங்க!"____உண்மைதானே.ஒவ்வொருவரும் எந்த ஊர்ல, எவ்ளோ நாள் இருக்கணும், எத்தனை அடி வைக்கணும்,எல்லாம் கடவுள் செயல்தானே____ அப்பாடி, நானும் ஒரு தத்துவம் சொல்லிட்டேன்.

      "கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்"____ ஆஆ,கோபம் வந்துடுச்சு. கழி,கம்புகளுடன் ஆளும் அனுப்பியாச்சு.போஓங்க,அதால ஏதாவது உபயோகம்னா கூடவே வச்சிருக்க‌லாம்.அத கூட வச்சிக்கிட்டா நமக்குத்தான் பிரச்சினை.தத்துவம் தானா வந்து விழுது.ஜாலியான பின்னூட்டம்,நன்றிங்க.

      Delete
    2. 'ஒவ்வொரு அரிசியிலும் அவங்க அவங்க பேரு எழுதியிருக்கும்'அப்படின்னு சொல்லுவாங்க. அதேபோலத்தான் எந்த ஊரு தண்ணி எத்தனை நாள் ....அய்யய்யோ மறுபடி தத்துவமா?

      இந்த விளையாட்டு வேண்டாங்க, இரண்டு பேருமே ஜாலியா இருந்துடலாம். ஓகே?

      Delete
    3. "இந்த விளையாட்டு வேண்டாங்க, இரண்டு பேருமே ஜாலியா இருந்துடலாம். ஓகே?"___ டபுள் ஓகே!

      Delete
  9. அழகாக இருக்கு உங்க வாக் போகும் இடம். எங்க வீட்டிலிருந்து எப்படி போனாலும் திரும்ப எங்க வீட்டுக்கு வரலாம். இந்த சதுரம்,செவ்வக வடிவில் போகலாம். அதைவிட நடப்பதுக்கே பாதை இருக்கு. அது இன்னும் நல்லாயிருக்கும்.
    சூப்ப்ப்ப்ப்பர் நீல வானம்.பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.(2வது படம்)

    ReplyDelete
    Replies
    1. "எங்க வீட்டிலிருந்து எப்படி போனாலும் திரும்ப எங்க வீட்டுக்கு வரலாம்" ___ ஹ்ம்ம்ம் ? ..... புரியலையே !

      எனக்கு 'வாக்' போவதென்றால் அவ்ளோ இஷ்டம். அதிலும் காலை நேரம்தான் பிடிக்கும். இங்கே கருத்து வந்ததால் பதிவை மீண்டும் பார்க்க ஒரு சந்தர்ப்பம் :) நன்றி ப்ரியா.

      Delete