Saturday, March 9, 2013

செர்ரி ப்ளாஸம் /Cherry blossom

பெயர்தான் செர்ரி ப்ளாஸமே தவிர இது செர்ரி பழமரம் இல்லை.பூக்கள் பளீர் வெண்மை நிறத்திலும்,சிறிது ப்ரௌன்,மற்றும் பிங்க் நிறத்திலும் பூத்திருப்பதைப் பார்க்கும்போதே ஒரு அழகுதான்.

சென்ற இரண்டு வாரங்களாக இந்த மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கின. இரண்டு நாட்களாக பெய்த மழை+காற்றினால் எல்லாப் பூக்களும் கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்க்கின்றன.

நான் எடுத்த சில படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.


கீழே படத்திலுள்ளது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மரம்.பூக்க ஆரம்பித்த சமயத்தில்...


ஒன்றிரண்டு நாட்கள் கழித்தபிறகு...


மேலும் இரண்டு நாட்கள் கழித்து...


 சென்ற வார நிலை...


இன்றைய நிலை...பூக்களின் இதழ்கள் கொட்டிக்கொண்டே ப்ரௌன்+சிவப்பு நிற‌ இளம் துளிர்களுடன்...

10 comments:

 1. Replies
  1. முதல் வருகைக்கு நன்றி தனபாலன்.

   Delete
 2. இயற்கை விருந்து மிக அழகு!

  பூக்கள் பளீர் வெண்மை நிறத்திலும்,சிறிது ப்ரௌன்,மற்றும் பிங்க் நிறத்திலும் இருக்கும் என்று சொல்லியிருக்கிறீர்களே! ஒரே மரத்தின் பூக்கள் விதம்விதமான வண்ணங்களில் இருக்குமா?

  செர்ரி ப்ளாசம் என்பது இந்தப் பூக்களின் பெயரா? அல்லது மரங்களின் பெயரா? இந்த மரங்களில் காய், பழம் எதுவும் வராதா?

  செர்ரி மரங்கள் (செர்ரி பழம் கொடுக்கும் மரங்கள்)எப்படி இருக்கும் என்று புகைப்படங்கள் எடுத்துப் போடுங்கள். அதையும் பார்க்க ஆவல்.

  நிறையக் கேள்வி கேட்டுவிட்டேனோ?

  ReplyDelete
  Replies
  1. "ஒரே மரத்தின் பூக்கள் விதம்விதமான வண்ணங்களில் இருக்குமா?"____ மொட்டு விட்டதிலிருந்து பூத்து முடியும்வரை லேஸாக நிறம் மாறும்.நான் ஒரு மரத்தை மட்டுமே போட்டுள்ளேன்.இன்னும் பல நிறங்களில் பூக்கள் உள்ள மரங்கள் நிறைய வீடுகளில் உள்ளன.ஆனால் ஃபோட்டோதான் எடுக்க முடியாது.பார்க் மாதிரியான இடமாக இருந்தால் எடுத்திடலாம்.

   பூவுக்குத்தான் இந்தப்பெயர்.இந்த மரம் ஜப்பானிலிருந்து வந்தது.அங்கு இது பூக்கும் சமயம் விழாவாகவே கொண்டாடுவார்களாம்.நியூஸ்ல காட்டும்போது அவ்வளவு அழகா இருக்கும்!

   ரியல் செர்ரி மரங்கள் சிலரது வீடுகளில் உள்ளன.நல்ல உயரமாக பச்சைப்பசேலென, சீஸன் சமயத்தில் சிவப்பு நிற பழங்களுடன்...அதே காரணத்தால்தான் எடுக்க முடியாது.

   "நிறையக் கேள்வி கேட்டுவிட்டேனோ?"____கேட்டால்தானே நீங்க!எனக்கும் பேசும்போது மகிழ்ச்சிதான்.

   Delete
 3. சித்ரா,

  உங்கள் cherry blossom பதிவு என்னை washingtonஐ நினைவிற்கு கொண்டு வந்தது. இரண்டு வருடத்திற்கு முன்பு New jersey வந்த போது இந்த cherry blossom festival ஐ பார்க்கும் வாய்ப்புக். கிட்டியது.

  எங்கு நோக்கினும் வெண்மையடா என்று இருந்தது washington. பார்க்க பார்க்க அழகு.
  நானும் பார்க்கும் வரை சிவப்புப் பூக்கள் என்றே இருந்தேன் .பிறகு தான் தெரிந்தது இந்தப்
  பூக்கள். காயக் காய பேரழகு.

  அருமையானப் பதிவு.
  வாழ்த்துக்கள். தொடருங்கள்.......


  ReplyDelete
  Replies
  1. நேரில் பார்த்ததில்லை,நியூஸ்லதான் பார்த்திருக்கேன்.இங்கு எங்கோ ஒருஒரு மரம்தான் இருக்கும்.அதுவே அழகாக இருக்கும்.இன்னும் கூட்டமாகப் பார்க்கும்போது சூப்பரா இருந்திருக்கும்.உங்களுக்கு cherry blossom festival ஐ நினைவு படுத்தியதில் மகிழ்ச்சி. வருகைக்கு நன்றிங்க.

   Delete
 4. I used to take lots of pictures of this tree when we were in Utah.will give you the album's link soon. :)

  For some reasons, am not seeing this tree here Chitra Akka! Beautiful flowers!

  ReplyDelete
  Replies
  1. Utah ல் இருந்தீங்களா!!அங்கிருக்க பிடிச்சுதா.நேரம் கிடைக்கும்போது லிங்க் கொடுங்க.

   உங்க ஊர் பக்கம்,நாங்க இருந்த ஊரிலும் பனை மரம் மாதிரிதான் நிறைய இருக்கும்.வருகைக்கு நன்றி மகி.

   Delete
  2. Yeah..we were in Salt Lake City for more than 11/2 years! It's a beautiful place Chitra Akka...small city with lot of tamil community..it's little depressing in winter, but we enjoyed our stay by then! :)

   May be Orange County is a warmer place, not suitable for these trees! Hahaha!

   Delete
  3. Salt Lake City,Utah என்றதும் ஒரு சமயம் டிவியில் விண்டர் ஒலிம்பிக்ஸ் opening ceremony பார்த்த ஞாபகம்தான் வருது.நன்றி மகி.

   Delete