Friday, March 1, 2013

Duck(க்கு)mentaryஎங்கள் வீட்டில் கொஞ்சம் rubber ducky கள் உள்ளன‌.கடந்த மூன்றரை வருடங்களில் ஓவ்வொருவராக எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். இப்போதைக்கு எண்ணிக்கையில் 11 இருக்கிறது.கொஞ்சம் தேடிப்பார்த்தால் இன்னும் சிலர் சிக்குவார்கள்.

இனி எங்கு வீடு மாறிப்போனாலும் அவர்களும் எங்களுடனே பயணிப்பார்கள்.அவர்களை நன்றாகக் கழுவித் துடைத்து ஒரு ஸிப்லாக் கவரில் போட்டு பத்திரமாக வச்சாச்சு. தேவைப்படும்போது இங்கே வந்து பார்த்துக்கொள்ளலாம்.

                                                             ரெட் கார்பெட் வரவேற்பு
                                                    
ஒருசில மாதங்களுக்குமுன் இங்குள்ள பப்ளிக் சானலில் வாத்துகளைப்பற்றி  DUCKumentary என்ற தலைப்பில் ஒரு டாக்குமெண்டரி  பார்த்தேன்.தலைப்பு வித்தியாசமாக இருக்கவும் அப்படியே மனதில் ஒட்டிக்கொண்டது.அந்தத் தலைப்பினூடே எங்க வீட்டு டக்குமெண்டரியைக் கொஞ்சம் பார்ப்போமே.

இங்கு High school ல் Marchingband  என்ற elective வகுப்பு உண்டு.பிள்ளைகளின் விருப்பம்போல் ஒன்று முதல் 4 வருடங்கள் வரை இந்த வகுப்பில் சேர்ந்திருக்கலாம்.

பள்ளி அமைந்துள்ள ஊர்,அருகிலுள்ள ஊர்களில் நடக்கும் விசேஷங்களில் கலந்துகொண்டு Show,Parade, முதலியவை செய்வார்கள்.மற்ற பள்ளிகளுடன் Competition ல் கலந்துகொள்வார்கள்.நிறைய பள்ளிகள் வந்து செய்யும்போது பார்க்கவே அழகாக இருக்கும்.இதற்கு நிறைய பயிற்சிகளும் உண்டு.

இதற்கென சீருடை உண்டு.இதனை ஒவ்வொரு முறை பயன்படுத்தியபிறகும், நேர்த்தியாக மடித்து வைக்க வேண்டும்.அவ்வாறு செய்தால் அவர்களுக்கு படத்திலுள்ள‌துபோல் ஒரு ரப்பர் டக்கி கிடைக்கும்.பிள்ளைகளை உற்சாகப்படுத்துவதற்கு இது ஒரு வழி.பிள்ளைகளுக்கு அது கிடைக்கும்போது அதில் ஒரு ஆனந்தம்.அவர்களின் கடின உழைப்பிற்கான பரிசு இல்லையா!!!


ஒரு வருடம் முழுவதற்குமான சிறப்பு பரிசாக பெரிய டக்கியும்,நான்கு வருடங்களுக்குமாக அதைவிட‌ பெரிய டக்கியும் உண்டு.அந்த இரண்டும் எங்கள் வீட்டிற்கு வர வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஒவ்வொரு டக்கியின் மேலும்,சுற்றிலும் மகளின் கடின உழைப்பு எப்படி ஜொலிக்குது பாருங்க!எனக்குத் தெரியுது,முயற்சி செய்தால் உங்களுக்கும் தெரியும்.

11 comments:

 1. உங்கள் வீட்டு duckக்குmentary சூப்பர்!

  அருமை மகளின் கடின உழைப்பு அன்பான அம்மாவின் கண்களுக்கு மட்டும்தான் ஜொலிக்கும்!

  தாயைப் போல பிள்ளை!

  தாயும் சேயும் வாழ்க பல்லாண்டு!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும்,இரண்டு பேருக்குமான வாழ்த்துக்கும் நன்றிங்க.

   Delete
 2. yes supera iruku..ducks ellam cute ah iruku...sona mathiri jolikuthu..kulanthaiga ithu madhiri work panratha parkum pothe cute ah irukum..thanks

  ReplyDelete
  Replies
  1. ஞானகுரு,

   வேலையில் கவனமாயிட்டீங்கபோல,நல்லது,சந்தோஷம்,வாழ்த்துக்கள்."sona mathiri jolikuthu"___இப்படி சொல்லாட்டி விட்ருவோமா என்ன!வருகைக்கு நன்றி.

   Delete
 3. solati vitruvoma// haha ungal pathivugalin prathipalipu engalathu comments :-P post cute so comments also cute ;) velaila kavanamayitinga pola // enga.. long way to go..epdi poga porenu therila :O

  ReplyDelete
  Replies
  1. எவ்வளவு தூரம் என்றாலும் போய்த்தானே ஆகனும்,இதுக்குள்ளே சலிச்சுக்கிட்டா எப்படி?நல்லதே நடக்கும்னு நம்புங்க.

   Delete
  2. visarathithu ookapaduthuruku mikka nandri..:) poithan aaga vendum...nallathe nadakum..thanks for ur words :) actually few years back in purse i had a pillayar photo...backside on it i wrote it as nallathai ninai nallathai sei nallathe nadakum...maybe for missing first two points nallathe nadakama iruko :o i ll try to follow all from now..thanks.

   Delete
 4. சித்ரா,

  உங்கள் duckமென்டரி ஸுப்பர்.
  உங்கள் மகளின் காட்டின் உழைப்பிற்கு "Hats Off".
  என்னுடைய வாழ்த்துக்களும், ஆசிகளும் பலப்பல.
  வாழ்தக்க்கள்.

  ReplyDelete
  Replies
  1. ராஜலஷ்மி,

   வாழ்த்துக்களுக்கும்,ஆசிகளுக்கும் நன்றிங்க.

   Delete
 5. Replies
  1. வருகைக்கு நன்றி மகி.

   Delete