Sunday, March 10, 2013

தேன்சிட்டு / Humming bird


சனி & ஞாயிறு 'வாக்' போவதென்றால் எனக்கு ஜாலியோ ஜாலிதான். அப்படித்தான் இன்றும் மாலை 4:00 மணிக்கு வீட்டைவிட்டு வெளியில் வந்தால் அப்பார்ட்மெண்டின் கம்பி வேலியில் அழகான தேன்சிட்டு ஒன்று அமைதியாக உட்கார்ந்திருந்தது.இதுவரை அது உட்கார்ந்து நான் பார்த்ததில்லை.

எத்தனையோ முறை முயற்சித்தும் காமிராவுக்குள் சிக்க வைக்க முடியவில்லை.இன்று வசமாக மாட்டிக்கொண்டது.பலமுறை க்ளிக்கியும் அசையாமல், போஸ் கொடுத்துக்கொண்டு அமர்ந்திருந்தது.
 கம்பியில் மாட்டிக்கொண்டதோ என ஒரு கட்டத்தில் கொஞ்சம் பயம் வந்தது.

அவ்வாறு நினைத்த மறு நொடியில் அந்த அழகான இடத்தை, வெற்றிடமாக்கிவிட்டு அது பறந்துபோய்விட்டது.அதற்குமேல் நானும் அங்கு நிற்கப் பிடிக்காமல் இடத்தை காலி செய்துவிட்டு நகர்ந்தேன்.

8 comments:

  1. சித்ரா,

    இந்தத் தேன்சிட்டுப் பறவை ஏதோ நீங்கள் போஸ் கொடுக்க சொன்னது போல் இப்படி அப்படி என்று அழகாக போஸ் கொடுக்கிறதே.
    இயற்கையில் எல்லாமே அழகு தான்.

    கண்ணிற்கு விருந்தானது தேன் சிட்டுப் பதிவு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தேன்சிட்டு எங்க வீட்டுக்கும் வரும்,ஆனால் வீடியோகூட எடுக்க முடியாது. இன்று எனக்குமே ஆச்சரியம்,எப்படி இவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தது என்று!

      ஆமாம்,நீங்க சொல்வதுபோல் அழகில் இயற்கையுடன் போட்டி போட முடியாதுதான்.

      வருகைக்கு நன்றிங்க.

      Delete
  2. சித்ராக்கா, நீங்க சொன்ன பிறகுதான் பார்த்தேன், நாயகன் படப்பாடலில் கமல் குரல் ஒலிப்பதை! :) எல்லாமே இளையராஜா குரலில் ஒலிக்கும் பாடல்கள் என்பதுதான் நான் நினைச்சது, இப்ப பாருங்க..நீங்க புதுசா ஒரு பாயின்ட் புடிச்சிட்டீங்க. ;) இன்னும் யாராவது வேறெதாவது கண்டுபிடிப்பாங்களா என பார்க்கலாம்! :))))

    ReplyDelete
    Replies
    1. மஹி,வீட்டில் அடிக்கடி விளையாடும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று.அதனால் நீங்க எந்தக் குரலைக்(குறளை)கேட்டாலும் சொல்லிவிடுவேன்.கேள்வியைப் பார்த்ததும் சின்ன பிள்ளைங்க மாதிரி அடித்துப் பிடித்து பதில் சொல்லியது இன்னும் ஜாலியா இருந்துச்சு.

      Delete