Monday, May 13, 2013

புத்தம்புது காலை...

இன்று மகளின் பயாலஜி எக்ஸாமுக்காக (காலை 7:15) பக்கத்தில் உள்ள எக்ஸாம் ஸெண்டருக்கு நடந்தே போகலாம் என வீட்டைவிட்டு இருவரும் வெளியில் வந்தால் (காலை 6:45) ஒரு ஜோடி வாத்து வந்து உட்கார்ந்திருக்கவும் 'க்ளிக்'கினேன்.
 என்னதான் சுத்திசுத்தி வந்து 'க்ளிக்'கினாலும் அசைந்து கொடுக்கவில்லை.
மகள் 'அம்ம்ம்மா,அவங்கள தொந்தரவு செய்யாதமா',என சொல்லிக்கொண்டே முன்னால் போகவும் வந்து பார்த்துக்கொள்ளலாம் என போய்விட்டேன்.

போய்ட்டு திரும்பி வரும்போது பார்த்தால் ஒருவர் மட்டும் எழுந்து மெதுவாக‌ நடக்க ஆரம்பித்திருந்தார்.


10 comments:

  1. அழகு...

    நல்ல தூக்கம் போல...!

    ReplyDelete
    Replies
    1. விட்டுப்போன ஒரு படத்தை இணைப்பதற்குள் பின்னூட்டமா!!

      வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.

      Delete
  2. வசந்தத்தை அனுபவிக்கும் வாத்துக்கள்.
    பார்க்க பொறாமையாக இருக்கிறது.(நம்மால் இப்படி இருக்க முடியவில்லையே என்று தான் )

    ReplyDelete
    Replies
    1. இயற்கையை பார்ப்பதே ஒரு அழகுதான் இல்லீங்களா!!

      வருடம் முழுவதும் வேலை இருந்துகொண்டேதான் இருக்கும்.முதலில் டிக்கட் புக் பண்ணிட்டு ஒரு பத்து நாளைக்கு வெளியில் (ஊட்டி, கொடைக்கானல் மாதிரி) போய்ட்டு ஒரு புத்துணர்ச்சியுடன் வாங்க!

      Delete
  3. புத்தம்புது காலை... என்ற தலைப்பை பார்த்ததும் உடனே ஓடியாந்தேன்! :) அழகான படங்கள் சித்ராக்கா! வாத்து ரெம்ப ஸ்ட்ராங்கா செட்டில் ஆகியிருக்கு போல! ரெஸ்ட் எடுக்கட்டும். பொண்ணு பயாலஜி எக்ஸாம் நல்லபடியா முடிச்சிருப்பாங்க என நினைக்கிறேன்! அதுவும் அவங்க ஃபேவரிட் சப்ஜக்ட் இல்லையா..சொல்லவா வேணும்? :)

    அப்புறம், புத்தம்புது காலை, பொன்னிற வேளை- பாடலை உங்க தலைப்பு நினைவு படுத்தியதால அப்படியே யுட்யூப் போனனா...அடடா!! எத்தனை நல்ல நல்ல பாடல்கள், "புத்தம்புது" என்ற வார்த்தையில் ஆரம்பிகின்றன?! எல்லாம் கேட்டாச்! தேங்க்யூ! :)

    ReplyDelete
    Replies
    1. வாத்து இரண்டும் வெயில் வந்த‌போது பறந்து போய்டுச்சி.

      ம்ம்,பயாலஜி நல்லா எழுதினாளாம்.விசாரிப்புக்கு நன்றி மகி.இந்தப் பாடம்தான் என்றில்லை,பிடித்த பாடம் தினமும் மாறிக்கொண்டே இருக்கும்.

      புத்தம்புது காலை...______முன்பெல்லாம் இலங்கை வானொலியில் காலையில் ஒளிபரப்பும் பாடல்களில் இதுவும் ஒன்று.அதை நினைத்துக்கொண்டேதான் எழுதினேன். வருகைக்கு நன்றி மகி.

      Delete
  4. எங்கூர்ல ஹீட்வேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! வெயில் தாங்க முடியாத அளவுக்கு அடிச்சுத் தாக்குது! நீங்கள்லாம் தப்பிச்சிட்டீங்க...என்ஸொய்!

    ReplyDelete
    Replies
    1. மதியத்துக்கு மேல இங்கும் நல்ல வெயில் மகி.இருந்தாலும் சூப்பரா இருக்கு.

      Delete
  5. வாத்து இரண்டும் ரொம்ப அழகு!
    ராத்திரில ரொம்ப குளிருமோ? அதனால இளம் வெயிலில் குளிர் காயறாங்களோ என்று நினைத்தேன்.
    வரிசையான மஞ்சள் பூக்களும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. ரஞ்ஜனி,

      வாங்க,வாங்க!வின்டரில் இன்னும் மோசமான குளிரையெல்லாம் இவங்க பார்த்திருப்பாங்க.இப்போ குளிரெல்லாம் அந்தளவுக்கு இல்லை.பறந்து போகும்போது கொஞ்சம் இளைப்பாற இறங்கியிருக்கலாம்.

      காலையில் பார்க்கும்போது இந்த மஞ்சள் சாமந்தி கொள்ளை அழகாக இருந்தது. அப்படியே அதையும் 'க்ளிக்'கியாச்சு.

      Delete