Tuesday, June 25, 2013

வாங்க, மீண்டும் ஊர் சுற்றுவோம் !!



ஒரு சனிக்கிழமை  இங்குள்ள‌ ஒரு கல்லூரிக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு வாய்ப்பு எப்படி கிடைத்திருக்கும் என உங்களுக்கே தெரியும். இப்படியெல்லாம் போனால்தான் உண்டு.

மகளுக்கு தேர்வு மையம் கொஞ்சம் தொலைவிலுள்ள ஒரு கல்லூரியில் போட்டிருந்தனர். ஏறக்குறைய 40 நிமிடம் ஃப்ரீவேயில் போக வேண்டும்.

கல்லூரி, அதுவும் மலைப்பகுதியில் இருக்கிறது என்பதால் நானும் அவர்களுடன் தொற்றிக் கொண்டேன்.

காலை 10:00 மணி தேர்வுக்கு நாங்கள் முதல் ஆளாக 8:15 க்கே போயாச்சு. மீதமுள்ள நேரத்தை எப்படி கழிப்பது? கல்லூரி முழுவதையும் சுத்தோ சுத்துன்னு ஜாலியாக சுத்தினோம்.

கீழே படத்திலிருப்பது மேலேயுள்ள கட்டிடம்தான், கொஞ்சம் அருகில் சென்று பார்த்தபோது..



கல்லூரி ஒரு மலைப்பகுதியில் இருந்தது. சமீபத்தில் கட்டியதுபோல‌. எல்லா கட்டிடங்களும் புதிதாக இருந்தன. மலைப்பகுதி என்பதால் ஒவ்வொரு கட்டிடத்தையும் ஒவ்வொரு இடத்தில் மேலேயும் கீழேயுமாக கட்டியிருந்தது அழகாக இருந்தது.

சுற்றிலும் எங்கு பார்த்தாலும் கொள்ளை அழகாக இருந்தது. பசுமையான மலைகள், பார்க்க ரம்மியமாய் இருந்தது.


 தொலைவில் அமைதியும், ஆழமும் நிறைந்த‌ பசிபிக் பெருங்கடல்!


 வாங்க, அப்படியே உள்ளே இங்குமங்கும் நடந்து போகலாம்.


அதோ தொலைவில் உள்ள fountain / ஃபவுன்டெயினை.......


......அருகில் சென்று பார்ப்போமே! வெயிலுக்கு இதமாக இருக்கும்.


அதோ கூடாரங்களாகத் தெரிகிறதே, அங்கு நீச்சல் சம்பந்தமான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.


ஒருமணி நேரத்திற்கும் மேலாக சுற்றிவிட்டு சரியாக‌ 9:30 மணிக்கு  தேர்வறைக்கு வந்து சேர்ந்தோம். 9:45 மணிக்கு தேர்வு கண்காணிப்பாளர் வந்து பிள்ளைகளை கைப்பேசியை ஆஃப் செய்யச்சொல்லி சிறிது நேரமும் கொடுத்து எல்லோரையும் உள்ளே அனுப்பினார்.

சரியாக உள்ளே நுழையும்போது ஒரு பையனின் செல்ஃபோன் முழு சத்தத்துடன் சிணுங்கியது. கண்காணிப்பாளரும் சிரித்துக்கொண்டே அதை ஆஃப் செய்யும்வரை காத்திருந்து உள்ளே அனுப்பினார்.

இதுவே எங்கள் ஊராக இருந்திருந்தால்...  அந்த நாட்களை மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டேன். தெரியவில்லை, ஒருவேளை இப்போது மாறியிருக்கலாம்!

பிள்ளைகள் எல்லோரும் உள்ளே சென்று கண்காணிப்பாளர் கதவை மூடும்வரை அங்கேயே நின்றிருந்துவிட்டு காருக்கு வந்தோம். மதியம் 1:00 மணிக்கு மேல்தான் தேர்வு முடியும். இவ்வளவு நேரமும் எப்படி, எங்கே இருப்பது?

அதையும்கூட சரியாக சொல்ல முடியாது. தேர்வறையில் தாமதமாக வந்து சேர்பவர்களும் வந்த பிறகுதான் தேர்வையே ஆரம்பிக்கின்றனர். அதனால் ஆரம்பிக்கும் நேரமும் முடியும் நேரமும் மாறுவது இயல்பாகிவிடுகிறது. பிள்ளைகள் டென்ஷன் இல்லாமல் எழுத வேண்டும், அவ்வளவே.

ஏற்கனவே வெதர் ரிப்போர்டில் வெள்ளி & சனி அதிகபட்சமான வெயில் என்று சொல்லியிருந்தனர். வந்திருந்த பெற்றோர்களில் சிலர் காரில் ஏஸி யைப் போட்டுக்கொண்டு கம்ப்யூட்டருடன் பேசிக்கொண்டிருந்தனர். சிலர் கார் / வேனின் கதவுகளைத் திறந்துவிட்டு படுத்துவிட்டனர். சிலர் கட்டிடத்தின் உள்ளே போய் ஏஸி யில் அமர்ந்துவிட்டனர்.

இவரைப் பார்த்தால் எதையோ யோசிப்பது போலவே தெரிந்தது. என்ன யோசித்திருப்பார்! மேலே சொல்லியுள்ள மூன்றுவிதமான பொழுதைப் போக்குவதில் எதைத் தெரிவு செய்வது என்பதாகத்தான் இருந்திருக்கும்.

இந்த வெயிலில் வீட்டுக்கு போய் திரும்பி வருவதெல்லாம் முடியாத காரியம். மீதமுள்ள நேரத்தை எப்படி ஓட்டினோம் என்று அடுத்த பதிவில் பார்ப்போமே!
                                                                                                                            (தொடரும்)
                                                                                                                                  

ம்..ம்..இந்தப் பழம் இங்கே எப்படி வந்தது !!!!

வெயிலைப் பொருட்படுத்தாமல் இவ்வளவு நேரமும் கூடவே வந்து சுற்றிப் பார்த்த உங்களுக்குத்தான் இந்தப் பழத்தட்டு, எடுத்துக்கோங்க.

வெயிலுக்கு இதமாக இந்த ஏப்ரிகாட் பழங்களை சுவைப்போமே! இது கொஞ்சம் மாங்காய் & பீச் இரண்டின் சுவையிலும் இருக்கும்.        

9 comments:

  1. ஏப்ரிகாட் பழங்களை எடுத்துக் கொள்ளாமல் போய் விட்டேன்... ஹிஹி... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பரவால்ல, ஞாபகமா வந்து எடுத்துட்டு போயிட்டீங்க, இல்லாட்டி இன்னும் கொஞ்ச நேரத்துல காலியாயிட்ருக்கும். மீண்டும் வந்து பின்னூட்டமிட்டு, வாழ்த்தியதற்கு நன்றிங்க.

      Delete
  2. எல்லா இடங்களும் ரொம்பவும் அமைதியாக இயற்கை சூழலுடன் இருக்கின்றன. ஆனால் மனிதர்களையே காணோமே!

    ஏப்ரிகாட் பழம் நன்றாக இருந்தது. மேல் தோல் ஆரஞ்சு சாத்துக்குடி மாதிரி இருக்குமா? அல்லது மாம்பழம் போல இருக்குமா? தோலை சீவி விட்டு சாப்பிடுவதா? (கேள்விமேல கேள்வி)தோலுடனா?

    ReplyDelete
    Replies
    1. அன்று காலேஜ் லீவாயிருக்கணும், ஏன்னா காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் யாரையும் காணோம். நாங்கதான் காலையிலேயே போயிட்டோமே, எங்களை மாதிரி ஒன்றிரண்டு பெற்றோர்தான் அப்போது வந்திருந்தனர். நிறைய பேர் தங்கள் 'பெட்'டுடன் ஜாகிங் போய்க்கொண்டிருந்தனர். அதுவுமில்லாம எதுக்கு வம்புன்னு நான்தான் யாருமில்லாதவாறு எடுத்தேன்.

      ஏ/ஆ ப்ரிகாட் நல்லாருந்துச்சா!! இவங்க ரெண்டு பேருமே சாப்பிட மாட்டாங்க.இது எனக்கு மட்டுமே.ப்ளம்ஸ் மாதிரி அப்படியே சாப்பிட வேண்டியதுதான்,தோலெல்லாம் எடுக்க வேண்டாம். பக்கத்திலே இருந்தால் குட்டிகுட்டியா கட்பண்ணி கொடுத்திடுவேன்.

      இது பெங்களூர்ல கிடைக்க சான்ஸ் இருக்கும்னு நினைக்கிறேன். எதற்கும் ட்ரை ஃப்ரூட்ஸ் கிடைக்குமான்னு கேட்டுப்பாருங்க.

      Delete
    2. ரஞ்சனி சொல்வது போல் இங்கு எல்லா இடமும் அழகாக சுத்தமாக இருக்கும். ஆனால் மனிதர்களை காண்பது அரிதாகத் தான் இருக்கிறது.இந்த காலேஜே நம்மஊரில் இருந்திருந்தால் எப்படி ஜனரஞ்சகமாக இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன்.
      உங்கள் ஏப்ரிகாட் பழம் சுவைத்துப் பார்க்க வேண்டும் சித்ரா....

      Delete
    3. நீங்க சொல்வதும் சரிதான்,இங்கு மக்கள் நெருக்கம் குறைவுதான். அதுவுமில்லாம ஃபோட்டோ எடுக்கும்போது யாரும் இல்லாதவாறு பார்த்துக்கொள்வேன். அப்படியும் வந்திட்டாங்கன்னா ஃபோட்டோவை இங்கு போடமாட்டேன்.

      இந்தப் பழம் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.வாங்கி சாப்பிட்டுப் பாருங்க.பக்கத்தில் ஃபார்மர்ஸ் மார்க்கெட் இருந்தால் போய்ட்டு வாங்க. உள்ளூர் பகுதியில் விளையும் காய்கள்,பழங்கள் எல்லாம் வரும்.ஊருக்குப் போவதற்குள் இந்த ஊர் உணவை பிடிக்காட்டியும் விட்டேனா பார்னு ஒருகை பார்த்திடுங்க. இங்கிருக்கும்வரை நல்லா எஞ்ஜாய் பண்ணுங்க!! எங்க பண்றதுங்கறீங்களா, அதுவும் சரிதான், ஹா ஹா!!

      (இந்த பின்னூட்டத்திற்கு நேற்றே பதில் போட்டேன், இப்போ பார்த்தால் காணோம், ம்,ம் எங்க போச்சுன்னே தெரியல!)

      Delete
  3. நீங்க எந்தக் காலேஜுக்குப் போனீங்க என நீங்க குடுத்திருந்த க்ளூஸ்-ஐ வைச்சு கண்டுபுடிச்சிட்டேன்! சிஎஸ்எம்- எழுதிய தேர்வில் உங்கள் மகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
    Replies
    1. "கண்டுபுடிச்சிட்டேன்"_____அவ்வ்வ்...'சண்டே'வை இப்படியெல்லாமா வீணாக்குவாங்க‌.

      ஆனாலும் இது நல்லாருக்கு.பேசாம 'ப்ளாக்'ல இதுமாதிரி ஏதாவது பண்ணலாம். வாழ்த்துகளுக்கு நன்றி மகி.

      Delete