சனி, 15 ஜூன், 2013

கொன்றை மலர்கள்எங்கள் ஊரில் எங்கு பார்த்தாலும் கொன்றை மரங்கள் இருக்கும். 'கொண்ட மரம்'னு பேச்சு வழக்கில் சொல்லுவோம். 'தூங்குமூஞ்சி மரம்'னும் சொல்லுவோம்.அந்த மரத்தின் பூக்கள் படத்திலுள்ள பூக்கள் மாதிரியே, மாதிரியென்ன! இந்தப் பூக்களேதான்,  கொள்ளை அழகாகப் பூத்திருக்கும்.


பள்ளிக்கு போகும்போதும், வரும்போதும் கீழே விழுந்து கிடக்கும் இந்தப் பூக்களைப் பொறுக்கி, எடுத்து வந்து விளையாடுவது வழக்கம். ராஜாராணி விளையாட்டில் சாமரம் இந்தப் பூக்கள்தான்.  கொத்தாக வைத்து மேலே தடவினால் மென்மையாக இருக்கும்.


இங்குள்ள மரமும் அங்குள்ள மரமும் பார்ப்பதற்கு வேறுவேறாய் உள்ளன..எப்படின்னு தெரியல! படத்திலுள்ள கீரை மாதிரியான இலைகளுக்கு பதிலாக பட்டைபட்டையாக இலைகள் இருக்கும். மரமும் பெரிய பெரிய மரங்களாக இருக்கும்.நல்ல நிழல் கொடுக்கும். இங்குள்ளவை குட்டிகுட்டி மரங்களாக வளார்ந்துள்ளன.


ஆக மொத்தத்தில் இங்குள்ள‌வையும் அழகுதான், அங்குள்ளவையும் அழகுதான். ஒரேயொரு வித்தியாசம்தான். அங்குள்ளவை தானாக வளர்ந்திருக்கும். இங்குள்ளவற்றிற்கு போதுமான தண்ணீர் பாய்ச்சி, தேவையான மர,இலை உரம் இட்டு, சமயங்களில் ட்ரிம் பண்ணி அழகாக வளர்க்கின்றனர்.


வழக்கமான புகைப்பட சேமிப்புக்காக...

6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வாங்க தனபாலன்,

   இந்த ஊர் மரங்களில் நம்ம ஊர் பூக்கள்,அழகாகத்தான் உள்ளன.வருகைக்கு நன்றிங்க.

   நீக்கு
 2. நாங்க இதனை தூங்குமூஞ்சி மரம் என்றுதான் சொல்லுவோம். பூவில் பிங்க் நிறம், வெள்ளை நிறம் கூட இருக்கும்..நல்ல மணமா இருக்கும். இங்கேயும் பார்க்க முடிவதில் மகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க ஊரிலும் இது தூங்குமூஞ்சி மரம்தானா! ஒரே பூவில் அதிகமாக பிங்க்கும்,வெள்ளை, சந்தன நிறங்கள் கொஞ்சம்போல கலந்திருக்கும்.முழு வெள்ளைநிறப் பூவைப் பார்த்தது கிடையாது. இங்கே எல்லா இடங்களிலும் இப்போது இதுதான் பூத்திருக்கிறது.

   நீக்கு
 3. அழகழகான படங்கள்.
  எங்கிருந்தாலும் பூக்கள் அழகுதான், இல்லையா?
  எங்க ஊரில் உங்க பூக்கள் பூத்தாலும், உங்கள் ஊரில் எங்க பூக்கள் பூத்தாலும் அழகு அழகுதான்!
  வெளிநாட்டில் நம் பூக்களைப் பார்த்தால் ஊரு நினைவு வரும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ம ஊர் பூக்களேதான்,ஆனால் வேறொரு மரத்தில் பூத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் அவற்றை இங்கேயும் பார்க்க முடிகிறது எனும்போது ஒரு மகிழ்ச்சி + ஊர் நினைவு.

   நீக்கு