வியாழன், 6 ஜூன், 2013

மல(ர்)ரும் நினைவுகள்!!

இங்குள்ள எல்லா படங்களுமே சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு எடுத்தவை.

மேலே உள்ள படம் குட்டிப் பெண்ணாக இருந்தபோது மகள் எடுத்தது.அப்பா பூக்களை எல்லாம் விதவிதமாக 'க்ளிக்'கவும் அவளும் தன் பங்கிற்கு அவளுக்குப் பிடித்தமான பார்பியைக் கொண்டுவந்து ஒரு பூவின் பக்கத்தில் வைத்து எடுத்துக்கொண்டாள்.

அதுவரை single-use camera வையே வைத்திருந்த நாங்கள் முதன்முதலாக Fry's போய்ட்டு வீடியோ காமிரா வாங்கிக்கொண்டு வரும் வழியில் Home depot போய்ட்டு சில பூந்தொட்டிகளுடன் வீட்டிற்கு வந்தோம்.

வீட்டிற்கு வந்ததும் இவர் பூந்தொட்டியிலுள்ள பூக்களை எல்லாம் புது காமிராவில் படங்களாக‌ எடுத்துத் தள்ளினார்.அவற்றில் சில படங்கள் இங்கே!

 
ஒருமுறை பூந்தொட்டிகளை எல்லாம் பேடியோவின் மேல் வரிசையாக அடுக்கி வைத்திருந்தோம். அடுத்த நாளே அபார்ட்மென்டிலிருந்து அவைகளை அகற்றும்படி நோட்டீஸ் வந்துவிட்டது. வேறு வழி இல்லாமல் பேடியோவின் உள்ளேயே வைத்துவிட்டோம்.

நானும் என் பங்கிற்கு மிளகாய்,தக்காளி,புதினா,கொத்துமல்லி எல்லாம் வைத்திருந்தேன்.நிறைய படங்கள் யூஸ் அன்ட் த்ரோ காமிராவில் எடுத்ததால் அவற்றை இங்கே போட முடியவில்லை.

மேலே பதிவிலுள்ள படங்களில் ஒன்றுகூட நான் எடுத்ததில்லை.நான் எடுத்தாலும் நன்றாக வராது.அதனால் அந்தப் பக்கமே போக மாட்டேன்.

சமையல் ப்ளாக் எழுத ஆரம்பித்த பிறகுதான் விருப்பமுடன் படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.


பெரிய பேடியோ இருக்கு.ஆனாலும் அடிக்கடி வீடு மாறுவ‌தால் புதினா, மணத்தக்காளி (அப்படின்னு நான் நெனச்சிட்டிருக்கேன்) தவிர இப்போதைக்கு வேறெதுவும் இல்லை.

8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. பாராட்டுக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.

   நீக்கு
 2. 10 years? Wow! Kudos for keeping it safe n sharing it Chitra Akka! Beautiful flowers! Morning thookam varaama seekkiramaa ezhunthen, appuramaa tamil-la varen! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவற்றைத் தேடி எடுத்ததும் நினைவுகள் பின்னோக்கி போய் இவ்வளவு வருடங்கள் எவ்வளவு சீக்கிரம் ஓடிப் போச்சுன்னு நானும் வியந்தேன்.நன்றி மகி.

   நீக்கு
 3. கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து இந்தப் பூக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 10 வருடங்களுக்கு முந்தைய படங்கள் எனும்போது இன்னும் அழகாகவே தோன்றுகிறது.கருத்துக்கு நன்றிங்க.

   நீக்கு
 4. அன்பின் சித்ரா சுந்தர் - படங்கள் அனைத்தும் கண்ணையும் கருத்தினையும் கவர்கின்றன. அருமை அருமை - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

   நீக்கு