Tuesday, July 30, 2013

ஆதரவுக்கரம் !!

நீங்க

கவலையேபடாதீங்க,

உங்களுக்கு

உதவ, ( ஹி ஹி...போஸ் கொடுக்கத்தான்  )

நாங்கள்

இருக்கிறோம் !!


ஒரு உயரமான டவரை புகைப்படம் எடுக்க முனைந்தபோது, இரண்டு குட்டீஸ் வந்து, தங்களை ஒரு ஸ்டில் எடுக்குமாறும், "கண்டிப்பாக நீங்க இதை ஃபேஸ்புக்கில் போடுவீங்க‌, என்னக்காச்சும் அதை நாங்க பார்த்துக்கொள்ளுகிறோம்", என்றும் கூறி, கொடுத்த போஸ்தான் இது.

எப்படியெல்லாம் வலிய வந்து மாட்றாங்க பாருங்க !

ஃபேஸ்புக்கில் ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணலாமா என யோசிக்க வைத்துவிட்டனர்.

Sunday, July 28, 2013

ஆரஞ்சு & சிவப்பு நிற லில்லி மலர்கள் / Orange & Red Daylilies

நாங்கள் இருந்த ஊரில் வியாழ‌க்கிழமை (07/25/2013) நல்ல வெயில், அடுத்த நாளை (வெள்ளி 07/26 2013) இந்த வெயிலில் எப்படி ஓட்டுவது என நினைத்தால், காலையிலேயே பலமான‌ தூறல் !

எங்களுக்குத்தான் நனையப் பிடிக்கும் என்று நினைத்தால், இந்த ஆரஞ்சு நிற லில்லி மலர்களும்,   எங்களைப் பார்த்து 'ஹி ஹி' என்று சிரிப்பது போலவே இருந்தது.


மாலையில் பார்த்தால் (கீழேயுள்ளவை) மழை பெய்த சுவடே இல்லாமல் ஒன்றிரண்டு மழைத்துளிகளுடன் சிரித்துக்கொண்டிருந்த சிவப்பு லில்லியின் மொட்டும்,


 அதன் மலரும்.

Saturday, July 27, 2013

குடை

நாங்கள் 


 மலர்வது,


மழைக்கு மட்டுமல்ல,


நல்ல வெயிலுக்கும் கூடத்தான் !!


Monday, July 22, 2013

Friday, July 19, 2013

கோடை மழை(துளி)


இது இல்லாமல்....... கோடை நிறைவடையுமா சொல்லுங்க‌ !!

இந்த வருடம் கோடை ஆரம்பித்த இரண்டாவது நாளே மேகமூட்டம், அடுத்த‌ நாளே மழை....ஆஹா என்றிருந்தது.

சாதாரண மழை நாட்களிலேயே மழையை விட்டு வைக்க மாட்டேன்.
கோடையில் மழை!, அடுத்தாற்போல் பிசுபிசுக்கும் தூறல் என்றால் சொல்லவா வேண்டும்!

அப்போது எடுத்த கோடை மழைத்துளிதான் இது!



வீட்டு வாசலில், மழையில் குளித்து முடித்து துவட்டிக்கொள்ள அடம்பிடித்த‌ பூக்கள் !!


Wednesday, July 17, 2013

தும்பி / Dragonfly


ஹலோ, பிடிக்க மாட்டேன்னு சொன்னது கையாலதான், காமிராவில் பிடிக்க மாட்டேன்னு சொல்லலையே !!


அட, இது தெரியாமத்தானே வந்து மாட்டிக்கிட்டேன் !!


 சின்ன வயசுல எங்களுக்கு இதுதான் காற்றாடி விமானம் (helicopter).


எல்லா பிள்ளைகளையும்போல எனக்கும் சின்ன வயசுல பட்டாம்பூச்சி , தும்பி இவற்றைப் பிடிக்க (விளையாட, துன்புறுத்த அல்ல) ஆசை. இவற்றின் இறக்கைகளின் மேல் அவ்வளவு விருப்பம். ஆனால் பார்த்து ரசிப்பதோடு சரி, பிடிக்க மாட்டேன்.

பிடிக்காமல் இருந்தது ஏதோ தும்பிக்கும், பட்டாம்பூச்சிக்கும் வலிக்கும் என்பதால் அல்ல, புழு மாதிரியான‌ அவற்றின் உடல் பகுதியைப் பார்த்த பயத்தினால்தான். இன்றும்கூட‌ அப்படியேதான்...

Monday, July 15, 2013

அரளிப் பூ / பட்டிப் பூ


வெள்ளை அரளி...


பிங்க் அரளி...


லைட் பிங்க் அரளி...


செவ்வரளி (அ) சிவப்பரளி


கோடையைக் குளிர்விக்கும் விதமாக கண்ணைப் பறிக்கும் பல நிறங்களில், இந்த அரளிப் பூக்கள் இப்போது எங்கும் பூத்துக் குலுங்குகின்றன.

சுவாமிக்கான மாலையில் இந்தப் பூவையும் சேர்த்துவைத்துக் கட்டுவார்கள்.

எங்கள் ஊர் பக்கம் இதை அரளிப் பூ என்றும் பட்டிப் பூ என்றும் சொல்லுவோம். வாசனை இருக்காது. தனி பூவாக‌ தலையில் வைத்துக் கொள்ளமாட்டோம். ஆனால் கதம்பத்தில் வைத்துக்கட்டி விற்கப்படும்போது வாங்கி வைத்துக் கொள்வோம். (இதென்ன லாஜிக்?)

                                   <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

இன்றைக்கு ( 11/16/2013) ......

பூக்களின் எண்ணிக்கை குறைந்து காய்கள் அதிகமாகிவிட்டது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

இன்று (01/31/2014) பார்த்தால்....... செடியில் உள்ள காய்கள் எல்லாம் முற்றிக் காய்ந்து, வெடித்து, உள்ளேயுள்ள விதைகள் எல்லாம் பாராசூட் மாதிரி எங்கும் பறந்துகொண்டிருக்கிறது.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

04 / 20 / 14

கடந்த ஒரு வாரமாகவே இங்கே அரளிச் செடியில் மொட்டுகள் வர ஆரம்பித்துவிட்டன.

இன்று இதேபோல் செடி முழுவதும் கொத்துகொத்தாக, கொள்ளை அழகாக‌ பூக்கள் பூக்க ஆரம்பித்துவிட்டன.

Friday, July 12, 2013

Flea Market



Flea Market என்றதும் பயந்துறாதீங்கோ!  பாவித்த பொருட்கள் விற்பனை செய்யப்படும் சந்தை. சொல்லப்போனால் மீள்சுழற்சி (Recycle) மாதிரிதான்.

திறந்த வெளியில் எண்ணிலடங்கா கடைகள் இருப்பதாலும், பொருள்களின் விலை குறைவாக இருப்பதாலும், அதனால் மக்கள் கூட்டம் அலைமோதுவதாலும்கூட‌ இந்தப் பெயர் வந்திருக்கலாமோ என்னவோ!

மின்னொளியும், AC யும் உள்ள கடைகளையேப் பார்த்துப்பார்த்து சலிப்படைந்தவர்களுக்கு இங்கு போவது ஒரு ஆறுதல்.

இந்தக் கடைகளில் பயன்படுத்திய பொருள்களும், புதிய பொருள்களும்கூட‌ விற்பனை செய்கிறார்கள். நாம் நினைத்தே பார்த்திராத பொருள்களை எல்லாம் இங்குள்ள கடைகளில் பார்க்கலாம். மொத்தத்தில் இங்கு இல்லாத பொருள்களே இல்லை எனலாம்.

பழைய பொருள்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உகந்த இடம் இது. சிலர் சில பொருள்களை வாங்கி வைத்துக்கொண்டு கடைகளைச் சுற்றி வரும்போது இதையெல்லாம்  எப்படி யோசித்து வாங்குகிறார்கள் என ஆச்சரியமாக இருக்கும்.

மேலும் பொருளை bargain / பேரம்பேசியும் வாங்கலாம் என்று சொல்கிறார்கள். பொருள்க‌ளின் உண்மையான விலை தெரிந்தால்தானே பேரம்பேசி  வாங்குவதற்கு!

நான் போவது ஜாலியா வேடிக்கை பார்க்க மட்டுமே. வீட்டிலிருந்து கிளம்பும்போதே எந்தப் பொருளும் வாங்கக்கூடாது என்ற கொள்கை கோட்பாடுகளுடன்தான் போவேன். என்னை மாதிரியான ஆட்கள் இருந்தால் பொருளாதாரம் எங்கே முன்னேறும்?

பசிக்கு சாப்பாட்டுக் கடைகளும், தாகத்திற்கு தண்ணீர் விற்பனையும் உண்டு. சில ஊர்களில் உள்ள Flea மார்க்கெட்டுகளில் பொழுதுபோக்கு வசதிகளும் உள்ளன.

காலை நேரத்தைவிட நண்பகலுக்குமேல் பொருள்களின் விலையில் கொஞ்சம் குறைத்து தருவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

இத்தனைக் கடைகளையும் சுற்றிப் பார்ப்பதற்குள் சோர்ந்துவிடுவோம். அதனால் இங்கு வருவதென்றால் வேறு வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு மட்டுமே வருவது நல்லது.

ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை நாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள‌ ஒரு கல்லூரியின் மிகப் பெரிய பார்க்கிங் லாட்டில் இந்தக் கடைகள் திறக்கப்படுகின்றன. காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கடைகள் இருக்கும்.

இங்கு 825 கடைகளும், தட்பவெப்ப நிலை கைகொடுத்தால் 15,000 லிருந்து 20,000 வாடிக்கையாளர்கள் வருவதாகவும் சொல்லப்படுகிறது.

நம்மைச் சுற்றியுள்ள பகுதியில் இதுமாதிரியான கடைகள் இருந்தால் ஒருதடவை போய் பார்த்துவிட்டு வருவோமே!

இந்த சந்தையில் உள்ள ஒருசில கடைகள் மட்டும் கீழேயுள்ள படங்களில் உள்ளன.


Friday, July 5, 2013

Calla lily


அழகான இந்த வெள்ளைப் பூவிற்கு ஆப்பிரிக்கா தாயகமாம். அங்கு Varkoor என்ற பெயரில் அழைக்கப்படுகிற‌தாம். பன்றியின் காதுபோல் இருப்பதால் இந்தப் பெயராம்.

ஐ! ஆப்பிரிக்க மொழியில் இரண்டு வார்த்தைகள் தெரிந்துவிட்டது. Vark  என்றால் அம்மொழியில் பன்றியாம், அப்படின்னா Oor என்பது காதாகத்தான் இருக்க வேண்டும்!

இந்த பூச்செடி எங்கள் வீட்டிற்கு எதிரில் உள்ளது. நல்ல பச்சை நிறப் பிண்ணனியில் வெள்ளை நிறப் பூக்கள் கொள்ளை அழகு!

சென்ற மாதம்வரை நிறைய பூக்களுடன் இச்செடி மிகமிக அழகாக இருந்தது. இப்போது செடி முழுவதும் வதங்கி, துவண்டு, தரையோடு தரையாகக் காய்ந்துபோய் காட்சியளிக்கிறது.

காய்ந்துதான் போய்விட்டதே, பிடுங்கிவிடுவார்களோ என்ற கவலை இல்லை. இன்னும் கொஞ்ச நாட்களில் வழக்கம்போல் அதே இடத்தில் புது செடி நன்கு துளிர்த்து, வளர ஆரம்பித்துவிடும். அதுவரை 'ப்ளாக்'கில் பார்த்துக் கொள்வோமே!!

இந்தச் செடியின் இன்றைய (08/12/13) நிலை.......


மீண்டும் துளிர்விட்டு பசுமையாக வளர ஆரம்பித்துவிட்டது. பார்க்கவே அழகா இருக்கில்ல !!!