புதன், 17 ஜூலை, 2013

தும்பி / Dragonfly


ஹலோ, பிடிக்க மாட்டேன்னு சொன்னது கையாலதான், காமிராவில் பிடிக்க மாட்டேன்னு சொல்லலையே !!


அட, இது தெரியாமத்தானே வந்து மாட்டிக்கிட்டேன் !!


 சின்ன வயசுல எங்களுக்கு இதுதான் காற்றாடி விமானம் (helicopter).


எல்லா பிள்ளைகளையும்போல எனக்கும் சின்ன வயசுல பட்டாம்பூச்சி , தும்பி இவற்றைப் பிடிக்க (விளையாட, துன்புறுத்த அல்ல) ஆசை. இவற்றின் இறக்கைகளின் மேல் அவ்வளவு விருப்பம். ஆனால் பார்த்து ரசிப்பதோடு சரி, பிடிக்க மாட்டேன்.

பிடிக்காமல் இருந்தது ஏதோ தும்பிக்கும், பட்டாம்பூச்சிக்கும் வலிக்கும் என்பதால் அல்ல, புழு மாதிரியான‌ அவற்றின் உடல் பகுதியைப் பார்த்த பயத்தினால்தான். இன்றும்கூட‌ அப்படியேதான்...

15 கருத்துகள்:

 1. //பிடிக்காமல் இருந்தது ஏதோ தும்பிக்கும், பட்டாம்பூச்சிக்கும் வலிக்கும் என்பதால் அல்ல, புழு மாதிரியான‌ அவற்றின் உடல் பகுதியைப் பார்த்த பயத்தினால்தான். இன்றும்கூட‌ அப்படியேதான்...// ஹஹஹாஆஆ!! :)

  ஹாய் தும்பி! :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. என்னோட பயம் உங்களுக்கு "ஹஹஹாஆஆ!!" வா?

   "ஹாய் தும்பி! :)))"______இப்படி கொஞ்சம்கூட பயமே இல்லாம 'ஹாய்' சொன்னா எப்படி? என்னை மாதிரி ஒருத்தராவது வருவாங்க பாருங்க.

   நீக்கு
 2. பதில்கள்
  1. என்னை மாதிரியே ஆள் (ராஜலக்ஷ்மி) வந்தாச்சு பாருங்க, இனி கவலையில்லை.

   நீக்கு
 3. தும்பியை நாங்கள் ஹெலிகாப்டர் பூசசி என்றும் சொல்வோம் . பிடித்ததெல்லாம் இல்லை. நீங்கள் சொல்வது போல் ஒரு மாதிரியாக இருக்கும் . இன்றும் கூத ஒரு காத தூராம் ஓடி விடுவேன் சித்ரா. போட்டோக்களுக்கு அழகாய் போஸ் கொடுக்க வைத்து விட்டீர்களே. நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை, நானும் உங்களை மாதிரிதானா!!

   தும்பிக்கு தூக்கமா என்னன்னு தெரியல, ரொம்ப நேரமா எங்க பேட்டியோவில்தான் போஸ் கொடுத்திட்டு இருந்துச்சு. எனக்குதான் பேக்கிரவுண்ட் ப்ளெய்னா வரமாதிரி படம் எடுக்க கொஞசம் சிரமமா இருந்துச்சு. பாவம், எங்க வந்து ரெஸ்ட் எடுக்கனும்னு தெரியாம வந்துடுச்சுபோல.

   நீக்கு
 4. சித்ரா,
  ஒரு சின்ன சந்தேகம் . உங்கள் ப்ளாகில் google connect என்று ஒரு gadget இருக்கிறதே. அதை எப்படி கொண்டு வந்தீர்கள் என்று சொல்ல முடியுமா? என் பேரன் அவனுடைய ப்ளாகில் போட முயற்சி செய்கிறான் முடியவில்லை எங்களுக்கு. உங்களுடைய இந்த ப்ளாகிலும் இப்ப சமீபமாகத் தான் அதை பார்க்கிறேன். அதனால் தான் உங்களுக்கு சிரமம் கொடுக்கிறேன். நேரம் கிடைக்கும் போது சொல்வீர்களா?
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க தளவமைப்பிலுள்ள‌ 'கெஜட்டை சேர்' க்ளிக் பண்ணிட்டு, இப்போ வருகின்ற சிறிய விண்டோவின் இடது ஓரத்தில் உள்ள 'மேலும் கெஜட்டுகள்' க்ளிக் பண்ணிட்டு அப்படியே கீழே வந்தால் 'உள்நுழை'யை க்ளிக் பண்ணி சேர்த்திட வேண்டியதுதான்.இது உதவும்னு நினைக்கிறேன். வருதான்னு பாருங்க.

   இவ்வளவு நாளும் இது கீழே இருந்தது. இப்போ சமீபமாத்தான் மேலே கொண்டுவந்தேன்.

   நீக்கு
  2. சித்ரா
   Arvind (என் பேரன்) என்கிற பெயரில் கமென்ட் எழுதியது நான் தான். அவன் அக்கவுண்டில் இருந்து கருத்து எழுதியது இப்பொழுது தான் புரிந்தது எனக்கு.
   உங்கள் விரிவா பதிலுக்கு மிக்க நன்றி சித்ரா .
   sorry for the confusion.

   நீக்கு
  3. பெயரைப் பார்த்ததுமே தெரிந்துவிட்டது உங்களுடையதுதான் என‌. ஏற்கனவே விசில் பதிவில் உங்க பேரனின் பெயரை எழுதியிருக்கீங்க.

   "உங்களுக்கு சிரமம் கொடுக்கிறேன்"_____சிரமமெல்லாம் ஒன்னுமில்லீங்க. எனக்கு உதவி என்றால் உங்களிடம் கேட்கமாட்டேனா? அதனால் எதுவும் நினைக்க வேண்டாம்.

   நீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. சீக்கிரமா ப்ளாக்ல எப்படி gadgets சேர்க்கிறதுன்னு ஒரு பதிவு போடுங்க. எனக்கும் நீங்கள் தான் google connect போடச் சொல்லித் தந்தீர்கள். சேர்த்துவிட்டேன். என் தளத்தில் பார்த்தீர்களா?

  இப்போது தும்பியைப் பற்றி:
  முழுக்க முழுக்க நகரவாசி. அதனால் இந்த மாதிரி அழகழகான பூச்சிகளைப் பார்த்ததேயில்லை. ஆனால் காய்கறி நறுக்கும்போது வரும் புழுக்களைப் பார்த்தால் முழு காயையே தூக்கிப் போட்டுவிடும் உடலை சிலிர்த்துக் கொள்ளும் தைரியசாலி!

  நீலநிற பின்னணியில் தும்பி மிக அழகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருநாள் பொழுதுபோகலையேன்னு சும்மா சில gadgets ஐ சேர்த்துப் பார்த்தேன். அப்போது வந்ததுதான் இது. உங்க தளத்தில் போய் பார்க்கிறேன்.

   பளபளன்னு, அழகழகாக, எல்லா நிறத்திலும், சின்னதும் பெரியதுமாக நிறைய தும்பி இருக்கும். பார்க்கவே அழகா இருக்கும்.

   இங்கு வந்த பிறகு ஒரு பெரிய்ய்ய்ய பிரச்சினை விட்டதுங்க‌.கத்தரிக்காயை பயமில்லாம,தைரியமா நறுக்கிக்கொண்டிருக்கிறேன்.

   நீக்கு
 7. ஹாய் தும்பி! க்யூ..ட்டா இருக்கிறாரே! எங்கள் வீட்டுப்பக்கம் காணோம். ;( உங்கள் படத்தைப் பார்த்து ஆசையைத் தீர்த்துக் கொள்கிறேன். ;)))

  முன்னால தப்புத்தப்பா டைப் பண்ணி இருந்தேன். அதனால்தான் கருத்துரையை நீக்கி மீண்டும். ;))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவலைய விடுங்க.வசந்தம், கோடை வந்ததும் தலைகாட்ட ஆரம்பிச்சிடுவார்.

   நான்தான் தவறுதலாக நீக்கிட்டேனோன்னு பயந்துட்டேன்.சென்ற பதிவின் பாதிப்பு (பயம்) இன்னும் போகவில்லை.

   நீக்கு