ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

எங்கள் வீட்டுத் தோட்டம் ____ புதினா

எங்கள் வீட்டில் சிறியதும், கொஞ்சம் பெரியதுமான இரண்டு தொட்டிகளில் எப்போதும் புதினா செடி வைத்திருப்பேன். அவை நன்கு செழித்து வளரும்.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பறித்துவிடுவேன். இதைவைத்து துவையல் அல்லது சட்னி செய்தால் யாரும் சாப்பிடமாட்டார்கள் என்பதால், புதினாவுடன்  கொத்துமல்லி தழை சேர்த்து புதினா & கொத்துமல்லி சாதம் செய்துவிடுவேன். இநத சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள்.

படத்திலுள்ள இந்த சிறிய தொட்டியில் ஏற்கனவே புதினா செடி அடர்த்தியாக‌ இருந்தது. அதன் வேர் தொட்டி முழுவதும் பரவிவிட்டதால் தண்ணீர்கூட ஊற்ற முடிவதில்லை.


மகியின் முந்தைய ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்த ஆலோசனையின் பேரில் மண் முழுவதையும் கீழே கொட்டி, வேரை எல்லாம் நீக்கிவிட்டு, அந்த மண்ணையே அரை தொட்டி அளவிற்கு போட்டு, புதினாவின் ஒரு வேரை மட்டும் தொட்டியில் வட்டமாக வைத்து, மேலே சிறிது மண் தூவி, தண்ணீர் தெளித்து விட்டு ஊருக்குப் போய்விட்டேன்.


ஐந்து நாட்கள் கழித்து வந்து பார்த்தால் நான்கைந்து இடங்களில் அழகாகத் துளிர் வந்திருந்தது. என் கண்ணே பட்டுவிடும்போல் இருந்தது.


அது மேலும் வளர்ந்து இப்போது எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள் !

10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. உங்க ஆலோசனையின் பேரில் மாற்றி நட்டதுதான் மகி.

   நீக்கு
  2. ஓ! இப்பிடி எல்லாம் நடந்திருக்கா!

   நீக்கு
  3. நடந்துருச்சே !!

   ( நாங்கூட சுருக்கமா பதில் சொல்லிவிட்டேனே ! )

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

   நீக்கு
 3. உண்மையிலேயே கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது. இன்னும் கொஞ்சநாளில் உங்கள் விருந்துக்கும் பயன்படும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரிய செடிகளைவிடக் குட்டிகுட்டி செடிகள்தான் மனதைக் கவர்கின்றன. "இன்னும் கொஞ்சநாளில் உங்கள் விருந்துக்கும் பயன்படும்!"________ பறிக்க முதலில் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்,பிறகு சரியாகிவிடும்.

   நீக்கு
 4. உங்கள் வலைத்தளத்தை கிளிக் செய்ததுமே ஒரே பொதினா வாசனை.
  ஓ சித்ராவின் பொழுதுபோக்குப் பக்கங்களா ! இல்லை பொதினா பக்கமா! என்பது போல் மனம் வீசியது

  பொதினாவில் சட்னி செய்யலாம்.
  வேறென்ன செய்வீர்கள் ......ரெசிபி போடுங்களேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையிலேயே நல்ல வாசனைதாங்க.புதினா,கொத்துமல்லி,தக்காளி இவற்றின் இலைகளில் ஒன்றைக் கிள்ளி கசக்கி அடிக்கடி முகர்ந்து பார்ப்பேன்.புது இலைகளின் வாசனை நன்றாக இருக்கும்.

   புதினா துவையல் அரைக்கலாம்.புதினா சாதம் கிண்டுவேன்.அந்த ப்ளாக்ல சாதத்துல இருக்கும்னு நினைக்கிறேன்.அங்குபோய் ரொம்ப நாளாச்சு.

   நீக்கு