Sunday, September 8, 2013

விடுபட்ட இடங்களை நிரப்புக :--


போன பதிவுல எல்லோரும் கேள்விமேல கேள்வி கேட்டு என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிட்டீங்க. அதனால உங்களுக்கெல்லாம் ஒரு டெஸ்ட்.

கீழே படத்திலுள்ள விடுபட்ட இடங்களை நிரப்ப வேண்டும்.இதற்கு நிபந்தனைகளும் உண்டு. அதாவது பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டோ அல்லது பார்த்தோ நிரப்பக்கூடாது.


அப்படியே நிரப்புவதற்கும் ஏதாவது க்ளூ (clue or glue எதுவாக இருந்தாலும் பரவாயில்லை) கொடுங்களேன் !!  (நிபந்தனைகளிலிருந்து எனக்கு மட்டும் விதிவிலக்கு)

விடுபட்ட இடங்களை மும்முரமாக நிரப்பிக் கொண்டிருப்பதால் நிரப்பிய படத்துடன் நாளை வருகிறேனே !!

17 comments:

  1. Looks like some kind of stickers! Am I right? :)

    ReplyDelete
    Replies
    1. ஸ்டிக்கர்ஸ்தான் மகி,நிறைய வட்டங்கள் இருப்பதால் என்ன ஸ்டிக்கர்னு ஈஸியா சொல்லிடுவீங்கன்னு நெனச்சேன்.வருகைக்கு நன்றி மகி.

      Delete
  2. போன பதிவில் உங்களை கேள்வி மேல் கேள்வி கேட்டேன் என்பதற்காக இந்தப் பதிவு என்னை சரியாக குழப்பி விடுகிறது. சுத்தமாய் ஒன்றும் தெரியவில்லை.

    உங்கள் விடையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. "இந்தப் பதிவு என்னை சரியாக குழப்பி விடுகிறது. சுத்தமாய் ஒன்றும் தெரியவில்லை." ________ கேக்கவே எவ்ளோ சந்தோஷமா இருக்கு!!இதைத்தான் எதிர்பார்த்தேன்.

      கொழுக்கட்டை,சுண்டல் எல்லாம் காலி பண்ணிட்டு வரேன்.

      Delete
  3. 1. நத்தை இட்ட 4 முட்டையையும் ஒட்டைச்சிவிங்கி ஒண்ணு தின்னுருச்சாம்.
    2. லேட்டா வரேன் இதுக்கு. f. பன்றிக்குட்டி!! ஹாம்ஸ்டர்!!!
    3. ரெட்டை ஜடை குட்டிப் பொண்ணு.. முன்னால இலங்கை வரும் டெல்டா டாஃபி (சுட்டா)சுட்டி போல இருக்கு. இல்ல... நடுவுல முகம் சைட்ல கைகள்.
    4. a. ஆமை!! b. எதுக்கு இப்பிடி செவி இருக்கும்!! சிந்தனை செய் மனமே!! c. __ d. ஹை! கண்டுபிடிச்சேன்... முசலுக்குட்டி.. f. __

    ReplyDelete
    Replies
    1. ஸ்டிக்கர்ஸ் இருக்கும்வரை எனக்கும் ஒன்றும் தெரியவில்லை.எடுத்த பிறகுதான் நானும் உங்களை மாதிரி நிறைய உருவஙளைக் கண்டுபிடித்தேன்.

      :ரெட்டை ஜடை குட்டிப் பொண்ணைத்தான் நான் முதலில் கவனித்தேன்.எனக்கும் ஆமை,முசலுக்குட்டி,ம் ம்..நத்தை,நிறைய முழு ஞாயிறு, நிறைய முழு திங்கள், க்ளௌன் எல்லாம் தெரிந்தன.

      "நடுவுல முகம் சைட்ல கைகள்"________ சரியாச் சொன்னீங்க! ஆனால் ஆசிரியைக்கெல்லாம் எப்படி மதிப்பெண் தருவ‌து!

      "இலங்கை வரும் டெல்டா டாஃபி (சுட்டா)சுட்டி போல இருக்கு"___ என்னன்னு தெரியாம இப்போ இதுதான் குழப்புது.

      Delete
    2. //நிறைய முழு ஞாயிறு, நிறைய முழு திங்கள், // எனக்கு 'முட்டை'தான் தெரிஞ்சு இருக்கு சித்ரா. ;))
      //க்ளௌன் எல்லாம் தெரிந்தன.// அவ்வ்!! எனக்கு அழுகையா வருதே!! ;)))
      //ஆசிரியைக்கெல்லாம் எப்படி மதிப்பெண் தருவ‌து!// நல்ல கதை! அட்லீஸ்ட் சாப்பிட்டதுல இருந்து ஒரு கொழுக்கட்டையாச்சும் தந்திருக்கலாம்.
      //"இலங்கை வரும் டெல்டா டாஃபி (சுட்டா)சுட்டி போல இருக்கு"// ஹாஹா! டீச்சர் பிழை விட்டிட்டா... எல்லாரும் ஓடியாங்கோ. ;)))))))) "இலங்கை..ல சின்னன்ல சாப்பிட்ட delta toffee... logo - Chutta Chutti போல இருக்கு" ;))

      Delete
    3. உண்மையைச் சொன்னால் கொழுக்கட்டை,சுண்டல் & அவித்த வள்ளிக்கிழங்கும் அனுப்பி விடுவதாகத்தான் முதலில் எழுதினேன். பிற‌கு காலி பண்ணிட்டேன்.

      "இலங்கை..ல சின்னன்ல சாப்பிட்ட delta toffee... logo - Chutta Chutti போல இருக்கு"____ இதிலுள்ள 'சின்னன்ல' மட்டும் புரியல. ஒருவேளை "சின்ன அண்ணன் வீடு" ஆக இருக்குமோ !!

      Delete
    4. எனக்கு அண்ணாவே இல்லையே! வேற ஏதாவது நினைக்காமல் சின்ன அண்ணன் வீடு என்று நினைச்ச வரை பரவாயில்லை. ;)) சின்னன்ல மீன்ஸ்... என் சின்னக் காலத்தில். ;))

      Delete
    5. நாங்க வேகமா பேசும்போது 'சின்னண்ணன் வீடு'னு சொல்லுவோம். நீங்க இன்னும் ஸ்பீடா போய் 'சின்னன்ல'னு சொல்லிட்டீங்களோன்னு நெனச்சிட்டேன்.

      Delete
  4. 1. நத்தை, கரப்பு, ;) வண்ணத்துப்பூச்சி, மான், காங்கேயங்காளை, ;D ஒட்டைச்சிவிங்கி. ஏழாவது... இமா. ;)))

    ReplyDelete
    Replies
    1. "நடுவுல முகம் சைட்ல கைகள்"___ சரியான ஒரு பதிலைச் சொல்லி இமா ஆசிரியைதான் வெற்றி வாகை சூடுகிறார்!!!

      ஆனாலும் அந்த ஏழாவது படம் எதுன்னு தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்!

      Delete
    2. //வெற்றி வாகை// ம்ஹும்! இங்க வாகை எல்லாம் கிடையாது. நான் வேணுமெண்டால்... ஒலிவ இலையையே சூடுறன். ;))

      நாளை கட்டாயம் சொல்லவேணும் சித்ரா.

      Delete
    3. இங்குள்ள இவ்வளவு மரங்களில் 'வாகை' இல்லாமலா இருக்கும்? பார்த்ததில்லை என்பதால் எந்த மரம் என்று தெரியவில்லை. இல்லையென்றால் 'வாகைப் பூவை' பறித்து அனுப்பிவிடுவேன்.

      "ஒலிவ இலையையே சூடுறன்"______ நம்ம‌ ஊரில் ஒலிவ மரங்கள் நிறைய உள்ளன, பார்த்திருக்கிறேன்.அதனால நம்ம ஊர் ஒலிவ மரமா? அல்லது இங்குள்ள ஆலிவ் மரமா?

      அப்பாடி! நல்லவேளை சொல்லியாச்சு. அந்த தைரியத்துலதான் வந்து பதில் எழுதுகிறேன்.

      Delete
  5. சொன்ன நேரத்துக்கு வரமுடியல, எங்கிருந்தாலும் நாளை படத்துடன் வந்துவிடுவேன்.

    ReplyDelete
  6. அடடா! போட்டிக்கே லேட்!
    ஆனா எல்லோரும் விடை தெரியாமல் குழம்பி இருப்பது சந்தோஷமாக இருந்தது.
    விடை தெரிய அடுத்த பதிவுக்குப் போறேன்.

    ReplyDelete
    Replies
    1. மெதுவா வந்தாலும் வந்து எல்லாரையும் பிடிச்சிட்டீங்களே!

      ஜாலியா இருக்கும்போது சமயங்களில் உங்களின் இந்த சந்தோஷம் எனக்கும்கூட வருவதுண்டு.போட்டியில் வந்து கலந்துகொண்டதற்கு நன்றிங்க.

      Delete