Friday, October 4, 2013

ரோஜா _____ 1

இந்த இடுகையில் உள்ள படங்கள் எல்லாம், எங்கள் அப்பார்ட்மென்டில் 'மே' மாதம் எடுத்தவை. நீங்களும் பார்த்து ரசிப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.

நிறைய மொட்டுகள், ஒன்றிரண்டு பூக்களுடன் இருக்கும் இந்த குட்டிகுட்டி ரோஜாச் செடிகளை மணிக்கணக்கில் நின்று பார்த்தாலும் சலிக்காது. 

இப்போதும் ஒன்றிரண்டு மொட்டுகளுடன், பூக்கள் கொத்துகொத்தாக பூத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் அந்த அழகு இப்போது இல்லை.


6 comments:

  1. ரோஜாக்கூட்டம் அழகாய் இருக்கிறது. பூக்களின் நிறமும், நிறம் மாறும் வண்ணங்களும் அழகு! :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மகி, மணிக்கணக்கில் நின்று பார்த்தாலும் நேரம் போவது தெரியாது. நன்றி மகி.

      Delete
  2. எத்தனை ரோஜாக்கள் - மொட்டுக்களும் பூக்களுமாய்!
    அந்த ஊரில் இவற்றைப் பறித்து தலைக்கு வைத்துக் கொள்வது, ஸ்வாமிக்கு சூட்டுவது எல்லாம் உண்டா? இல்லை பூவைப் பறிக்கக் கூடாதா?
    ராஜகுமாரியும், அரசியும் சூடிக் கொள்வார்களா? :)

    ReplyDelete
    Replies
    1. இங்குள்ள யாரும் பறிப்பதில்லை.ஊரில் இருந்து வரும் ஒருசில‌ அம்மாக்கள் சிறு பூக்கூடையுடன் வந்து ரோஜா, அரளிப்பூக்களைப் பறிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

      அரசியாருக்கும் வந்தபுதுசுல,யாருமே பறிக்காம (ஏதோ அவற்றை நான் வளர்த்த நினைப்பில்) இப்படி பூத்து கொட்டுதேன்னு ரொம்ப கவலையா இருக்கும், 'ஊரோடு ஒத்து வாழ்' என்ற நம்ம ஊர் பழமொழிக்கேற்ப மாறியாச்சு. குமாரிக்கு பூ வைத்துக்கொண்டதை எல்லாம் நினைத்து சிரிப்புதான் வரும்.

      அரசி & ராஜகுமாரி ஆக்குவதுன்னா சும்மாவா! அதனால யாருக்கும் தெரியாமல் பொற்காசுகளை எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிக்கோங்கோ.

      Delete
    2. எனக்கும் உண்டா பொற்காசு? கொடுக்கவில்லைஎன்றால் ரோஜாக்கள் திருட்டு போய் விடும். ஜாக்கிரதை!

      Delete
    3. இப்படி எல்லாம் பயமுறுத்தினா பயந்திடுவோமா என்ன ! 1‍_800_ரோஜாமுட்க(ள்)ளுக்கு ஃபோன் பண்ணி காவலுக்கு ஆள் போட்டுட்டோம்ல!

      Delete