Wednesday, November 20, 2013

காலையில் உலா வந்த‌ நிலா !!!



ஏறக்குறைய ஒரு வருடமாகிறது மழையைப் பார்த்து. செப்டம்பரில் ஒரு நாள் மழை வந்தது. ஆனால் அன்று பார்த்து வெளியூர் போயாச்சு. அவ்வ்வ்வ்வ்.....

இங்கு நவம்பர் ஆரம்பித்ததுமே குளிரும் ஆரம்பித்துவிட்டது. ஒன்றிரண்டு வாரமாகவே மழை இதோவருது, அதோவருது என கண்ணாமூச்சு காட்டியது.

நேற்று காலையில் இருந்தே எதிர்பார்த்து, எதிர்பார்த்து ..... அது north bay, east bay  என சுற்றிக்கொண்டு கடைசியாக எங்க bay க்கு (ஹி  ஹி south bay) வருவதற்குள் இரவு மணி 7:00 ஆகிவிட்டது.

இரவு நேரமானதால் மழையைப் பார்த்து ரசிக்க முடியவில்லை. இருக்கும் ஒன்றிரண்டு தொட்டிச் செடிகளை மழையில் நனைய வைத்து 9:00 மணிக்கெல்லாம் வீட்டுக் கூரையின் கீழ் எடுத்து வைத்துவிட்டு வந்து படுத்தாச்சு.

காலை 7:30 மணிக்கு வந்து பார்த்தால் மழையைக் காணவில்லை. கொஞ்சம் ஏமாற்றம்தான். நேற்றிரவு பெய்த மழையில் குளிரும் சேர்ந்து காணாமல் போய்விட்டது.

ஆனால் வானம் அழகான நிறத்தில் காட்சியளித்தது. கூட்டம்கூட்டமாக பறவைகள் மேலே பறந்துகொண்டிருந்தன. அவற்றை (காமிராவில்) பிடிக்கத்தான் முடியவில்லை.

தேய்பிறையாக இருந்தாலும் மேகத் தோழிகளின் உதவியுடன் நிலா ஒளிந்துஒளிந்து, எட்டிஎட்டிப் பார்த்து விளையாடியது கொள்ளை அழகாக இருந்தது.

அதன் பிறகு லேசான அழகான வெளிச்சம் வரத்தொடங்கியது. இதெல்லாம் ஒரு அரை மணி நேரத்திற்குள்தான். அதற்குமேல் வானம் மேகம் சூழ்ந்து மதியம் 1:30 மணி மழைக்குத் தயாராகிக்கொண்டிருந்தது.

நானும் என் வேலையைப் பார்க்கத் தயாரானேன்.

2 comments:

  1. ஆகா... என்ன அழகு...! என்ன அழகு...!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...சுடச்சுட பின்னூட்டம். வருகைக்கு நன்றிங்க.

      Delete