Saturday, November 16, 2013

எங்கள் வீட்டுத் தோட்டம்.........உளுந்து செடி


இட்லிக்கு ஊறவைத்த உளுந்தைக் கழுவிய தண்ணீர் & உளுந்து தோல் இவற்றை செடிகளுக்குப் போடுவேன். ஒருசமயம் அதில் ஊறாத முழு உளுந்து ஒன்று இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். மண் + தண்ணீருடன் சூரிய ஒளியும் சேர்ந்துகொண்டதால் முளைத்து வந்த தப்புச்செடிதான் இந்த உளுந்து செடி.
                                                         

ஊரில் எங்கள் வீட்டில் உளுந்து பயிர் செய்வார்கள் என்பதால் இது உளுந்து செடிதான் என அது முளைத்து வரும்போதே கண்டுபிடிச்சாச்சு..


பிடுங்காமல்..... வளருகிறதா எனப் பார்த்துக்கொண்டே வந்தேன். அழகாக துளிர்விட்டு வளர்ந்தது.


இதேபோல்தான் தப்பி முளைத்த தக்காளி செடிகள், மணத்தக்காளி செடிகள் எல்லாம் இடப் பற்றாக்குறையால் இதைப் போட்டு நெருக்கியதில் கொஞ்சம் பாவமாகத்தான் வளர்ந்தது.


மற்ற செடிகள் எல்லாம் வேறிடங்களுக்கு இடம் மாறியதால் உளுந்து செடிக்கு ஓரளவு நிம்மதி.


பிறகு பூக்கள் பூத்து.........


காய்களும் வந்தன.


நல்ல விதையாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக வளர்ந்து, நிறைய காய்த்திருக்கும்.


காய்கள் முற்றி ஒன்றிரண்டு காய்கள் கருப்பானதும்..........



செடியைப் பிடுங்கிவிட்டேன்.

பிறகு காய்களைப் பறித்து ஒரு மண்கிண்ணத்தில் போட்டு காயவைத்தேன்.


முற்றியவை வெடித்துவிட்டன. பச்சையாக இருந்ததை..........ஹி   ஹி   நானே வெடிக்க (உரித்து) வைத்து  சாப்பிட்டுவிட்டேன். கொஞ்சம் கொழகொழப்பு இருக்கும். இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கும். எல்லாம் சிறு வயதில் சாப்பிட்ட பழக்கம்தான்.


கருப்பா இருக்கற உளுந்தை என்ன செய்தேன்னு பாக்குறீங்களா !! பத்திரமா எடுத்து வச்சிருக்கேன். நீங்க யாராவது நல்ல விலைக்குக் கேட்டால், பெரிய மனசு பண்ணி, எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டு அனுப்பி வைக்கிறேன் !!!

6 comments:

  1. முகவரியை அனுப்புகிறேன்... ஹா... ஹா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நீங்க அனுப்பித்தான் உங்க முகவரி தெரிய வேண்டுமா என்ன !! வருகைக்கு நன்றிஙக.

      Delete
  2. அமெரிக்காவில் உளுந்து விளைச்சல் அமோகம் போல தெரிகிறது.உங்களை பேட்டி காண நிருபர்கள் கூட்டம் அலை மோதுகிறது என்று நினைக்கிறேன். எதற்கா? வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் உங்கள் உளுந்து சாகுபடி டிப்ஸ் ஒளிபரப்ப தான்.
    நன்றி உளுந்து சாகுபடி முறையை சொல்லிக்கொடுத்ததற்கு.

    ReplyDelete
    Replies
    1. வந்தவங்க 'கோடீஸ்வரர் நிகழ்ச்சி'க்கு (உங்க தோட்டத்தில் கோகோ பீன்ஸ் நிரம்பி வழியுதாமே) உங்கள பேட்டி எடுத்து முடிச்சிட்டு நேரா இங்க வந்ததா சொன்னாங்க. உண்மையாங்க?

      இதிலிருந்து அமெரிக்காவிலும் உளுந்து விளைவிக்கலாம்போல் தெரிகிறது. ஹா...ஹா....தலைப்பைக்கூட 'எங்க வீட்டுத் தோட்ட(ம்)'த்திலிருந்து 'வயலும் வாழ்வும்'கு மாற்றிடலாம்னு ஒரு ஐடியா இப்போ வந்திருக்கு.

      Delete
  3. நான் ஒரு மாதம் முன்பு தான் என் பையனின் ஸ்கூல் ப்ராஜெக்டுக்காக உளுந்து, வெந்தயம், கடுகு எல்லாவற்றையும் பயிர் செய்து அறுவடை முடித்தேன்! இங்கே வந்து என் குட்டி தோட்டத்தை பார்த்தது போலவே இருந்தது! ஒவ்வொரு புகைபடமும் அழகோ அழகு :) - மகாலக்ஷ்மி விஜயன்

    ReplyDelete
    Replies
    1. உங்க பையன் பரவாயில்லீங்க, உங்கள‌ பயிர் செய்து அறுவடை செய்ய விட்டிருக்காங்க‌! எங்க பாப்பா 3 ஆம் வகுப்பு படித்தபோது அறிவியல் ப்ராஜெக்டுக்காக பயிர் செய்ய ஆரம்பித்தபோது......ஐயய்யய்ய‌யோ..... தண்ணி விடக்கூட என்னைத் தொடவிடவில்லை.

      உங்க குட்டித்தோட்டத்தையும் அதற்கேற்றார்போல் ஒரு குட்டிக் கவிதையும் எழுதிப்போடுங்கோ !! நாங்களும் பார்த்து ரசிக்கிறோம்.

      Delete