Wednesday, December 18, 2013

"ஸ்ட்ராங்கா ஒரு டீ ப்ளீஸ்" !!

சென்ற மாதத்தில் ஒருநாள் வலைச்சரத்தில் ஒரு வாரத்திற்கு எழுத, ஏதாவது வேண்டுமே என்ற எண்ணத்தில்  தெரிந்த சில பதிவர்களின் பின்னூட்ட‌ங்களில் யாராவது தென்படுகிறார்களா என்று இங்குமங்குமாகத் தேடி ஓடினேன்.

அப்போது ஒரு பெண்பதிவரின் பெயரை 'க்ளிக்' பண்ணி, அவரது தளத்திற்கு சென்றேன். அங்கே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆமாங்க, நான் அதற்கும் ஓரிரண்டு நாட்களுக்கு முந்தி எழுதிய 'கார்த்திகை ஸ்பெஷல்' அங்கே என்னைப் பார்த்து சிரித்தது. நான் எழுதியிருந்த 'கார்த்தி'யை நீக்கிவிட்டு 'மாவளி' என்று எழுதி சூப்பரா சுத்த விட்டிருந்தார்.

அதன்பிறகு ஒரு இரண்டு நாட்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக‌ இருந்தது. இதை யாரிடமாவது சொல்ல வெண்டும். யாரிடம் சொல்வது ? இவரிடம் சொன்னால் சிரிப்பார், அப்படியும் புலம்பினால் 'இண்டர்நெட்ல இதெல்லாம் சகஜம்தானே' என்பார்.

அதையும் மீறி புலம்பினால்  'எதற்கும் நல்ல டாக்டரைப் பார்த்துவிடலாம்'  என்றுகூட சொல்லலாம். அதனால் இவரிடமும் சொல்லவில்லை. 'இருக்கிற வேலையில் இதுவேறயா ?' என்று விட்டுவிட்டேன்.

நான் எந்த விஷயத்தையும் சீரியஸா சொன்னா அது இவருக்கு காமெடியாதான் தெரியும். அதை வைத்தே பல நாட்கள் ஓட்டுவார். அதனால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனபிறகு சொல்லலாம் என்று விட்டுவிட்டேன்.

ஆனாலும் மனம் கேட்காமல் அடிக்கடி போய் அந்தப் பதிவரின் 'காப்பி' பதிவைப் பார்த்துவிட்டு வருவேன். அவர்கூட நினைத்திருக்கலாம், "கார்த்திகை தீபம் முடிந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டது, ஆனாலும் இந்த பதிவை யாரோ வந்துவந்து பார்த்துக்கொண்டிருக்கிறாரே" என்று.

பின்னூட்டங்களில் உள்ள கேள்விகளுக்கெல்லாம் உற்சாகமாக பதில்வேறு சொல்லியிருந்தார். புரியவில்லை எனக்கு ! எதற்காக இப்படியெல்லாம் ? எப்படி இதெல்லாம்?  ஏதோ என்கூடவே வந்து எல்லாவற்றையும் அருகிருந்து பார்த்ததுபோல்.....?

இந்த மன உலைச்சலினூடே 'வேர்ட்ப்ரஸ்'ஸிலுள்ள பதிவர்களின் லிஸ்டை பார்த்துக்கொண்டே வந்தேன். அங்கே அழகான பெயரில் ஒரு சமையல் வலைத்தளம், போய் பார்க்கலாமே என்று அந்தத் தளத்திற்கு சென்றால்..... அங்கே ... அங்கே....எனக்கு ரொம்பவும் பரிச்சயமான ஒரு வத்தக்குழம்பு கிண்ணமும், கொங்கு தமிழ் நடையுமாக.....

"அட ! இது நம்ம மகி வீட்டு வத்தக் குழம்பு கிண்ணமாச்சே , இது எப்படி இங்கே.... ? ஒருவேளை மகி கொடுத்துவிட்டிருக்கலாமோ" என்று நினைத்து நினைத்து சிரித்தேன். இப்போது மன உலைச்சல் கொஞ்சம் காணாமல் போயிருந்தது.

அதன்பிறகு சில பதிவர்களின் எழுத்துக்களை நினைத்துக்கொண்டேன், வாய்விட்டே சிரித்தும்விட்டேன், அதில் ஒன்று ___ "நம்ம ராசியும், விக்ஷ்ணுவும் எங்கெங்கு என்னென்ன பெயர்களில், உலா வந்து கொண்டிருக்கிறார்களோ" என்று.

இன்று காலையில்தான் இந்த விஷயத்தை மகளிடமும்,இவரிடமும் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தேன். 'லன்ச்'சுக்கு உள்ளே நுழையும்போதே, "அப்படின்னா இந்த வாரம் ஃபார்மர்ஸ் மார்க்கெட் போவது கட்டா? எதுக்கும் ஃப்லீ மார்க்கெட்டை பிடிச்சு வச்சுக்கோ, அதுவும் பறந்திடப்போவுது" என்றார்.

நான்தான் இப்போ நல்லா தெளிவாயிட்டேனே !! நானும் பதிலுக்கு, "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க‌, 'கார்த்தி'யை காப்பி போட்டு கொடுத்த‌மாதிரி, என் பொங்கலையும் ஸ்ட்ராங்கா ஒரு டீ போட்டுத் தந்தாலும் தரலாம்" என்றேன் .

20 comments:

  1. //"அட ! இது நம்ம மகி வீட்டு வத்தக் குழம்பு கிண்ணமாச்சே , இது எப்படி இங்கே.... ? ஒருவேளை மகி கொடுத்துவிட்டிருக்கலாமோ" என்று நினைத்து நினைத்து சிரித்தேன். // aaha! இது வேறயா!! :) எந்த இடமுன்னு சொன்னீங்கன்னா நானும் ஒரு எட்டு எட்டிப்பார்த்துட்டு வருவேனில்ல சித்ராக்கா! :))))

    இந்த காப்பி அடிப்பவர்களை என்ன சொல்வதுன்னு தெரில.. அங்க-இங்க பார்த்தாத்தானே தெரியும், நாந்தான் லிமிடட் சர்க்கிள்லயே சுத்துறேனே! அதனால நான் பெருசா எதுவும் கண்டுக்கிறதே இல்ல! முதல்ல உங்கள மாதிரி ஃபீலிங்க்ஸ் பண்ணேன், இப்ப பழகிப்போச்சு.

    ஒரே ஒரு பஞ்ச் டயலாக் சொல்லிட்டு எஸ்கேப்பூ! காப்பி அடிப்பவர் காப்பி மட்டும்தான் அடிக்க முடியும், ஆனா நாமல்லாம் creators, we can create better things! So don't worry, be happy! :D

    ReplyDelete
    Replies
    1. இப்போ போய் பார்த்தேன் மகி, அந்த லிஸ்ட்ல காணோம், பெயர்கள் மாறிக்கொண்டே இருக்கும், ஆனாலும் என்றைக்காவது வரும் , பார்த்ததும் அனுப்புகிறேன்.

      நானும் ஒரு சின்ன வட்டத்திலேயேதான் இருப்பேன். வலைச்சரத்திற்காக பெண் பதிவர்களாகப் பார்த்து போனபோதுதான் பார்க்க நேரிட்டது. இதுபோல் என்னுடைய சமையல் பதிவுகளும் வருவதுண்டு, முதலில் கொஞ்சம் வருத்தமாக இருந்தது, இப்போது கண்டுகொள்வதில்லை.

      பஞ்ச் டயலாக் சூப்பர் மகி.

      Delete
  2. ராசியையும்,விஷ்ணுவையும் பார்த்தீர்களா ? எங்கே?......எங்கே?........என்ன பெயரில் உலா வருகிறார்கள். ப்ளீஸ் .....சொல்லுங்களேன். மெயிலிலாவது சொல்லுங்கள். என் எழு த்துக்கு இதை விடவா மிகப் பெரிய பாராட்டு இருக்கப் போகிறது். நானும் அவர்களைக் காணோமே என்று தேடிக் கொண்டு தான் இருக்கிறேன்.

    எனக்கு மண்டை வெடித்து விடும் போலிருக்கிறதே! சீக்கிரம் சொல்லுங்களேன்.......

    ReplyDelete
    Replies
    1. இ தோ வந் துட் டேன், பயந்துடாதீங்க, அதுமாதிரி நான் நினைத்துதான் பார்த்தேன், அவங்க எங்கயும் போகல, உங்க ப்ளாக்லதான் சுத்திட்டிருக்காங்க. நான்தான் குழப்பிட்டேனோ !!

      Delete
  3. எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளவும்... வேறு வழியில்லை...

    ReplyDelete
    Replies
    1. முதலில் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. இதையெல்லாம் பார்த்தால் வேலைக்காகுமான்னு போய்ட்டே இருக்க வேண்டியதுதான். வருகைக்கு நன்றிங்க.

      Delete
  4. பைரவா...! பதிவருக்கு நல்வழிகாட்டுப்பா...! (வே.வி.2) :- http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speed-Wisdom-2.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி, போய் பார்த்துட்டு வரேங்க.

      Delete
  5. அடடா! இப்படி தான் எல்லா இடங்களிலும் நடக்கிறது...:(( நானும் சின்ன சர்க்கிள்ள சுத்தறவ தான் ... அதனால என்னோடது இப்படி யாராவது போட்டிருக்கிறார்களா.. எனத் தெரியாது...

    என் கணவரோடது முன்பு ஒருமுறை யாரோ அப்படியே எடுத்து போட்டிருந்தாங்க...:))

    அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, இது நடக்கறதுதான். ரெண்டு நாட்களுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. இப்போ சரியாப் போச்சு. மீண்டும் வந்தாங்கன்னா பாக்கட்டுமேன்னுதான் ஒரு பதிவா போட்டுட்டேன். வருகைக்கு நன்றிங்க.

      Delete
  6. என்னுடைய சில கதைகள் வேறொரு தளத்தில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ப்ளாகர்-ன்னு வந்துட்டா இதெல்லாம் பழகணும் போலிருக்கு! விடுங்க, அல்பங்கள்!


    சில தளங்களில் காப்பி பேஸ்ட் பண்ணுவதைக் கூட தடை செய்திருப்பார்கள். அப்படியெல்லாம் செய்துதான் நம் பதிவுகளைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
    மகி சொன்னதுபோல நாமெல்லாம் இன்னும் சிறப்பாக படைப்புகளை உருவாக்கி, அவர்களை கவிழ்த்துவிடலாம், கவலைப் படாதீர்கள்.

    நேற்று ஒருவர் என் தளத்திற்கு வந்து 'கேஸ் கோர்ட்டுன்னு போகாதீங்க, உங்க பதிவை முகநூலில் என் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்' என்று சொல்லிவிட்டுப் போனார். இவரைப்போல இருக்கிறவர்களைப் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்ளலாம்!

    ஸ்ட்ராங் டீ ரெடி!

    ReplyDelete
    Replies
    1. அனுபவமுள்ள முன்னோடிகளான நீங்களெல்லாம் இருக்கும்போது எனக்கென்ன கவலை. நோஓஓஓ.....இருந்தாலும் மனசு கேக்கல. ரொம்ப நாளா அங்க போகல. இன்று மீண்டும் போய் பார்த்துவிட்டு வந்தேன். முழு பதிவுகளா போட்டு வச்சிருந்தவங்க இப்போ பிச்சிபிச்சி, கலச்சிபோட்டு வச்சிருக்காங்க. இனி அந்தப் பக்கமே போகக்கூடாது.

      அடுத்தவருடையதை எடுக்கும்போது கேட்டுவிட்டு செய்கிற‌வர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். ஆறுதலான விஷயம்தான்.

      உங்க 'ஸ்ட்ராங் டீ' சூப்பரா இருந்துச்சுங்க.

      Delete
  7. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...... :(

    ReplyDelete
    Replies
    1. சாதாரணமாக எடுத்துக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். நன்றிங்க.

      Delete
  8. நிறைய இடங்களில் என் புகைப்படங்கள்,குறிப்புக்கள் பார்த்திருக்கேன், ஆரம்பத்தில் மனசு கொந்தளிப்பாக இருந்தது,இப்ப நானும் தெளிவாயிட்டேன்.சுத்தமாக கண்டுக்கறதே யில்லை.நம்மை வச்சு ஒருத்தங்க பொழப்பை ஓட்டுறாங்களேன்னு ஒரு சின்ன சந்தோஷம் தான்.மகி சொன்னது சரி.

    ReplyDelete
    Replies
    1. நானும் விட்டாச்சுங்க. இனிமே நீங்களெல்லாம் சொல்வதுபோல் கண்டுக்காம போயிட்டே இருக்க வேண்டியதுதான். வருகைக்கும், கருத்தைப் பகிர்ந்துகொண்டதற்கும் நன்றிங்க.

      Delete
  9. படங்கள் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete
  10. Replies
    1. கருத்தைப் பார்த்து அவங்க பயப்படுவாங்களோ என்னவோ, நான் ஆடிப்போயிட்டேன். அவரவர் திருந்தினால்தான் உண்டு. உங்கள் வருகைக்கு நன்றிங்க.

      Delete