புதன், 26 பிப்ரவரி, 2014

மேக மலையினூடே ......... !

மேக மலையினூடே ............ சூரிய அஸ்தம‌னம் !பழைய புகைப்படங்களைப் புரட்டியபோது கிடைத்த மறக்க முடியாத புகைப்படங்கள் இவை. 2010 ஆம் ஆண்டு மே மாதத்தின் கடைசி வாரத்தில் ஒருநாள் மாலை 8:30 மணிக்கெல்லாம்(ஆமாங்க, இங்கு கோடையில் எட்டு, ஒன்பது மணியெல்லாம் மாலையாகத்தான் இருக்கும்) மகள் Badminton வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்தாள். வந்ததும் வராததுமாக எதையோ எடுத்துக்கொண்டு வெளியே ஓடினாள்.

'Badminton racquet ஐ பள்ளியிலேயே வச்சிட்டு வந்துட்டாளோ ! இருக்காதே, அதுக்கு சான்ஸே இல்லையே. Backpack ஐ மறந்து வச்சிட்டு வந்தாலும் வருவாளே தவிர ஸ்போர்ட்ஸ் சம்மந்தமான‌ பொருள்களை மறக்கவேமாட்டாளே !'  என நினைக்கும்போதே உள்ளே வந்து எங்களை வெளியில் வரச்சொல்லி,  மேகக் கூட்டத்தினிடையே சூரியன் மறைந்துகொண்டிருக்கும் இந்த அழகான காட்சியையும், காமிராவில் தான் பிடித்த படங்களையும் காட்டினாள்.

முதலிரண்டு படங்களை வெளியிலிருந்தும், கடைசி இரண்டு படங்களை பேட்டியோவிலிருந்தும் எடுத்திருந்தாள்.

'ஹைய்யோ, சூப்பரா வந்திருக்கு!" என்று நாங்கள் கூறியதும், அதன்பிறகான ஜாலி பேச்சுகளும் மனதில் வந்துபோயின‌ !!

14 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

   நீக்கு
 2. படங்கள் நான்குமே அழகு சித்ரா.
  உங்கள் மகளுக்கு என் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் மகளுக்கான வாழ்த்துகளுக்கும் நன்றிங்க‌.

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க‌.

   நீக்கு
 4. ஹாஸ்டலில் மகளை விட்டு விட்டு உங்களைப் பிரிவுத் துன்பம் தாக்குவது போலிருக்கிறதே.
  மகள் எடுத்திருக்கும் போட்டோ அத்தனையும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரெக்ட்டா பாயிண்ட புடிச்சிட்டீங்க, அதுவேதான். எவ்வளவுதான் தைரியமாக‌ இருந்தாலும் சமயங்களில் பலவீனப்பட்டுத்தான் போகிறேன். வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

   நீக்கு
 5. பதில்கள்
  1. உங்க வீடு மலைப்பகுதியா இருக்குறதால பார்க்க இன்னும் அழகா இருக்கும். அது மறையும்போது கலர்கலரா மாறும்போது பார்த்துட்டேன்னா பேட்டியோவைவிட்டு நகரமாட்டேன். வருகைக்கு நன்றிங்க.

   நீக்கு
 6. அழகான புகைப்படங்கள்! மேக மலையினூடே அருமை மகளின் நினைவும் வருகிறதோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாவே கண்டுபிடிச்சிட்டீங்க. இங்கு இரண்டொரு நாளில் மழை வரப்போகிறது என்றவுடன் மதியம் 2 மணி என்றாலும் பள்ளி விட்டு வந்ததும் பஜ்ஜி அல்லது வடையுடன் சூடான டீ சாப்பிடுவோம். அதைப்பற்றிய நினைவுகள்தான் பதிவாகிவிட்டது. வருகைக்கு நன்றிங்க.

   நீக்கு
 7. அருமையான படங்கள்.

  இப்படி சில படங்களை அவ்வப்போது பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சியே தனிதான்.....

  பதிலளிநீக்கு
 8. இயற்கை அழகுக்கு ஈடு, இணை எதுவுமில்லையே. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க வெங்கட்.

  பதிலளிநீக்கு