Sunday, March 2, 2014

குளிர்ந்தது குளிர்காலம்....!


படங்களைப் பார்த்து அப்படியே வரைய மட்டுமே தெரிந்த எனக்கு, இப்போது காமிராவின் உதவியால் பெயிண்ட் பண்ணவும் தெரிந்துவிட்டது.


நல்லா வரைஞ்சிருக்கேனான்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க.

இங்கே இந்த வருடத்தின் குளிர்காலம் கோடையைப் போலவே இருந்தது. சில்லிடும் குளிர் காணாமல் போனதில் சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் அந்தந்த காலத்திற்கு ஏற்ற தட்பவெப்பம் இல்லாமல் போனதில் வருத்தமே. ஏறக்குறைய அமெரிக்கா முழுவதுமே பனிப்புயல் அடித்தபோது இங்கே வெயில் காய்காயென்று காய்ந்தது. மழை இல்லாததால் நிலங்கள் வறண்டு வெடித்துப் போயிருப்பதை தொலைக்காட்சியில் காட்டினார்கள். கலிஃபோர்னியா வறண்ட மாநிலமாகவும் அறிவிக்கப்பட்டது.

இவ்வளவையும் பார்த்துக்கொண்டு வான‌ம் சும்மா இருக்குமா? இங்கே நல்லவங்க(வேறு யாருங்க‌? நாங்கதான் !) இருக்கும்போது மழை வராமல்தான் போகுமா!

ஒரு வாரமாகவே 'வரப்போகுது, வரப்போகுது' என சொல்லிச்சொல்லி, எங்கே பயந்துபோய் வராமல் போய்டுமோன்னு நினைத்தபோது ............. ஆஹா,  புதன் கிழமை அதிகாலை முதல் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி பூமியை நனைத்துவிட்டது. தூறல் வடிவில் இது இன்னும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

வெள்ளிக்கிழமை மதியம் ஒரு 'ஷோவு'க்காக பக்கத்து ஊர் சென்றோம். வழக்கம்போல் ஒரு மணி நேரத்துக்கும் முன்னதாகவே போயாச்சு. அங்கே காரிலேயே வெயிட் பண்ணிக்கொண்டிருந்தோம். நடுவில் சிறிது நேரம் நின்ற மழை, மீண்டும் சூடு பிடித்தது.

அந்த நேரம் பார்த்து மகள் midterm test முடிந்து வெளியில் வரும்போது அங்கே மழை பெய்யும் புகைப்படத்தை சந்தோஷமாக மெஸேஜ் அனுப்பினாள். இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே எங்கள் ஊரில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதில் அவளுக்கு கொஞ்சம் வருத்தம்.

நானும் பதிலுக்கு நாங்க இருந்த இடத்தின் எதிரிலுள்ள மழை காட்சியை புகைப்படத்துடன் மெஸேஜ் அனுப்பினேன். ஒருமணி நேர காத்திருப்பில் இதுதான் நடந்தது. அப்போது நான் காரின் உள்ளேயிருந்து அலைபேசியில் எடுத்த புகைப்படங்கள்தான் இவை.

இப்போதெல்லாம் அடிக்கடி படங்களுடன் மெஸேஜ் பண்ண வேண்டியிருப்பதால் கையிலிருந்த காமிரா காணாமலேயே போய்விட்டது. அதை வழியில் எங்காவது பார்த்தால் நான் தேடிக்கொண்டிருப்பதாக கொஞ்சம் சொல்லுங்கோ.

மழைக்குமுன் கட்டிடம் இப்படித்தான் இருந்தது.



தூறல் போட ஆரம்பித்தவுடன் ......... காரின் முன்பக்க கண்ணாடியில்(windshield) மழைத் துளிகள் பட்டு, அது கட்டிடத்தின்மீது நீர்த் திவலைகள் தெளித்தார்போல் இருந்தது.



மழைத்துளிகள் பெரியதாக ஆரம்பித்தவுடன்...........



காட்சியை தண்ணீர் தெளித்து கலைத்து விட்டதுப்போல் இருந்தது பிடித்தது. அதனால் அக்காட்சியை அலைபேசியில் பிடித்தும்விட்டேன்.



எதிரில் இருந்த கட்டிடம் வளைந்து நெளிந்து கோணலாகியும் ...............



 கொஞ்சம் தொலைவில் தெரிந்த மரங்கள் எல்லாம் டான்ஸ் ஆடுவது போலவும் இருந்தது அழகாக இருந்தது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

'ஆஸ்கார் ரெட் கார்ப்பெட்'டை பார்த்துக்கொண்டே பதிவைத் தேத்தியாச்சு. இனி 'ஆஸ்கார் அவார்டை'ப் பார்க்கவேண்டும், வருகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

12 comments:

  1. படங்கள் அனைத்தும் அழகு... வாழ்த்துக்கள்...

    காமிரா கிடைத்து விட்டதா...?

    ReplyDelete
    Replies
    1. ஆச்சர்யமா இருக்குங்க, அதற்குள் பின்னூட்டமா !

      காமிரா வீட்லதாங்க இருக்கு. எடுப்பதில்லை. பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

      Delete
  2. நாங்க ஆஸ்கர் பாத்துட்டே கமெண்ட்டும் போட்டாச்! ;)

    இங்கே புதன் கிழமை எதிர்பார்த்து ஏமாந்தோம், வியாழன் இரவு முதல் இன்று காலை வரை பின்னிப் பெடலெடுத்துடுச்சு! மழை, மழை மேலும் மழை! நேத்து உங்க படத்தைப் பார்த்ததுமே மழைப்படம்தான் என கண்டுபுடிச்சிட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. பொழுது போகாம எடுத்த படஙகள்தான்.

      இங்கு மாலையும் நல்ல பலமான தூறல். இன்னும் சில நாட்கள் பெய்யுமெனத் தெரிகிறது. இன்று மழையில்தான் வாக் போனோம். ஆஸ்காருக்கு இடையிலும் வந்து கமெண்ட் போட்டதற்கு நன்றி மகி.

      Delete
  3. உங்கள் கேமிரா தான் கவிதை பாடும் என்றிருந்தேன்., செல்போனும் கவிதை பாடுகிறதே!
    அருமையான படங்கள் சித்ரா!

    ReplyDelete
    Replies
    1. அலைபேசியில் எடுத்து நான் எங்கே இருக்கேன்னு பொண்ணுக்கு மேசேஜுடன் சேர்த்து அனுப்ப வசதியாய் இருப்பதால் மாற்றிக்கொண்டேன். பாராட்டுகளுக்கும் நன்றிங்க.

      Delete
  4. நல்ல படங்கள்..... பாராட்டுகள்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க வெங்கட்.

      Delete
  5. மழையில் கட்டிடம் நனைவது நன்றாக வந்திருக்கிறது. உங்கள் பெயிண்டிங் நன்றாக இருக்கிறது. அதையும் உங்கள் மகளுக்கு அனுப்பினீர்களா? மகளின் பிரிவு உங்களை எல்லா கலைகளிலும் வல்லவர் ஆக்கிவிட்டதோ?

    ReplyDelete
    Replies
    1. காரின் கண்ணாடியில் உள்ள மழைத் துளிகள்தான் கட்டிடம் நனைவதுபோல் தெரியுது. பெயிண்டிங்கும் மழைத்துளிகள் செய்த வேலைதான். மக‌ள் என்ன செய்தாலும் எனக்கு வந்துவிடும், நானும் அப்படியே. இப்போ இதான் நடந்துகிட்டிருக்கு. நேரமின்மையிலும் வந்திருப்பது மகிழ்ச்சிங்க.

      Delete
  6. டான்ஸ் ஆடும் மரம் பிரமாதம் மேடம்

    ReplyDelete
    Replies
    1. சாதாரண மரம் வளைந்து நெளிந்து தெரிந்தது பிரமிக்கத்தான் வைத்தது. தங்கள் வருகைக்கும் நன்றிங்க.

      Delete