புதன், 26 மார்ச், 2014

உயரத்தை அளப்போமா !!! .............. தொடர்ச்சி

 எங்கள் குடியிருப்பின் நுழைவாயிலுக்கருகில் குட்டிகுட்டிச் செடிகளில் பூத்திருக்கும் அழகான பூக்கள்தான் இவை. சீசனுக்கு ஏற்றார்போல் செடிகளை மாற்றும்போது அப்படியே மொத்தமாக சேர்த்து ஒரு படம் எடுத்து வைத்துக்கொள்வேன். இந்த முறை அவ்வாறு எடுத்தபோது சுந்த‌ரும் உடன் இருந்தார்.

அலைபேசியில் நான் எடுத்துவிட்ட பிறகு இவர் அதை வாங்கி  வித்தியாசமாக எடுத்தார். படத்தைப் பார்த்தால் செடிகள் எல்லாம் மேற்கூரையைப் பிடித்துக்கொண்டு இருப்பதுபோல் இருக்கவும் ஆச்சர்யமாகி(எல்லாமே எனக்கு ஆச்சர்யம்தான்)  நானும் அவரைப் பார்த்து காப்பி அடித்து எடுத்த படங்கள்தான் இவை.

அப்படியே படங்களைப் பாத்துட்டே வாங்கோ, விஷயம் புரிந்துவிடும்.

                                                   ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


மேலே படத்திலுள்ள இந்த குட்டிச் செடிகள்தான் ஆளுயரமாகத் தோன்றியவை. 

நாளையும் இதே மாதிரி, ஆனால் இன்னும் அழகான பூவுடன் வருகிறேன்.

                                        ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

14 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. "எனக்கும் இவை பிடிக்கும்" _________ அதனால்தானோ எங்கிருப்போரெல்லாம் ஒன்று சேர்கிறோமோ :)

   நீக்கு
 2. அழகோ அழகு...! இது போன்ற இடத்தில் சிறிது நேரம் உட்கார்ந்தாலே, மனதில் உற்சாகம் பொங்கி எழும்...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாங்க, பூக்களின் நிறமும், அதன் அழகும், நம்மைக் கவர்ந்து உற்சாகப்படுத்தும் என்பது உண்மைதான்.

   நீக்கு
 3. செடிகள் அழகு பூக்களும் அழகு..இங்கெல்லாம் இவை வளராதென்பதால் எங்களுக்காக புகைப்படம் எடுத்து காண்பித்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுக்காகவும் & திரும்பிப் பார்க்கவும் உதவுமே என்பதால் எடுத்துக்கொண்டதும்கூட. வருகைக்கு நன்றிங்க எழில்.

   நீக்கு
 4. பூக்கள் அனைத்தும் அழகு....

  நாளையும் அவை இங்கே பூக்கப் போகின்றன... மகிழ்ச்சியாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டில்லியில் பூக்கப் போகும் இவர்களைப் பார்க்க வெயிட்டிங்.

   நீக்கு
 5. :) வசந்தம் வந்தாச்சு! :)

  எங்க அபார்ட்மெண்டில் இந்த சீஸனுக்கு பூக்கள் மாத்தவே இல்ல..பழைய பூச்செடிகளேதான் நிற்கின்றன. அதனால் நான் வீட்டில வண்ண வண்ணப் பூக்கள் வாங்கி வைச்சிருக்கேன் சித்ராக்கா! டிரிக்ஸ் பண்ணி எடுத்த படங்கள்:) எல்லாம் அழகா இருக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொட்டில இருக்கற மண்ணுல இந்த 'ரோலிபோலி'ன்னு ஒன்னு வந்திடுது மகி. அதுக்கு பயந்தே நான் பூச்செடிகள் எதுவும் வாங்குவதில்லை. வீட்டைவிட்டு வெளியில் வந்துவிட்டால் ஏகத்துக்கும் பூக்கள், அவற்றை ரசிப்பதோடு சரி.

   நீக்கு
 6. இவ்வளவு சிஒன்ன செடிகள் எப்படி இவ்வளவு உயரமாக? உங்கள் கேமிரா கவிதை பாடும் என்று தெரியும். இதென்ன மாயாஜால் வேலையெல்லாம் செய்கிறதே! நாளை என்ன செய்யப் போகிறது பார்க்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காமிராவ செடிக்குப் பக்கத்துல, கீழ வச்சு எடுத்ததால வந்தது. இன்றும் இதேமாதிரி, ஆனால் வேறொரு பூ. பார்க்கலாம் எப்படி வருதுன்னுட்டு !

   நீக்கு
 7. அழகான பூக்கள். பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், ரசிப்புக்கும், கருத்துக்கும் நன்றிங்க தமிழ்முகில்.

   நீக்கு