வியாழன், 27 மார்ச், 2014

கஸானியா பூ / Gazania

நான் 'வாக்' போகும் பூங்காவில் எல்லா இடங்களும் திறந்த வெளியாகத்தான் இருக்கும். நான் போவது லேஸாக சிறிது மேடு போல் தோட்டத்து வழியாக அதாவது பின்வாசல் வழியாக‌ போவதுபோல் இருக்கும். இந்த வழியைப் பார்க்கும்போது எங்கள் ஊர் நினைவுதான் வரும்.  இங்கே பூத்துள்ள பூதான் படத்தில் உள்ளது.

படங்களை அப்படியே மேலிருந்து பார்த்துக்கொண்டே வந்தால் இப்பூக்கள் எங்கே பூத்துள்ளன என்பது தெரிந்துவிடும். இதுவும் சுந்தரைப் பார்த்து காப்பி அடித்ததுதான். தனிப் பூக்களும் இவர் எடுத்ததுதான். ஆனால் கஷ்டப்பட்டு அதை அழகாக 'ட்ரிம்' பண்ணியது நானாக்கும்.


மேடான பகுதியின் கீழே நடைபாதையில் பூத்திருக்கும் பூதான் இது.

பூங்காவில் இந்த வழியாகப் போகிறவர்கள் யாரும் இந்தப் பூக்களைப் பார்த்துவிட்டு 'க்ளிக்'காமல் போகமாட்டார்கள். தேனீக்களை மட்டுமல்ல, மனிதர்களையும் சுண்டி இழுத்துவிடுகிறது ........... இதன் நிறம் அப்படி !

மஞ்சளும், சிவப்பும் கலந்த, நடுவில் மயில்தோகையை நினைவுபடுத்தும் அழகிய உள்புற வேலைப்பாடுகளுடன் கூடிய, கொள்ளை அழகு கொண்டது. காட்டுப் பூ போல், தண்ணீர் பராமரிப்பு இல்லாத இடங்களில் பூத்துக் குலுங்குகின்ற‌ன.

8 கருத்துகள்:

 1. ஆஹா, ஒவ்வொரு புகைப்படமும் ஓராயிரம் கவிதைகள் பேசுகின்றனவே ! கொள்ளை அழகு !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ, அப்படியா !! பூக்களை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க தமிழ்முகில்.

   நீக்கு
 2. பூக்கள் மனதில் கொள்ளை அடிக்கிறது

  அழகாக 'ட்ரிம்' பண்ணியதற்கு வாழ்த்துக்கள் பல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க தன‌பாலன்.

   நீக்கு
 3. மிக அழகான படங்கள்....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பூக்களை ரசித்து பின்னூட்டமிட்டதற்கும் நன்றிங்க வெங்கட்.

   நீக்கு
 4. இந்தப் பூக்கள் இங்கும் அதிகம். சாலை ஓரங்களில் ஏகத்துக்கும் பூத்திருக்கும். இத்தனை நாட்கள் பெயர் தெரியாமல் இருந்தது. இன்று தெரிந்துகொண்டேன். :)

  அழகான படங்கள் அக்கா! நானும் முன்காலங்களில் வாக் போய், படமெடுத்து வலைப்பூவிலும் பகிர்ந்தேன்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "இத்தனை நாட்கள் பெயர் தெரியாமல் இருந்தது" ___________ பதிவுக்கு தலைப்பு வேண்டுமே என தேடிப் பிடித்ததுதான் மகி.

   இது உங்க வலையில் எங்கே இருக்குன்னு இரண்டொரு நாளில் தேடிப் பார்க்கிறேன்.

   நீக்கு