Thursday, April 24, 2014

இந்தப் பூ ! எந்தப் பூ ? ______ 1


இந்தப் பூ எந்தப் 'பூ'ன்னு டக்குனு சொல்லுங்க பார்க்கலாம் !  ம் ......... எங்களுக்கும் ஐடியா வருமில்ல !


ஒருவேளை Stanford பக்கத்துல இருக்கறதாலயோ அல்லது Harvard ரொம்ப தூரத்துல இருக்கறதாலயோ என்னவோ தெரியலீங்க, இப்படியெல்லாம் ஐடியா வந்து கொட்டுது.


இன்று ஒரே ஒரு க்ளூ மட்டும் :  இந்தப் பூவின் செடி முழுவதையும் நாம் சமையலில் பயன்படுத்திக்கொள்வோம்.

முக்கியமாக‌ இதன் முற்றிய காய்களைக்கூட விடமாட்டோம். 'காய்'க்கு பதிலாக வேறொரு வார்த்தையைப் போட்டிருக்கலாம், போட்டால் எளிதாகக் கண்டுபிடித்து விடுவீர்களே !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பதிவின் நீட்சி !!

                                          ஆமாங்க, இது கொத்துமல்லி பூவேதான் !


காமிராவில் பலமுறை முயற்சித்தும் படங்கள் கலங்களாகத்தான் இருக்கும். நேற்று செல் ஃபோனில் எடுத்துப் பார்த்தேன். பிடித்த மாதிரியே படங்கள் பளிச்.


கொத்துமல்லியின் இலை, விதை தவிர‌, பூவை யார் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்று நினைத்தே பதிவிட்டேன். அதை ஏற்கனவே நுணுக்கமாகப் பார்த்து ரசித்திருக்கும் ஜெயராஜு, ஏஞ்சலின் ஆகிய‌ இருவரின் முயற்சிக்கும் நன்றிங்க.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆஹா, இங்கு நேற்று நள்ளிரவிலிருந்தே மழை பெய்து கொண்டிருப்பதால் மீண்டும் கோடை ஸாரி ....... வசந்தம் குளிர்ந்துவிட்டது !


                                   இன்றைய இயற்கை ஷவரில் குளித்துவிட்டு .........

20 comments:

  1. Replies
    1. ம்ஹூம், ஆனாலும் முயற்சிக்கு நன்றிங்க !

      Delete
  2. Replies
    1. ஜெயராஜு,

      கொத்துமல்லியின் 'பூ'தாங்க. உங்களின் வருகையிலும், பதிலிலும் மகிழ்ச்சிங்க.

      Delete
  3. மல்லிப்பூ மல்லிப்பூ :) இது கொத்த மல்லிப்பூ :))

    ReplyDelete
    Replies

    1. ஏஞ்சலின்,

      'மல்லிப்பூ' என்றதும் 'ஆஹா கண்டுபிடிக்கலையே' என்ற என் சந்தோஷத்தை அடுத்த வார்த்தை இப்படி மாற்றிப் போட்டுவிட்டதே !! வருகைக்கும், பதிலிற்கும் நன்றிங்க.

      Delete
  4. கொத்தமல்லிப் பூவா?
    காலையில் பார்த்தேன் . கண்டு பிடிக்க முடியவில்லை. தலை வெடித்து விடும் போலிருந்தது. நல்ல வேளை என்ன பூ என்று எழுதி என் தலையைக் காப்பாற்றி விட்டீர்கள் . நன்றி சித்ரா.....

    ReplyDelete
  5. ஆமாங்க, 'கொத்துமல்லிப் பூ'வேதான். எவ்ளோ அழகா இருக்கு, இல்லீங்களா ? தப்பிய ஒன்றிரண்டு செடிகளில் பூத்துள்ள 'பூ'தான்.

    இன்னும் கொஞ்ச நாளில் வெங்காயம், பூண்டு இவற்றின் பூக்கள்கூட‌ வலம் வரலாம், எதுக்கும் பாத்து வச்சிக்கோங்க.

    ReplyDelete
  6. ஆஹா ! அழகு.

    " 'காய்'க்கு பதிலாக வேறொரு வார்த்தை" இதைக் கண்டதுமே கொத்தமல்லி பூ என்று மனதில் தோன்றியது. ஆனாலும் சரியா என்று தெரியவில்லை. அதனால் கருத்திடவில்லை.

    பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி.

    ReplyDelete

  7. ஓ, நேற்றே கண்டுபிடிச்சிட்டீங்களா !

    வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க தமிழ்முகில்.

    ReplyDelete
  8. எனக்கு மெய்யாலுமே என்ன பூவுன்னு தெரில சித்ரா அக்கா! அழகா இருக்கு,

    ReplyDelete
    Replies
    1. கொத்துமல்லி பூதான் மகி. விதை போட்டு முளைத்தால் ஒன்றிரண்டு செடிகளை விட்டு வையுங்க. குட்டிகுட்டியா பூ பூக்கும். அதுதான் இது மகி .

      Delete
    2. //விதை போட்டு முளைத்தால் // கடுப்பேத்தறாங்க மை லார்ட்! :))) நாந்தான் கலிஃபோர்னியா வந்ததில இருந்து கொத்துமல்லிய முளைக்கப் போட்டுப் போட்டு ஏமாந்து போறேனே...அவ்வ்வ்வ்! ஏனோ தெரில, ஒரு செடி கூட வரமாட்டேன்னுது இங்கே கடைல கிடைக்கும் கொத்துமல்லி விதைகளைப் போட்டால்! வெறுத்துப் போய்விட்டேன் அக்கா!

      Delete
    3. மகியின் கவலை புரியுது. பெரும்பாலும் இங்கு வறுத்த கொத்துமல்லி மாதிரிதான் கிடைக்கிறது. சில சமயங்களில் மட்டும் பச்சைப் பசேல்னு வரும். அதை இரண்டிரண்டாக உடைத்துப் போட்டால் நன்றாக வரும்.

      Delete
  9. இயற்கையுடன் உங்கள் பொழுதுகள் நன்றாகப் போய்க் கொண்டிருக்கின்றன. அதில் எங்களுக்கும் மூளைக்கும் (இருப்பவர்களுக்கு!!) வேலை கொடுத்து, கண்ணுக்கும் விருந்து கொடுப்பதற்கு நன்றிங்கோ!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு வேலை கொடுத்ததைவிட எனக்குப் பொழுது போகலைன்னு கண்டு பிடிச்சதுக்கு டபுள் நன்றிங்கோ !! சும்மா சொன்னேங்க :}

      புழு, பூச்சிகளைப் பார்க்கத்தான் பயம், செடிகளுடனாவது இணைந்து இருப்போமே என்றுதான்.

      Delete
  10. பூக்கள் அழகு. கொஞ்சம் தாமதமாக வருவதில் ஒரு வசதி! :)))

    ReplyDelete
    Replies
    1. ஓ, தாமதமாக வருவதில் இப்படி ஒரு வசதியா ! ஹ்ம்....அடுத்த தடவை வருகைப் பதிவேட்டில் இருக்கறவங்க எல்லோரும் ஆஜரான பிறகுதான் பதிலை வெளியிடுவதாக உத்தேசம் :))

      Delete

  11. மேடம், தேர்தல் பிஸி. தாமதமாக வந்ததால் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. அடுத்தமுறை போட்டி நடக்கும்போது, ஜமாய்த்து விடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தேர்தலை நல்லவிதமா நடத்தி முடிச்சிட்டீங்க போல ! ரிசல்ட் வரும்வரை, வந்த பின்னும் இன்னும் பிசியாயிடுவீங்க.

      இந்த மாதிரியான அறிவுப் பூர்வமான போட்டியெல்லாம் என்னால் மட்டும்தானே நடத்த முடியும். அடுத்த தடவ போட்டி வைக்கும்போது கண்டிப்பா சொல்றேங்க, வந்து கலந்துகொண்டு வெற்றி பெற இப்பொழுதே வாழ்த்துக்கள் !

      Delete