Monday, April 21, 2014

எங்கள் வீட்டுத் தோட்டம் _________ தக்காளி

இந்தப் பதிவை போடலாமா வேண்டாமா என்பதில் குழப்ப நிலை நீடித்ததால் பல மாதங்களுக்குப் பிறகு வெளிவருகிறது. பதிவு கொஞ்சம் சோகமானது, அதனால்தான் :((

ஒரு தொட்டியில் மண்ணை நிரப்பி, உழவர் சந்தையில் இருந்து வாங்கிவந்த தக்காளிப் பழத்திலுள்ள விதைகளைத் தூவிவிட்டு தண்ணீர் தெளித்துவிட்டேன்.


                                      தொட்டி நிறைய செடிகள் முளைத்து வந்தன.


ஒரு தொட்டியில் ஒரு செடி நடலாம். ஆனால் நான் பல செடிகளை நட்டு வைத்தேன். செடிகளைக் கீழே போட மனமில்லை. அப்படியும் நிறைய செடிகள் மீதமாயின. ஏனோ தெரியவில்லை, மேலேயுள்ள இரண்டு தொட்டிகளில் உள்ள செடிகள் இறந்துவிட்டன. பிறகு புது மண் வாங்கிவந்து நிரப்பி மீதமுள்ள செடிகளை நட்டு வைத்தேன்.

எல்லோரும் நன்றாகவே வளர்ந்தனர்.

 தொட்டியிருக்குமிடம் தெரியாமல் சுற்றிலும் படர்ந்துவிட்டனர்.


                                                                    பூக்கள் பூத்தன.

பிஞ்சுகள் விட்டு ........


                                                    நிறைய   காய்களும் காய்த்தன.

காய்த்த காய்கள் பழுக்கவும் ஆரம்பித்தன.

இதுவரை எல்லாமே நல்லாத்தான் போய்கிட்டிருந்தது. ஆனால் நன்கு பழுக்க ஆரம்பித்ததும்தான் பிரச்சினையும் ஆரம்பித்தது. நல்ல சிவப்பாக இருக்கும்போது பறிக்கலாம் என விட்டு வைத்ததுதான் தவறு. அடுத்தடுத்து ஒவ்வொரு பழமாகக் காணாமல் போன‌து.

நான்கூட ஏதோ பறவைதான் வந்து காலி பன்ணுவதாக நினைத்தேன். சில நாட்களில் தொட்டிகள் எல்லாம் கீழே சாய்ந்திருக்கும். செடியின் வெயிட் தாங்காமல்தான் என்று நானே நினைத்துக்கொண்டேன்.


பிறகு ziploc போட்டும் பார்த்தேன்.

ஒருநாள் காலை பேட்டியோவில் ஒரு தொட்டிக் கருகில் குண்டா கறுப்பா ஒன்று அசையவும், கதவைத் திறந்து வெளியே போய் பார்த்தால் ஒரு பெரிய எலி. ஒரே ஓட்டம் உள்ளே வந்துவிட்டேன். பார்த்து பல வருடங்கள் ஆன நிலையில் பார்த்ததும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆக‌ பழங்களை காலி பண்ணியது எலி என்பது தெரிஞ்சு போச்சு.


இனி செடிக‌ள் இங்கிருந்தால் எலிகளின் வரவு அதிகரிக்கும் என நினைத்து செடிகளை அகற்றிவிட்டேன். நிறைய பிஞ்சுகள் இருந்தன. அதுவுமல்லாமல் சிறு பிஞ்சுகளிலும் எலியின் பல் பதிந்திருந்ததால் எதையும் பயன்படுத்தவும் முடியாது.

ஒருசமயம் மேல் வீட்டில் இருந்தபோது தக்காளி வைத்து சூப்பராக வந்தது. அந்த ஆசையில்தான் இந்த முறையும் வைத்தேன்.

இனி தக்காளி வளர்ப்பதாக இருந்தால் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் வளர்க்கக் கூடாது என்பது புரிந்தது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற வருடம் போட்ட விதைகளிலிருந்து தப்புச் செடிகள் இன்னமும்  வந்துகொண்டேதான் இருக்கின்றன.

தக்காளி , மிளகாய், கத்தரிக்காய், இவற்றையெல்லாம் ஒரு இடத்திலிருந்து பிடுங்கி வேறோர் இடத்தில் நட்டால்தான் நன்றாக வளருமாம். நடும்போது வேருக்கு மேலேயுள்ள ஒருசில கணுக்களில் உள்ள இலைகளை முழுவதுமாக நீக்கிவிட்டு அப்பகுதி நன்றாக‌ மண்ணில் மூடும்படி நட்டால், அவ்விடங்களில் இருந்து வேர் வளர்ந்து நன்கு காய்த்து, பழங்களும் சுவையாக இருக்குமாம்.

இன்று காலை வேறோர் இடத்தில் நடுவதற்கு தயாராகவுள்ள நிலையில் .......

புது இடத்தில் நடப்பட்டுள்ளதால் சோர்வினால் இன்று ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்காதாம். நாளை எடுத்துப் போட்டுவிடுகிறேன்.


நானே விட்டாலும் இவர்கள் விடமாட்டார்கள் போலும். இரண்டு நாட்களுக்கு முன் எட்டிப் பார்த்துள்ள மற்றுமொரு தப்புச்செடி.  :)))

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

04 / 23 14

 குட்டிச் செடியும், புது இடம் பிடித்துள்ள பெரிய செடியும்  ......

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

12 comments:

  1. இந்த முறை பாதுகாத்து விடுங்கள்...

    // மேலேயுள்ள இரண்டு தொட்டிகளில் உள்ள செடிகள் இறந்துவிட்டன // அன்பு மனதிற்கு... எண்ணத்திற்கு... வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
    Replies
    1. ஊர்ப் பயணம் இல்லையென்றால் இந்த முறை பாதுகாத்துவிடுவேன் என்றே நினைக்கிறேன். வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

      Delete
  2. இந்தத் தடவை காய் முற்ற ஆரம்பித்ததும் வீட்டினுள் கொண்டுவந்து வைத்துவிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இமா,

      ஐடியாவுக்கு நன்றிங்க. உங்க‌ ஐடியா எனக்குத் தோன்றவில்லையே. இருந்தாலும் உள்ளே வைப்பதுதான் யோசனையாக உள்ளது. 'கராஜ்' அருகில் இருந்தாலாவது பரவாயில்லை.

      செடியில் குட்டிகுட்டியா சிவப்பு நிற எறும்பு மாதிரியே (ஆனால் எறும்பில்லை) ஒரு பூச்சி செடியை விட்டு நகரமாட்டிங்கிதுங்க‌. சோப்புத் தண்ணீர், மஞ்சள் தண்ணீர் தெளித்தும் பலனில்லை. போதாதற்கு ரோலிபோலி வேறு சுற்றுலா போற மாதிரி ஏறி ஏறி இறங்குவாங்க. அதனாலதான் உள்ளே வைக்க பயம்.

      Delete
  3. எனக்கும் தக்காளிக்கும் காத தூரம்!! :) தக்காளி அழகழகா வந்திருக்கு..எலி வந்து தக்காளி சாப்பிட்டுச்சா? ஹிஹிஹி... :) நீங்க ஏமாந்ததால் இப்ப எலியையும் ஏமாத்தப் போறீங்க!! ஓக்கே, ஆல் த பெஸ்ட்...!

    தப்பிப்பிழைக்கும் விதிப்படி பிழைத்த செடிகளுக்கு வாழ்த்துக்கள், மறைந்த செடிகளுக்கு அனுதாபங்கள்!

    ஸ்பிரிங் ஆனியன் வளருது போலிருக்கே..ஆல் த பெஸ்ட்!

    ReplyDelete
    Replies
    1. ஹும்...எலி பழத்த காலி பண்ண‌துமில்லாம எல்லா காய்களையும் கடிச்சுவேறு வச்சிடுச்சு மகி. இவர் வேறு 'ப்ளீஸ், ஒரு காயையும் பறிச்சு உள்ள எடுத்துட்டு வந்துடாத, உனக்கு எவ்ளோ தக்காளி வேணுமோ போய் கடையில வாங்கிக்கோ" என்றார்.

      அவ்வ்வ்வ்வ், வருங்கால பதிவை இப்பவே கண்டுபிடிச்சாச்சா ! ஸ்பிரிங் ஆனியன் ஐடியா உங்க ப்ளாக்கிலிருந்து எடுத்துதான். நட்டு வச்சு மாசக் கணக்காகியும் வெளிய வராத வெங்காயம் இப்போ என்னமா கிடுகிடுன்னு வருதுங்கிறீங்க‌ ! மூனு தொட்டில வளருதாக்கும்.

      Delete
  4. இப்படித் தக்காளியை எலியாருக்குக் கொடுத்துத் தியாகி பட்டம் வாங்கிவிட்டீர்களே!
    வெங்காயச்செடி நன்கு வளர்ந்து , நல்ல அறுவடையாக என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆ.... ஒரு தக்காளிக்கே தியாகிப் பட்டமா ! இன்னும் பல பழ செடிகளை வளர்த்து 'சிலை'க்கு ஏற்பாடு பண்ணலாமான்னு யோசிக்கிறேன்.

      வெங்காயம் 'கடகட'ன்னு வளர்ந்துடுச்சுங்க‌. பறிக்கணும்.

      Delete
  5. அடடா எலியார் தக்காளி சாப்பிட ஆசைப் பட்டு இருக்கார் போல.....

    ReplyDelete
    Replies
    1. அன்றைக்கு மட்டும் எலியாரைப் பாக்கலைன்னா ஏதோ 'பறவை'ன்னுதான் நெனச்சிருப்பேன்.

      Delete
  6. இந்தப் பதிவைப்படித்ததும் எனக்கு 'ஆஸ்வால்ட்' நினைவு வந்துவிட்டது. கார்ட்டூன் நெட்வொர்க்கில் வரும் ஆச்வால்டும் அதன் தோழன் வின்னியும் இப்படித்தான் தக்காளிச் செடிகள் வளர்க்கும். பழங்கள் வந்தவுடன் போய்ப்பார்த்தால் பாதிப் பழங்கள் தான் இருக்கும். பலமுறை இதுபோல ஆனதும் ஒருமுறை யார் வந்து சாப்பிடுகிறார்கள் என்று பார்த்தால் சின்ன சின்னப் புழுக்கள்!

    எலியை போட்டோ பிடிக்க முடியலையா? (நீங்கள் கோவமாக என்னைப் ப்பார்ப்பது தெரிகிறது!!)

    நான் தும்கூரில் இருந்தபோது நிறைய செடிகள் வளர்த்தேன்.....ஹூம் அது ஒரு கனாக்காலம்!

    ReplyDelete
    Replies
    1. அது நகரவேயில்லை. புகைப்படம் எடுத்திருக்கலாம்தான். ஒரு காலத்துல 'எலி'க்கெல்லாம் பயப்படமாட்டேன். பார்த்து பல வருடங்களானதுல இப்போ பயம் வந்துடுச்சு. நம்ம ஊர் எலி மாதிரி ஒல்லி எலி இல்லீங்க. நல்ல்ல்ல குண்டு எலி.

      தும்கூர் மாதிரி இல்லாட்டியும் இங்க சும்மா சில செடிகளை வளர்த்துப் பாருங்க. மனசுக்கு ஒரு சந்தோஷம்.

      Delete