Wednesday, April 2, 2014

செர்ரி ப்ளாஸம் / Cherry blossom

வருடந்தோறும் குளிர்காலம் முடியும் சமயத்தில் பார்ப்பதுதான் என்றாலும் இவை பூக்கும்போது ஒரு குதூகலம் வரத்தான் செய்கிறது. பார்க்கும் உங்களுக்கும் அப்படித்தானே தோன்றுகிறது !

இதற்கென்றே வரும்போலும் காற்றும், மழையும். லேசாகக் காற்றடித்தால் போதும், பூக்கள் எல்லாம் பொலபொல‌வென கொட்டித் தீர்த்துவிடும். தூறல் போட்டதும் மீதமுள்ளவை எல்லாம் முன்னோர்கள் போன பாதையில் நடையைக் கட்டுவார்கள்.

மொத்தமாகப் பார்க்கும்போது வெள்ளைவெளேர் எனத் தெரியும் இந்த குட்டிகுட்டிப் பூக்களை அருகில் சென்று பார்க்கும்போதுதான் தெரியும், சிறிது பிங்க் நிறம் கலந்த வெள்ளைப் பூவென்று !

எங்கள் வீட்டு வாசலிலேயே ஒரு மரம், இன்னும் வரிசையாக பல குட்டிகுட்டிச் செடிகளை நட்டுள்ளனர்.

நடைபாதையில் நிறைய மரங்கள் உண்டு, அதிலொன்று இது.
          
                                                         ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வீட்டு வாசலில் உள்ள மரம் பூத்து முடித்து,  இப்போதைக்கு துளிர் இலைகளுடன் ........ பார்க்க இதுவுமே அழகாகத்தான் உள்ளது !

             ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

8 comments:

  1. //பூக்கும்போது ஒரு குதூகலம்// ம். ;) எனக்கு காற்று வீசும் போது இந்த மரத்தின் அடியில் நிற்கப் பிடிக்கும் - தேவர்கள் பூமாரி பொழிவது போல, ஜாலியா இருக்கும். ;))

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் மலர் அபிஷேகமா :)) நல்ல கற்பனை! அடுத்த வருடம் நிற்கப் பார்க்கிறேன்.

      எனக்கு பூக்கும்போது இருக்கும் ஜாலி அவை கொட்டும்போது இருக்காது. இனி அடுத்த வருடம்தான் பார்க்க முடியும் எனும்போது கொஞ்சம் வருத்தம்தான் வரும்.

      Delete
  2. வீட்டு வாசலில் உள்ள மரமும் மனதை கவர்ந்தது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க தனபாலன்.

      Delete
  3. அழகான மலர்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சித்ரா சுந்தர்.

    ReplyDelete
  4. உங்கள் வீட்டு வாசலில் உள்ள மரம் + பூக்கள் உள்ளம் கொள்ளை போகுதே!

    ReplyDelete
    Replies
    1. உங்களை மாதிரிதான் எனக்கும் வருடந்தோறும் இதன் அழகில் உள்ளம் கொள்ளை போகும்.

      Delete