Friday, May 2, 2014

அரளிப் பூ / Arali poooo ! ............. தொடர்ச்சி


இங்கு வசந்தத்தின் உச்சபச்ச வெயில் நேற்றுதான். சராசரியாக‌ 73 டிகிரி இருக்கணுமாம். ஆனால் நேற்றோ 90 டிகிரியைத் தொட்டது. இந்த வாரம் முழுவதும் தொலைக் காட்சியில் இதைப் பற்றித்தான்  பேச்சு, எப்படி beat the heat பண்ணுவது என்று.

நானும் என் பங்கிற்கு வெயிலை சமாளிக்க காலையிலேயே எங்க அப்பார்ட்மென்டில் உள்ள பூக்களைப் பார்த்து ரசித்துக்கொண்டே 'வாக்' போனேன்.  அவற்றுள் சில அரளிப் பூக்கள் இங்கே ....


நின்று பார்த்துக் கொண்டிருக்கும்போதே தேனை உறிஞ்ச ஒரு வண்டு பூவினுள் நுழைந்தது.

                     முயற்சியைக் கைவிடாத வண்டு . நானும் விடுவதாக இல்லை.


பார்ப்பதற்கு பூவினுள் வண்டு இருப்பதே தெரியவில்லை. பாருங்க, உங்க கண்ணுக்கும் அது  தெரியலைத்தானே !!

ஒருவேளை அரளியும் பூச்சியுண்ணும் தாவரமோ என சந்தேகப்பட்டேன். ஆனால் நொடியில் தொபுக்கடீர்னு வண்டு வெளியேறிவிட்டது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வண்டைப் பார்த்து பயந்துபோன கண்களைக் குளிர்ச்சியூட்ட மேலும் சில அழகான அரளிப் பூக்கள்.


எங்க அப்பார்ட்மென்டில் அரளியும், ரோஜாவும் போட்டி போட்டுக்கொண்டு பூக்க ஆரம்பித்துள்ளன.

ரோஜா ?   வேறொரு பதிவில் ...... !!

13 comments:

  1. avvvvv! திஸ் இஸ் டூ மச்ச்ச்ச்ச்ச்ச்! ;)
    அழகான பட்டிப்பூக்கள்! :)

    ReplyDelete
    Replies
    1. நான்தான் க்ளூ கொடுத்து சூப்பரா போட்டு ஒடச்சிருந்தேனே. அதுக்குத்தான் படிக்கும்போது கணக்கை மட்டுமல்லாது அறிவியல் பக்கமும் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டுமென்பது !

      Delete
  2. மேடம், அரளிப்பூ படங்கள் அருமை. தேனுண்ட வண்டு படமும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க ஆறுமுகம்.

      Delete
  3. உங்கள் போட்டோக்கள் அருமை சித்ரா. இப்படியா ரிஸ்க் எடுப்பார்கள் வண்டு கொட்டியிருந்தால்.......

    ReplyDelete
    Replies
    1. வண்டுக்கெல்லாம் பயப்படமாட்டேங்க. ஒரு ரெண்டு பேர் இருக்காங்க. அவங்கதான் என்னோட வீக்னஸ். ஒருத்தர் ______ புழு, இன்னொருவர் ________ பேரை எழுதக்கூட பயமா இருக்கு அதாங்க மரவட்டை.

      Delete
  4. நல்ல சஸ்பென்ஸ்!
    தோட்டக்கலைக்கு என்று ஒரு வலைத்தளம் ஆரம்பித்துவிடுங்க, கூடிய விரைவில்.
    'சித்ராவின் தோட்டக்கலை' என்று பெயர் வைத்துவிடுங்கள்!
    மகி சொல்லியிருக்கும் பட்டிப்பூக்களும் அரளிப்பூக்களும் ஒன்றா?

    ReplyDelete
    Replies
    1. தோட்டம் வைக்க விருப்பம்தான், ஆனால் இடமில்லையே. நிறைய செடிகளை வச்சு அங்கேயே உக்காந்திடணும். எனக்கு 'பூ'வைவிட மொட்டுகளின் மேல்தான் விருப்பம். எவ்ளோ நேரமானாலும் அதிலிருந்து வெளியில் வர மனசு வராதுங்க‌.

      இந்தப் பூவை 'பட்டிப் பூ'ன்னும் சொல்லுவோம், 'அரளிப் பூ'ன்னும் சொல்லுவோம். ரெண்டுமே ஒன்னுதான்னு நினைக்கிறேன்.

      Delete
  5. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  6. அட பூவுக்குள் வண்டா....

    அழகான படங்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட்,

      தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete