Monday, May 5, 2014

ரோஜா _____ 2


என்னதான் ஊட்டி ரோஸ், பெங்களூர் ரோஸ் என பல வண்ணங்களிலும், 'பல நாட்கள் வாடாமல் இருக்கும்' என வரிசை கட்டி வந்தாலும் படத்திலுள்ள இந்த பன்னீர் ரோஜாவுக்கு அடுத்தபடிதான் அவையெல்லாம். இதன் நிறமா அல்லது மணமா தெரியவில்லை, இந்தப் பூக்கள் என்றால் எனக்குக் கொள்ளை விருப்பம்.


ஊரில் இருந்தவரை பலமுறை முயற்சித்தும் ரோஜா செடியை மட்டும் என்னால் வளர்க்கவே முடியவில்லை. இதன் தண்டுகளை யாரிடமாவது வாங்கி வந்து நிறைய பதியம் போடுவேன். கொடுக்கும்போது அவர்கள் சொல்வது "முதலில் குச்சி காய்ந்துகொண்டே வரும், பிறகுதான் துளிர்விடும்" என்று. ஆனால் நான் நடும்போது குச்சி காயுமே தவிர ஒருநாளும் துளிர் வந்ததில்லை.


"இதன் இதழ்களை சாப்பிட்டால் இந்த ரோஜா நிறத்துக்கே வந்துவிடுவோம்", என்று சிலர் சொன்ன கட்டுக் கதைகளை நம்பி காலையில் தலையில் வைத்துவிட்டு மாலையில் வதங்கிய பிறகு கீழே தூக்கிப் போடமாட்டோம். தலைப் பின்னலை அவிழ்க்கும் போதே பாவமாய் வதங்கியிருக்கும் இப்பூவின் இதழ்களைப் பிய்த்து சாப்பிட்டு விடுவோம்.


அதில் எவ்வளவு தூசி படிந்திருக்கும், தேங்காய் எண்ணெய் எவ்வளவு ஏறியிருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை, நமக்குத் தேவை 'ரோஜா நிறம்', அவ்வளவுதான் !!


கடைசியில 'ரோஜா  நிறம் வந்துச்சா'ன்னு கேக்குறீங்களா ?  ஹ்ம்ம்  ..... இதுதானே வேணாங்கிறது !!


லாண்டரி, ஜிம், ஸ்விம்மிங்பூல், வீடுகளின் முன்னால் வரிசையாக என எங்கும் பூத்துக் குலுங்குகிறது.


இங்கே இருப்பதால் பூத்த அத்தனைப் பூக்களும் செடியிலேயே உள்ளன. நம் ஊரில் என்றால் ?  நானே தினம் ஒன்றாக அத்தனையையும் பறித்து  காலி பண்ணியிருப்பேன்.

இல்லீங்க, இப்போல்லாம் அப்படி செய்யமாட்டேன். நாங்களும் நல்ல பிள்ளையா மாறிட்டோமில்ல !!

15 comments:

  1. Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete
  2. இது பார்க்க நம்மூர் பன்னீர் ரோஜா போல இல்லையே?! யு.எஸ். பூ என்பதால் ரொம்ப செழிப்பா இருக்கோ? :)

    இங்கே என் தோழி ஒருவர் ஏதேதோ நர்சரிக்குப் போய் என்னென்னமோ பேரில ரோஜாப்பூச்செடிகள் வாங்கி வளர்த்தார். ஒரு வருடம் ஆனதும் அடுத்த சீசனில் செடி பூக்கவில்லை என்று நர்சரியில் கொண்டு ரிடர்ன் பண்ணிட்டு புதுச்செடி வாங்கிவந்ததாகச் சொன்னார். நான் இன்னமும் போய்ப்பார்க்கலை! ;)

    உங்க பன்னீர் ரோஜா கதை ஜூப்பரு! ஹிஹி....

    ReplyDelete
    Replies
    1. மகி,

      வந்துட்டேஏஏன், இது பன்னீர் ரோஸ் இல்லையா ! குட்டிகுட்டிப் பூக்கள்தானே. இவ்ளோ நாளும் அப்படித்தானே நினைத்தேன். அளவுக்கதிகமான கவனிப்பினால் ஒபீசிட்டி ஆயிடுச்சோ. ஸூம் பண்ணி எடுத்ததால பெருசா தெரியுதா! பார்த்து ரொம்ப வருடங்கள் ஆனதால எனக்குத்தான் மறந்துபோச்சா ! ஒரே குழப்பம்.

      ஒரு வருடம் கழித்து ரிட்டர்ன் பண்ணாங்களா! பரவாயில்லையே. இங்குதான் இதெல்லாம் நடக்கும்.

      Delete
  3. //நமக்கு தேவை ரோஜா // ஹா...ஹா... நல்ல ஜோக். வந்திச்சான்னு கேட்கமாட்டோம், கவலைப்படாதீங்க!
    இந்த ரோஜாவின் கலரே வேறு மாதிரி இருக்கிறது, இல்லையா? மகி சொல்லியிருப்பது போல செழிப்பாக இருப்பதால் இந்தக் கலரோ?

    பார்க்க வெகு ரம்யம்!

    ReplyDelete
    Replies
    1. நீங்களெல்லாம் சொல்வதைப் பார்த்தால் ஊருக்குப் போனால் ஒருதடவ பன்னீர் ரோஸை நன்றாகப் பார்த்துவிட்டு வரவேண்டும்போல. நீங்க சொல்வதுபோல் செழிப்பினால்கூட இருக்கலாம். கூட்டம்கூட்டமா பூத்திருப்பதைப் பார்த்தால் கொள்ளை அழகுதான்.

      Delete
  4. ரோஜாக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக இருந்தால் எதை ரசிப்பது, எதை விடுவது சொல்லுங்கள். . நம் ஊரில் இருந்தால் எல்லோர் தலையையும் இந்த ரோஜாக்கள் அலங்கரித்திருக்கும் . அங்கே ரசிப்பதோடு மட்டும் தான் . என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பார்த்து ரசிக்க‌ மட்டுமே, தலையில் வைப்பதில்லை. வீட்டில் வேலை இல்லாதிருந்து, பூக்களுக்குப் பக்கத்துல ஸ்டோன் பென்ச் இருந்தால், பேசாம உட்கார்ந்திடலாம், அவ்வளவு அழகுங்க.

      Delete
  5. ஒரு தொடர் பதிவு எழுத உங்களை அழைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள். நீங்கள் எழுதிய பின் உங்களுக்குத் தெரிந்த நான்கு பேரை தொடர்ந்து எழுதச் சொல்லி அழையுங்கள்.
    http://wp.me/p244Wx-GT

    அன்புடன்,
    ரஞ்சனி

    ReplyDelete
  6. உங்கள் ஊர் பற்றி எழுத வேண்டும் சித்ரா. அதைக் குறிப்பிட மறந்துவிட்டேன். சாரி!

    ReplyDelete
    Replies
    1. மெயிலை செக் பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கிறேன், பார்க்கலாம்.

      Delete
  7. வணக்கம்

    ரோஜா பற்றிய பதிவை மிக நன்றாக எழுதியுள்ளீர்கள் ஒவ்வொரு பூக்களும் ஏதோ ஒன்றை சொல்லி தலையாட்டுகிறது போல உள்ளது மிகஅழகு.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன்,

      "ஒவ்வொரு பூக்களும் ஏதோ ஒன்றை சொல்லி தலையாட்டுகிறது போல உள்ளது" _______ உண்மைதானே. அவர்களின் மொழி நமக்குப் புரிவ‌வில்லை. அவ்வளவே.

      தங்களின் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.

      Delete
  8. இது பன்னீர் ரோஜாவோ இல்லை வேறு ரோஜாவோ.. தெரியவில்லை என்றாலும் ஒவ்வொன்றும் அழகு......

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஒருமுறை நம்ம ஊர் காய்கறி மார்க்கெட்டில் "கேரட் ஏன் இவ்ளோ குட்டியா இருக்கு? கோஸ் இவ்ளோ பொடியா இருக்கே" என்ற என் கேள்விகளுக்கு "வேறு எப்படியிருக்கும்?" என்று தம்பி கேட்ட பிறகுதான் புரிந்தது. அப்படித்தான் இந்த ரோஜாவையும் நினைத்துக்கொண்டேன்.

      வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete