Saturday, June 21, 2014

எங்கள் வீட்டுத் தோட்டம் _ புளிச்சகீரை & மீண்டும் தக்காளி !

உழவர் சந்தையிலிருந்து புளிச்சகீரை வாங்கிவந்து கீரையை ஆய்ந்த பிறகு அதன்  குச்சிகளை மட்டும் நட்டு வைத்தேன். எப்படி துளிர்த்து வந்திருக்கிறது பாருங்கள் !  'மீள்சுழற்சி புளிச்சகீரை'ன்னு பேர் கொடுத்திடலாமா !

சென்ற வருடம் ஒரு செடி மட்டும் நட்டு வைத்துப் பார்த்தேன். நன்றாகத் துளிர்த்தும் வந்தது, நான்கைந்து பூக்கள் பூத்துக் காய்களும் வந்தன. ஆனால் வெயிலின் கொடுமையில் எவ்வளவுதான் தொட்டியை நிழல் பக்கமாக நகர்த்திநகர்த்தி வைத்தாலும் ஒன்றும் முடியவில்லை, கருகிவிட்டது.

இந்த வருடமாவது தப்பிப் பிழைக்குதான்னு பார்க்கலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


'காய்ல‌ ஏதோ அழுக்கு இருக்கே'ன்னு நினைச்சிடாதீங்கோ ! எலிக்குப் பயந்து பூண்டு அரைத்து காய்களுக்குப் பூசி விட்டிருக்கிறேன். பூண்டு வாசனைக்கு வந்து கடிக்காது என்ற நினைப்பு.

சென்ற வருடம் போட்ட தக்காளி விதைகளிலிருந்து இந்த வருடமும் செடிகள் வந்த வண்ணமே இருந்தன. அதில் இரண்டு செடிகள் தப்பிப் பிழைத்தன. நல்ல வளமாகத்தான் வந்தன. காய்கள் முற்றி வரும்போது கூடவே ஒரு செடியின் நுனிப்பகுதி பசுமையான இலைகளுடனும், மற்ற பகுதி காய்ந்தார்போலும் ஆகிவிட்டது. வெயிலினாலா? அல்லது பூச்சியினாலா?  தெரியவில்லை. எந்தப் பூச்சியும் கண்ணுக்குப் புலப்படவில்லை.


இருந்தாலும் பயத்தினால்(யாருக்கெல்லாம் பயப்பட வேண்டியிருக்கு பாருங்க) செங்காயாகவேப் பறித்து பழுக்க வைத்திருக்கிறேன். இந்த தடவ ஏமாறாம‌,  உஷாராயிட்டோமில்ல‌ !

                                                            பழுக்க ஆரம்பிச்சாச்சு ...

                                                 ஹையோ ! நெஜமாவே பழுத்தாச்சூ !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கீழேயுள்ள‌து மற்றொரு செடி.


இப்போதைக்கு நன்றாகவே உள்ளது. அப்படியே காயாமல் இருக்க வேண்டுமே என மனம் நினைக்கிறது, பார்க்கலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

[பின்குறிப்பு: பூண்டு  அறுவடையை அப்டேட் பண்ணியாச்சு. அங்கு போய் பார்க்க ஒரேயொரு கண்டிஷன் மட்டுமே. அதாவ‌து விளைச்சலைப் பார்த்து யாரும் சிரிக்கக் கூடாது என்பதுதான்அது ]

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

17 comments:

 1. ஆகா...! இது தான் சந்தோசம்...!

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமா. பெரிய சந்தோஷம்தான்.

   வருகைக்கும் நன்றிங்க.

   Delete
 2. மீண்டும் கோகிலா மாதிரி மீண்டும் தக்காளியா? ம்ம்..தளதளன்னு சூப்பரா இருக்கு. என்ஸொய்! :)

  ReplyDelete
  Replies
  1. ஆஆ, கண்ணு பட்டுடுச்சு.

   Delete
 3. அந்த "பன்னிக்குட்டி வா..வா" பூச்சிய நாங்களும் பிடிச்ச நினைவிருக்கு, ஆனா இப்படி கூப்பிட்டெல்லாம் பிடிக்கல, சும்மா தேடிப் பிடிப்போம்!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா, உங்க ஊரிலும் இந்த விளையாட்டு உண்டா ! நான் வேடிக்கை பார்ப்பதோடு சரி, பிடிக்க பயம்.

   Delete
 4. //ஆனால் வெயிலின் கொடுமையில் எவ்வளவுதான் தொட்டியை நிழல் பக்கமாக//
  AAAAAww!!ஒரு கால் கிலோ வெயில் கடனா தாங்க :) இப்ப வேணாம் ஆனா செப்டம்பர் மாசம் வேணும் :)
  எங்க தக்காளிங்க பழுக்கும்போது வெய்யில் ஓடிப்போகுது ..

  கோங்குரா போட்டீங்களா ..எனக்கு ஆசை ரொம்ப ..பார்ப்போம் தேடி பிடிக்கணும் இங்கே


  //அங்கு போய் பார்க்க ஒரேயொரு கண்டிஷன் மட்டுமே. அதாவ‌து விளைச்சலைப் பார்த்து யாரும் சிரிக்கக் கூடாது என்பதுதான்அது ] //

  சரிங்க ..நான் அங்கே போய் சிரிக்க மாட்டேன் ..இங்கயே சிரிச்சிட்டு போகிறேன் :)))))))))))))

  ReplyDelete
  Replies
  1. இப்போதைக்கு நீங்க கொஞ்சம் 'ஸ்நோ'வை அனுப்பி விட்டீங்கன்னா உங்களுக்கு எப்போல்லாம் தேவையோ அப்போல்லாம் நான் டன் கணக்கில் வெயிலை அனுப்பி வைக்கிறேனே.

   'தேடி பிடிக்கணும் இங்கே' ____ ஓ, அப்படியா ! இப்போதைக்கு இங்கே எங்கும் கோங்குராதான்.

   ஃபார்மர்ஸ் மார்க்கெட்டிலிருந்து 'கோங்குரா'வை வாங்கி வந்து கீரையை எடுத்துக்கொண்டு அதன் குச்சிகளைத்தான் நட்டுவைத்தேன். சூப்பரா வந்திருக்கு. கடையில் வாங்கினால் துளிர்க்குமா தெரியல. எதுக்கும் நட்டு வச்சு பாருங்க. போன வாரம் கூடுதலா இன்னுமொரு தொட்டியில் நட்டு வச்சி துளிர் வந்திருக்கு.

   "எந்தப் பதிவிலுமே சிரிக்கக் கூடாது" என சேர்த்து எழுதியிருக்கலாமோ !

   Delete
 5. சாகுபடி சிறக்க வாழ்த்துக்கள். அப்புறம் மேடம், நான் சிரிக்கவே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. நம்பிட்டேங்க. பத்திரிகையாளர் சொன்னா நம்பாம இருக்க முடியுமா ? வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

   Delete
 6. கொங்குராவில் வ்ன்ன்வேல்லாம் செய்வீர்கள்? ஏற்கணவே பதிவு எழுதியிருக்கிறீர்களா?
  உங்களின் தக்காளி அமோக விளைச்சல் போல் தெரிகிறது. எங்களுக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்களேன். உங்களின் பூண்டு விளைச்சல் பார்க்கப் போய் கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் தக்காளியை அனுப்பி வைக்கிறேன். அப்புறம் பூண்டு விளைச்சலைப் பாத்துட்டு திருஷ்டி போடாம வந்திடணும், சரிங்களா !

   நல்லெண்ணெயில் கடுகு,உளுந்து, காய்ந்த மிளகாய், நிறைய பூண்டு, பெருங்காயம் வறுத்து தனியா வச்சுகிட்டு, அதே எண்ணெயில் கீரை,பச்சை மிளகாயை வதக்கி, வெறும் வாணலில் வறுத்த‌ வெந்தயம், கொத்துமல்லி விதை என‌ எல்லாவற்றையும் சேர்த்து உப்பும் சேர்த்து துவையல் மாதிரி அரைச்சு வச்சுப்பேன். இந்த செய்முறையும் அந்த ப்ளாக்ல இருக்கு.

   Delete
  2. அட இன்ஸ்டன்ட் துவையல் ரெசிபிக்கு நன்றி சித்ரா.

   Delete
 7. தக்காளி விளைச்சல் சூப்பர்! திருஷ்டி சுத்திப் போட்டுடுங்க...:))

  பூண்டு விளைச்சலையும் பார்க்க போயிட்டு இருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆதி,

   நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்ப்பதில் மகிழ்ச்சி.

   போய்ட்டு பூண்டு விளைச்சலைப் பாத்துட்டு வாங்க, அது இதைவிட இன்னும் சூப்பர் விளைச்சலாக இருக்கும் !

   Delete
 8. வாழ்த்துகள்.....

  தக்காளி... புளிச்சக்கீரை என நல்ல அறுவடை!

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க வெங்கட், அறுவடை எப்படியும் ஒரு ரெண்டு வருடத்துக்கு தாங்கும். ஹா ஹா ஹா

   வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

   Delete