Wednesday, June 25, 2014

மியாவ் ..... மியாவ் !

சாதுவாக உள்ள முதல் 'மியாவ்'கள் நம்ம ஊர்க்காரங்க.

கீழே 'உர்ர்ர்ர்' என பார்க்கும் 'மியாவ்' இந்த ஊர்க்காரர்.

2007 ல் ஊருக்குப் போயிருந்தபோது யார் வீட்டுப் பூனையோ தெரியவில்லை, அது தன் மூன்று குட்டிகளுடன் எங்கள் வீட்டிற்குள் வந்தது. குட்டிகள் மகளுடன் ஒன்றிவிட்டன. சாக்லேட், பிஸ்கட் என கொடுத்து தன் வசப்படுத்திக்கொண்டாள்.  அவை விளையாடும்போது மகள் எடுத்த படங்கள்தான் இவை.

காலையில் பார்த்தால் எங்கள் படுக்கையில்தான் இருப்பார்கள். அவள்மீது ஏறி, உருண்டு, புரண்டு விளையாடுவார்கள். ஒரு பத்து நாட்கள் வெளியூர் போய்விட்டு வந்தபோது அவை ஓடி வந்து மகளுடன் விளையாடின.

இங்கு வந்த பிறகும் சில மாதங்கள்வரை அவர்களின் நினைவாகவே இருந்தாள். "அம்மா, நாம இப்போ போனாக்கூட அவங்களுக்கு என்னை அடையாளம் தெரியும்மா" என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.

இரண்டு வருடங்கள் கழித்து 2009_ல் போனபோது அவை இருந்த சுவடே தெரியவில்லை எனும்போது எனக்கும் வருத்தம்தான்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

இன்று காலை  'வாக்' போனபோது பக்கத்து குடியிருப்பு வளாகத்திலிருந்து எங்கள் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த பூனையார் .


                           ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍   Parking lot _ ல்  என்னமா கம்பீரமாய் நடந்து போகிறார் !

ஒவ்வொரு வண்டியைக் கடக்கும்போதும் தன்னை உஷார்படுத்திக்கொண்டு .....
                                                      
                                                   சுற்றுமுற்றும் ஒரு பார்வை ......
                                                          
"நம்மைப் பார்த்து இவங்களே பயப்படும்போது, நாம ஏன் இவங்களைப் பார்த்து பயப்படணும் ?" என அலட்சியமாக‌ நடையைக்கட்டியபோது ........

'வீட்டிற்குபோய் காலை 'டீ'யைப் போட வேண்டுமே' என நானும் வீட்டை நோக்கி நடையைக் கட்டினேன்.

சிறிது நேரம் 'மியாவ்'வுடன் ஓடிப் பிடித்து விளையாடுவது போலவே இருந்தது.
                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

22 comments:

 1. ஹைய்!.. பூஸு!...:)

  அழகாக இருக்குறார் பூஸார்... விடாம கலைச்சு கலாச்சு படம் பிடிச்சிருக்கிறீங்க...:)

  ஆமாம் செல்லப் பிராணிகள் என்றால் யாருக்குத்தான் பிரியம் இல்லாமலிருக்கும்..
  ஊரில் தானாக வந்த பூனைக்குட்டிகள் என்கின்றீர்கள். பாசத்திற்கு கேட்க வேண்டியதில்லைதான்.

  அருமை!.. வாழ்த்துக்கள் சித்ரா!

  ஆமா எங்கே பத்துக் கேள்விக்கு விடைகள்???

  போடுங்க விரைவாக.. அடுத்த பதிவாக..:)

  ReplyDelete
  Replies
  1. முன்பெல்லாம் பரீட்சையில பக்கத்துல பாத்து எழுதிடுவேன். திருத்துபவரைத் தவிர யாருக்கும்தெரியாது. ஆனா இப்போ எல்லோருக்கும் தெரிந்துவிடும். அதனாலதான் விழுந்து விழுந்து படிச்சிட்டிருக்கேன் இளமதி. கூடிய சீக்கிரம் எழுதுகிறேன்.

   வருகைக்கும் மீண்டும் அழைப்பு விடுத்ததற்கும் நன்றிங்கோ.

   Delete
 2. Replies
  1. ரசிப்புக்கு நன்றிங்க.

   Delete
 3. உங்களுடைய cat + walk சூப்பர் சித்ரா.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா என்னைகூட கேட்வாக் போக வச்சிட்டீங்களே !

   Delete
 4. அழகான பூனைகுட்டிகள். பூனையாரின் நடவடிக்கையை ஸ்டெப் பை ஸ்டெப் ஆ அழகா படம்
  எடுத்து போட்டது சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க priyasaki,

   வளர்ப்பதில்தான் பிரச்சினை. இப்படியாவது தூர நின்று ரசிக்கலாமே என்றுதான் எடுத்தேன்.

   உங்க ஜாதிமல்லி தோட்டத்தை அடிக்கடி வந்து பாத்துட்டுப் போவேன்.

   உங்க வருகையில் மகிழ்ச்சிங்க.

   Delete
 5. மியாவ் மியாவ் பூனைக்குட்டி
  மீசைக் காரப் பூனைக்குட்டி ...!

  ரசனை அழகு
  அழிந்த சுவடுகளுக்குள்
  அழிந்திருக்கும் அந்த ஐந்தறிவு ஜீவனும்

  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. சீராளன்,

   உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், அழகான சிறுவர் பாடலை நினைவூட்டியதற்கும் நன்றிங்க.

   Delete
 6. ஹை :))) மீயாவ் !! இவங்களுக்கு நம்மை கண்டா மருந்துக்கும் பயமில்லை சித்ரா ..
  எங்க ரோட்டில் கார்கள் போகும்போதும் நிறுத்தி ஆடி அசஞ்சிதான் தான் கடந்து போவாங்க ..
  இங்கே பக்கத்தில் ஒரு ப்ரைமரி ஸ்கூல் இருக்கு ரெண்டு பொண்ணுங்க கூட ஒரு பூனை பின்னாடியே நாய்க்குட்டி போல காலைல போகும் ..நாங்க யோசிப்போம் அது பத்திரமா வீட்டுக்கு போய் சேருமான்னு !!!தினமும் இப்படி நடக்குது :)
  BTW எங்க வீட்டிலும் ஒரு குட்டி மியாவ் இருக்கா :))

  ReplyDelete
  Replies
  1. ஏஞ்சலின்,

   நம்ம ஊரு பூனையப் பாருங்க எவ்ளோ சாஃப்டா இருக்கு. பயமுறுத்தியே வளத்துட்டோம்போல. ஒருவேளை அந்தந்த ஊர் ஆட்களை மாதிரிதான் இருப்பாங்களோ !

   நெறைய வீட்ல பூனையும் நாயும் ஒன்னாத்தானே வளக்குறாங்க. பழக்கமாயிடும்போல.

   ஆமாம், பாத்திருக்கேன். அவங்களும் அடிக்கடி ப்ளாக்ல வலம் வர்றாங்களே. சமயங்களில் செல்லப் பிராணி வளர்க்கிறவங்களப் பார்த்தா பொறாமையாவும் இருக்கும், இவங்களால மட்டும் எப்படி முடியுதுன்னு ! ஹும்.

   Delete
 7. Replies
  1. ஓ, இதுக்கு 'பூச்சை'ன்னு இன்னொரு பேர் இருக்கா ! வருகைக்கு நன்றிங்க.

   Delete
  2. ஹி..ஹி..இன்னொரு பேர் இல்லைங் சித்ராக்கா! பூச்சை என்றால் மலையாளத்தில் பூனை! :) =)

   Delete
  3. ஹி ஹி ... மகி, குட்டிப்பிள்ளைங்க 'மியாவ்'னு சொல்ற மாதிரி இதுவும் அப்படின்னு நெனச்சிட்டேன்.

   Delete
 8. அடடே, அமெரிக்காவிலும்கூட, பூனை குட்டியாகத்தான் இருக்கும் போலிருக்கிறதே!

  ReplyDelete
  Replies
  1. நீங்கவேற, குட்டியா இருந்தாலும் ஒவ்வொன்னும் சும்மா 'புஸுபுஸு'ன்னு இருக்கும்.

   வருகைக்கும் நன்றிங்க ஆறுமுகம்.

   Delete
 9. மியாவ்....அழகா இருக்கு படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆதி,

   வருகைக்கு நன்றிங்க.

   Delete
 10. எனக்குப் பூனைகள் ரொம்பப் பிடிக்கும், எங்க வீட்டில் பலவருடங்கள் பூனை வளர்த்திருக்கோம். நம்மூர்ப் பூனைகள் கதை சோகமா முடிந்தது வருத்தமா இருக்கு. எங்காவது அவையெல்லாம் நன்றாக இருக்கும் என்று மனதை தேற்றிக்கொள்கிறேன்.
  இந்த ஊர்ப் பூனைகள் பாத்தா பயப்படும்படியாவா இருக்கு? அவ்வ்வ்வ்வ்...அதுங்க ரொம்ப பயந்தாக்குள்ளிங்களா இல்ல இருக்கு? வேற்று மனிதர்களைப் பாத்தா ஒரே ஓட்டமா ஓடிருது இங்கே அக்கம்பக்கத்துப் பூனைங்க. அரிதாக ஒரு சிலர்தான் அமைதியா நின்னு தொட்டுப் பார்க்க விடுவாங்க. அப்புறம் கருப்பு பூனைங்க எனக்கு கொஞ்சம் பயம்ம்ம்ம்ம்! ;)

  ReplyDelete
  Replies
  1. மகி,

   எங்க ஆயா, பிறகு அப்பா இருக்கும்வரை நாய் வளர்த்தாங்க. யார் வீட்டு பூனையாவது அடிக்கடி வந்து விசிட் பண்ணிட்டு போகும்.

   அந்தப் பூனைங்க வேறு இடத்துக்குப் போயிருப்பாங்க'ன்னு நினைக்கிறேன். நாங்க இருந்த ரெண்டு மாசமும் அவங்களை ஆளைக் காணோம்.

   கறுப்பு பூனை'ன்னா பயமா ! இங்கும் சில வீடுகளில் வெளியில் உள்ள புல்'லில் லேசான ஆரஞ்சு நிற, அப்புறம் வெள்ளை நிற புஸுபுஸு பூனை எல்லாம் விளையாடுவாங்க. எல்லா விஷயத்திலும் எதிரும்புதிருமாக இருக்கும் நானும் இவரும் நாய், பூனை விஷயத்தில் அவ்வளவு ஒற்றுமை. ஹா ஹா .

   Delete