Friday, July 18, 2014

வருகிறேன், வருகிறேன், வருகிறேன் !!



வலையுலக நட்பூக்களுக்கு,

மூன்று வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊரை நோக்கிப் பயணம் ! மனதிலுள்ள இறுக்கங்கள் மறைந்து, உடல் முதல் உள்ளம்வரை புத்துணர்ச்சி பெற்றுத் திரும்ப கடவுள்தான் அருள்புரிய வேண்டும்.

Tuesday, July 15, 2014

நிழலின் காரணம் (தொடர்ச்சி)

நேற்று   நிழலை மட்டும் காட்டியவர் இவர்தான் !

                                                    தேனெடுக்க இடம் தேடுகிறார்

                                                                    இடம் கெடச்சாச்சு.

                    உண்மையில் தேனீயின் நிழலைத்தான் படமாக்க முயற்சித்தேன்.

ஆனால் இவங்க அநியாயத்துக்கு சுறுசுறுப்பா  இருந்து எடுக்க விடாமப் பாத்துக்கிட்டாங்க.

லாண்டரி(போடும்) நேரத்தை கொஞ்சம் உற்சாகமாக வைத்திருப்பவர்கள் இந்தப் பூக்களும், பூச்சிகளும்தான் !

Monday, July 14, 2014

நிழலின் காரணம் ?



சிறிய பூவில் நிழல் விழுந்தது பெரிய பூவினால் !

ஆனால் பெரிய பூவில் நிழல் விழச் செய்தது ? .........  யார் ? ......     யார் ?  .........     யார் ?


இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் .....

Friday, July 11, 2014

கீரை அறுவடை !

இந்த தடவை ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் french purslane என்ற வகை பருப்பு கீரை $ 2:00 க்குக் கிடைத்தது. இதன் இலைகள் கொஞ்சம் சிறியதாகவும், லேசாக சிவந்த தண்டுடனும் இருந்தது.

சென்ற முறை போலல்லாமல் இந்த தடவை பருப்புக் கீரையை ஆய்ந்துகொண்டு, நுனிப்பகுதியை நறுக்கிவிட்டு, தண்டு அத்தனையையும் இரண்டு தொட்டிகளில் நட்டு வைத்தேன்.  
                                  
                                                          துளிர் வருதா பாருங்கோ ......

                                                 என்ன அழகு, எத்தனை அழகு ....... !    
                              
                                                               ஒரு கிண்ண்ணம் கீரை !!

குறைச்சலான விளைச்சல்னு யாரும் நெனச்சிடக்கூடாது பாருங்க, அதனாலதான் கட்டிங் போர்டில் பரப்பி விட்டுள்ளேன்.

                                      மீண்டும் துளிர்விடும் என்ற நம்பிக்கையில் ....

பருப்புக் கீரை சாம்பார் வச்சாச்சுங்கோ !!  சிக்கன் & பலாக்கொட்டைப் பொரியலுடனும், வாழைக்காயுடனும்(படத்துக்காக பாதி வேகும்போதே எடுத்து வச்சது) சூப்பராவே இருந்துச்சு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்ற முறை போலல்லாமல் இந்த தடவை புளிச்ச கீரையிலும் கீரையை ஆய்ந்துவிட்டு, குச்சி முழுவதையும் நட்டு வைத்தேன். இரண்டு வாரம் கழித்து மேலும் ஒரு தொட்டியில் .....

                                    ஒரு பெரிய கிண்ணம் நிறைய கீரை கிடைத்தது.

                               இதுவும் மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கையில் ....

சாப்பிடப்     போ  றே    ன் .... துணைக்கு நீங்களும் வாங்கோ ! பிசைந்து, உருட்டி உருட்டி, உள்ளங்கையில் வைக்கிறேன்.

  வீட்டில் பறித்த கீரை, சூப்பர் சுவையில் ......
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த இரண்டு கீரைத் தொட்டிகளையும் அடுத்த ஒரு மாதத்துக்கு யார் பார்த்துக்கொள்வது ?   பேசாம லண்டனுக்கு ........  முக்கியமா புளிச்ச கீரையை பார்சல் பண்ணிடலாமா !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Thursday, July 3, 2014

நுனிக்கிச்சாம் பூ

சென்ற வருடப் பதிவின்போது இந்தப் பூவின் பெயரை உங்களிடமே கேட்டுத்தான் எழுதினேன். ஆனால் இந்த முறை எங்கள் ஊரில் நாங்கள் சொல்லும் பெயரிலேயே எழுதலாமே என விருப்பம்.

போன தடவை  இந்தப் பூவை காமிராவில் பிடிப்பதற்குள் ..... அப்பப்பா.... பெரும்பாடுதான். இந்த முறை அலைபேசியிலுள்ள காமிராவின் உதவியால் கொஞ்சம் எளிதாகவேப் பிடித்துவிட்டேன்.

                                                                     மொட்டாக ....


                                                       பூக்கத் தயாராகும் நிலையில் .....


                                                            பூக்க ஆரம்பிச்சாச்சூ .....


                                                       பாதி பூத்த நிலையில் .....


                               முழுவதும் பூத்த நிலையில் ..... என்னவொரு அழகு !!


சின்ன வயசுல மெனக்கெட்டு ஒவ்வொரு பூவாகப் பறித்து, அதிலுள்ள தேனை உறிஞ்சுவது வழக்கம். கொஞ்ச நாள் கழித்து காய் வந்து, பழம் பழுத்ததும் மீண்டும் ஓடிப்போய் பழங்களை சுவைப்பதும் வாடிக்கையான ஒன்று.

தொலைக்காட்சி, கணினி இருந்தால்தானே அடித்துப் பிடித்து வீட்டுக்கு ஓடியிருப்போம். அவை இல்லாத நிலையில் பார்க்கும் எல்லாமும் ரசனைக்குரியதாகவே இருந்தன.

இன்றும் இப்பூவைப் பார்க்கும்போது நாங்க ரெண்டு பேரும் இதைப்பற்றி அசை போடாமல் நகர மாட்டோம்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Tuesday, July 1, 2014

நூற்றுக்கு நூறு


இளமதி சீக்கிரமா ஓடி வாங்கோ. இனி உங்களைப் பார்த்து எங்கும் ஓடி ஒளிய மாட்டேன். உங்களின் அழைப்பை பூர்த்தி செய்துவிட்டேன் என்ற தைரியத்தில்தான் இதெல்லாம்.

மகி, பொருத்தருள்க. ஊருக்குப் போய் வந்த பிறகு உங்களின் அழைப்பான 'என் வீட்டு பொக்கிக்ஷங்களை' எடுத்து வருகிறேன்.

=============================================================

சாய்ஸ் கொடுத்து எழுதச் சொன்னாலே நானாகவே கொஞ்சம் சாய்ஸ் எடுத்துக் கொண்டுதான் எழுதுவேன். இப்படி சாய்ஸே இல்லாமல் 10 கேள்விகளுக்கும் பதிலளிக்கச் சொன்னால் எப்படிங்க ?

1) சரியானதைத் தேர்வு செய்க, 2) கோடிட்ட இடத்தை நிரப்புக, 3)பொருத்துக, 4) சரியா ? , தவறா ?  என இருந்திருந்தால் ...... ஹும்......எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் !

சீரியஸான பதில் எல்லாம் இல்லீங்க. நீங்களும் ஜாலியாவே  எடுத்துக்கோங்க.

================================================================

1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

இப்போது போலவேதான். நான் கொண்டாடியதெல்லாம் இல்லீங்க‌. 

மகளின் முதல் வகுப்பிலிருந்து  எனக்காக‌ வாழ்த்து அட்டைகள்(popup cards) தயார் செய்வாள். இந்த வருடம் தயாரித்த வாழ்த்து அட்டை இது :)  இந்த வாழ்த்திற்காகவே ஆயிரமாவது பிறந்த நாளைக்கூட கொண்டாட நான் தயார்.

    ==========================================================

2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

இது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.

=============================================================

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

வீட்டுக்காரரையும், மகளையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு சிரிக்காமல் இருக்க முடியுமா ?  எந்நேரமும் சிரிப்பொலிதான்.

==============================================================

4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

இதற்கு வாய்ப்பில்லை. இருந்தால் மின்சாரத்தின் அருமை தெரியவரும்.

ஊரில் என்றால் சகோதர, சகோதரிகளுடன் வெளியில் அமர்ந்து கதைகதையாய் பேசி சிரிப்போம்.

===============================================================

5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?

பார்த்துதானே வளர்கிறாள், அதனால் சொல்ல வேண்டிய அவசியமிருக்காது என்றே நினைக்கிறேன். அப்படியே சொல்ல வேண்டுமானால் உறவின் முக்கியத்துவ‌த்தை சொல்லுவேன்.

================================================================

6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

பசி & கல்வி

================================================================

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

அப்பா, அம்மா:(  விற்குப் பிறகு வீட்டுக்காரரிடம்.

================================================================

8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

இருக்குற பிரச்சினையில "யார்? என்ன சொன்னாங்க?" என தேடிப்போய் பார்க்கும் எண்ணமெல்லாம் இல்லை.

============================================================

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

என்ன சொல்லித் தேற்றுவது ? நான் இயல்பு நிலைக்கு வரவே சில காலம் பிடிக்கும் ...... பிடிக்கவும் செய்தது :( 

=========================================================

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

பிடிக்காத ஒன்று தனிமை.

===========================================================

ம்ம்ம்ம் ...... அதுக்குள்ள கேள்விகள் முடிஞ்சு போச்சா !  இதுக்கா இவ்ளோ நாள் இழுத்தடிச்சேன் !

இவ்வளவு நேரமும் பொறுமையா படிச்சதுக்கு இந்தாங்க கரகர மொறுமொறு எல்லடை. சாப்டுட்டே 100/100 மதிப்பெண் போட மட்டும் மறந்துடாதீங்க :)

விருப்பமுள்ளவங்க‌ தொடருங்கோ !!

================================================================