Saturday, September 6, 2014

பசுமை நிறைந்த நினைவுகள் ..... 1

                                   

இந்த நேரத்தில் பதிவு வருகிறது என்றால்? ...... எல்லாம் ஜெட் லக் செய்யும் வேலைதான்.

ஊரில் இருந்த நாட்களில் முக்கால்வாசி நாட்கள் எனக்குப் பிடித்தமான கிராமத்து வாசனையுடன்தான் வாசம். 'அடுத்த தடவை வரும்போது இங்கேயே வந்து செட்டில் ஆகிற வழியைப் பாருங்க' என்ற எங்கள் அண்ணனின் அன்புக் கட்டளை என்னை நிறையவே யோசிக்க வைத்துவிட்டது. பார்க்கலாம், என்ன நடக்கிறதென!!

என்னதிது ? படத்தில் ஒன்றைப் போட்டுவிட்டு வேறு ஏதேதோ சொல்கிறேன் என்றுதானே பார்க்கிறீர்கள். இதோ வந்துவிட்டேன் இரண்டு கேள்விகளுடன் !

(1) மேலே படத்திலுள்ளது என்ன?         (2)  இதை யார் இவ்வளவு நேர்த்தியாக செய்திருக்கக்கூடும்?

முதல் கேள்விக்கு மிக எளிதாக பதில் வந்துவிடும். ஆனாலும் அது தவறாகத்தான் இருக்கும் என்பது என் எண்ணம். என் எண்ணத்தை யாராவது போட்டு உடைச்சிடுங்களேன் ப்ளீஸ் !

இரண்டாவது கேள்விக்கு பதில் சொல்வது கொஞ்சமல்ல,  நிறையவே சிரமம்.

இரண்டு கேள்விகளுக்குமான பதில்களை அடுத்த பதிவில் சொல்லிவிடுகிறேனே !! அதுவரை யோசிச்சு வையுங்க, வரேன்.

16 comments:

 1. குளவி கூடு
  :) குளவி கூடு கட்டியிருக்கு களி மண்ணில்

  ReplyDelete
 2. ஏஞ்சலின்

  எவ்வளவு துல்லியமா கவனிச்சிருந்தா ...... இப்படி டக்'குன்னு சொல்லுவீங்க , இனி பதிவெழுதுமுன் உங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்போல. உங்க பின்னூட்டத்தை இப்போதைக்கு வெளியிடமாட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. :) சித்ரா ..நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது எங்க வீட்டு அருகில் இப்படி நிறைய பார்த்திருக்கேன் :)
   மண் சொப்பு குடம் என்று நினைச்சிப்பேன்..அதை பிடிங்க கூட ட்ரை செய்வேனாம் ..அதைவிட முக்கியமான விஷயம் என் frock பாக்கெட்டில் எப்பவும் ரெண்டு ரெயில், பூச்சி எறும்பு ,சின்ன வண்டு இதெல்லாம் இருக்குமாம் ..அம்மா சொல்வாங்க ..ஒருமுறை நண்டு தரக்கா என்பார்களே அதையும் பிடிக்க போனீன்னு சொன்னாங்க !!..நான் பிறந்து வளர்ந்தது தர்மபுரி பக்கம் ஒரு அழகிய கிராமம் .இதெல்லாம் சர்வ சாதராணமா பார்த்திருக்கேன் அதான் உடனே கண்டுபிடிச்சிட்டேன் .
   கமெண்ட் ரெண்டு தரம் தட்டி விட்டுட்டேனோ !!

   Delete
  2. ஏஞ்சலின்,

   இல்லையே ஒரு காமெண்ட்தானே வந்திருக்கு.

   ஓ, தர்மபுரி பக்கமா !! பெங்களூர் போகும்போது அந்த வழியாய் போயிருக்கிறேன். நிறைய மாமரங்கள் இருக்கும்னு நினைக்கிறேன்.

   சட்டை பாக்கெட்டில் ரயில் பூச்சி? தைரியம்தான் உங்களுக்கு. நீங்க ரயில் பூச்சின்னு சொல்றதை நாங்க வேறு பெயரில் சொல்லுவோம். அதன் பெயரை எழுதக்கூட எனக்கு பயம். எங்க ஊரில் நிறைய இருக்கும், இங்கு வந்த பிறகுதான் அதனிடமிருந்து தப்பிச்சிருக்கேன்,

   'நண்டு தரக்கா' ___ வயல் நண்டை சொல்றீங்களோ?

   Delete
 3. சுபா,

  நீங்களுமே சரியா சொல்லியிருக்கீங்க. பாராட்டுக்கள். என்னைக் கேட்டிருந்தால் கண்டிப்பாக சொல்லியிருக்கமாட்டேன். என் எண்ணம் தவறு என்பதில் எனக்கு சந்தோஷமே.

  ReplyDelete
 4. அட!.. அருமையாக குட்டி மண் முட்டி!..:)

  நான் என் ஊரிலும் பார்த்திருக்கின்றேன். அதனால் எனது ஊகம்...

  குளவி எனச் சொல்லப்படும் ஒரு வண்டுபோன்ற சிற்றினம். அவை இப்படித்தான்
  ஓலை.. மரக் கிளைகள், வீட்டின் கூரையில் ஓடு அல்லது தென்னோலைக் கிடுகு - இது போன்றவற்றைத்தை தாங்கும் மரங்களில் களிமண்ணை வாயில் சேர்த்து கொண்டு வந்து கட்டும் குளவிக் கூடு!

  என்ன?.. என் ஊகமும் பதிலும் சரிதானா?..:)

  ReplyDelete
 5. இளாமதி உங்க யூகமும் சரிதான். எப்படி இப்படியெல்லாம் ?

  ReplyDelete
 6. அட ... இவ்வளவு பேர் கரெக்டாக சொல்லியிருக்கிறார்களே. யாராவது சொல்வார்கள் என்று பார்த்தால் நீங்கள் அதை வெளியிடுவதாயில்லை. எனக்குத் தெரிந்ததை உளறுகிறேனே!
  அது மலராத மொட்டு என்று நினைக்கிறேன். சரியா?

  ReplyDelete
  Replies
  1. நானும் உங்களை மாதிரிதான். என்னைக் கேட்டிருந்தால் 'மண்பானை' என்றே சொல்லியிருப்பேன். ஆனாலும் 'மலராத மொட்டு' என்பதுதான் புரியவில்லை. வருகைக்கு நன்றிங்க.

   Delete
 7. அழகான படைப்பு - குளவியின் படைப்பைத் தான் சொல்கிறேன்....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 8. நான்கூட பதிவைத்தான் சொல்றீங்களோன்னு பயந்துட்டேன் !!

  வருகைக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
 9. ஆஆ சித்ரா இப்படி 2பதிவு உடனே போட்டால் எப்படி. நான் இப்போது தான் பார்த்தேன் . இவைகள் எங்க வீட்டில் இல்லாத இடமே குறைவு. அழகா இருக்கும் வீடு . ஆனா அவையள் கொட்டினால் வலி தாங்கமுடியாது. நான் பதில் சொல்லவில்லை ஸோ ஸாட்.

  ReplyDelete
 10. ப்ரியசகி,

  இப்படி வருத்தப்பட ஆள் இருக்கும்போது அடுத்த கேள்வியை உடனே தயார் செய்திட வேண்டியதுதான். ஹா ஹா ஹா. பதிவுகள் உடனே உடனே வருவதன் மர்மம் ......... 'ஜெட் லக்'தான். இந்திய நேரப்படிதான் எல்லாமும் நடக்கிரது.

  எங்க வீட்ட்லும் மண், அரக்கு இதெல்லாம் வைத்து குளவி கூடு கட்டும். ஆனால் இதுபோன்ற குடம் மாதிரியானதை இப்போதுதான் பார்த்தேன். வருகைக்கு நன்றிங்க.

  ReplyDelete