வியாழன், 25 செப்டம்பர், 2014

மெரீனா பீச் ____ தொடர்ச்சி


                                  கடலுக்குப் போயிட்டு கால் நனைக்காட்டி எப்படி ?

கடற்கரைக்கு எத்தனை தடவை போனாலும், எவ்வளவு நேரம் அலையில் நின்றாலும் சலிப்பதேயில்லை.  இயற்கையின் பிரமிப்பில் மூழ்கித்தான் போகிறோம்.


செவ்வக வடிவிலான படங்கள் நான் எடுத்தவை. சதுர வடிவிலான படங்கள் ... ஹி  ஹி ......... வீட்டுக்காரரின் செல்லில் இருந்து எடுத்துக்கொண்டேன். 

கடல் அலையில் தேடிக் கண்டுபிடித்த பொக்கிஷங்களான கிளிஞ்சல்களை அடுத்த பதிவில் எடுத்து வருகிறேன்.

5 கருத்துகள்:

 1. மிக அழகாக படங்கள் எடுத்திருக்கிறீங்க சித்ரா. முதல் படம் நல்லதொரு ஷொட்.
  //கடற்கரைக்கு எத்தனை தடவை போனாலும், எவ்வளவு நேரம் அலையில் நின்றாலும் சலிப்பதேயில்லை. இயற்கையின் பிரமிப்பில் மூழ்கித்தான் போகிறோம்.// முற்றிலும் உண்மை.
  விட்டுப்போக மனமே வராது. நன்றி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை, பாராட்டு எனக்கேதான். முதல் படம் நான் எடுத்ததுதான். நன்றி ப்ரியசகி !

   அதென்னவோ கடல், மலை இங்கெல்லாம் போனால் அதைவிட்டு வரவே மனம் வராது. கூட்டத்தில் கடைசியாக வெளியேறுவது நானாகத்தான் இருப்பேன்.

   நீக்கு
 2. எனக்கும் உங்களைப்போலத்தான். எப்போது பீச் போனாலும் அலையில் நிற்காமல் வரவே மாட்டேன். மணல் ஒட்டிக் கொண்ட கால்களும், உப்பு நீரில் நனைந்த ஆடைகளும் அசௌகரியமாக இருந்தாலும் பீச பீச் தான்! அதுவும் மெரீனா விற்கு ஈடு இணை ஏது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களைப் போலத்தான் நானும். எனக்கும்கூட மணல் பற்றியெல்லாம் கவலையில்லை. கடல் அலையில் நிற்க வேண்டும். எவ்வளவு நேரமானாலும் நேரம் போவதே தெரிவதில்லை.

   "அதுவும் மெரீனா விற்கு ஈடு இணை ஏது?" _____ உண்மைதான். அது மக்கள் கூட்டமா? அல்லது அழகான கடற்கரையா? ஒருவேளை இரண்டும் சேர்ந்ததாக இருக்குமோ !!

   நீக்கு
 3. எத்தனை நேரமானாலும் அங்கிருந்து அகலப் பிடிப்பதில்லை.....

  கடலும் மலையும் என்றும் அலுப்பில்லாமல் பார்க்கலாம்!

  படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு