செவ்வாய், 30 செப்டம்பர், 2014

முன்னோர்களின் மாநாடு !!

        எங்கள் வீட்டு மொட்டை மாடியில் நடந்த குடும்பப் பொதுக் கூட்டம் !!


என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன, எவையெல்லாம் நிறைவேற்றப்பட்டன‌ என்பதெல்லாம் எனக்குத் தெரியாது, ஏதோ அவர்களுக்கு வேண்டாத சானலில் இருந்து நான் வந்திருப்பதாக நினைத்து என்னை விரட்டி விட்டுவிட்டனர்.

12 கருத்துகள்:

 1. :) ஹா ஹா சித்ரா !! முன்னோர்கள் ரொம்ப அழகா நம்மை மாதிரியே இருக்காங்க :)
  அதுவும் அந்த ரெண்டாவது படத்துக்கு காப்ஷன் //மெதுவா பேசு அங்கே யாரோ ஒட்டு கேக்கிற மாதிரி இருக்கு //
  இல்லன்னா வா வேற இடம் போய் நம்ம மாநாட்டை நடத்துவோம் //

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட, இது நல்லாருக்கே! பேசாம "படத்தப் பார்த்து கத சொல்லுங்க"ன்னு தலைப்பு வச்சிருக்கலாமோ !! அப்படி வச்சிருந்தா முதல் பரிசு அஞ்சுவுக்குத்தான் !!

   நீக்கு
 2. முக்கியத் தீர்மானங்களை ஒட்டுக் கேட்டாவது எங்களுக்கு சொல்லியிருக்கலாமே சித்ரா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவங்க பார்த்த பார்வையில் ஒட்டுக் கேட்பதாவது, ஒன்னாவது ! தப்பித்தால் போதும்னு படிக்கட்டுகளில் உருளாத குறைதான். ஹா ஹா !!

   நீக்கு
 3. படம் பார்,கதை சொல் அதையே வைத்திருக்கலாம். அஞ்சுவின் கற்பனை அருமை. அவைக்கும் என்ன பிரச்சனையோ யாருக்கு தெரியும். படம் துணிந்து எடுத்துவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப்ரியசகி,

   "படம் பார்,கதை சொல்" _____ இதுவும் நல்லாருக்கே. ரெடியா இருங்க, ஒரு நாள‌க்கு இந்தத் தலைப்புடன் வருகிறேன். அஞ்சுவிடமிருந்து டக்கென்று பதில் வந்துவிடுகிறது.

   அவங்க ஆட்டத்துல நம்மை சேத்தாத்தானே பிரச்சினை என்னவென்று தெரிய வரும். வீட்டுக்காரரும், பெண்ணும் பக்கத்தில் இருந்ததால் துணிந்து எடுத்துவிட்டேன்.வருகைக்கு நன்றி ப்ரியசகி.

   நீக்கு
 4. அப்போதிருந்தே நாம மாநாடு போடறதத்தான் செய்யறோமோ!!? இன்னிக்கு யாரு வீட்ட அதகளம் செய்யலாம்னு இருக்கும்!

  படம் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துளசிதரன் வி. தில்லைஅகத்து,உங்களின் முதல் வருகையில் மகிழ்ச்சியும், நன்றியும்.

   அதகளம் பண்ணியதால்தான் பார்த்ததுமே எல்லோரும் விரட்டுகிறார்கள் போலும்.

   நீக்கு
 5. அமெரிக்காவில் இருந்து எதுவும் வாங்கி வராத உங்களுக்கு குரங்குகள் கண்டனத் தீர்மானம் போட்டிருக்குமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருவேளை இருக்கலாம். எதுக்கும் 'கஸ்டம்ஸ்'ல கொஞ்சம் சலுகை வாங்கிக் கொடுத்திருந்தாங்கன்னா வாங்கி வந்திருக்கலாமே !!

   நீக்கு
 6. எங்கள் மாநாட்டில் உங்களுக்கு இடமில்லைன்னு சொல்லிட்டாங்களா! :)))

  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவங்களோட வழித் தோன்றலுக்கே இடமில்லைன்னா ?

   பின்னூட்டம் ரசிக்கும்படியாக உள்ளது.

   நீக்கு