Saturday, October 18, 2014

முல்லை


எவ்வளவு முயன்றும் வெண்ணிற மொட்டுக்கள் முழுவதையும் நீல வானப் பின்ன‌ணியில் எடுக்க முடியவில்லை. எல்லாம் இந்தக் கொசுவும், பூச்சியும் படுத்திய பாடுதான்.

     சகோதரியின் வீட்டுத் தோட்டத்தில் அடர்ந்து, படர்ந்துள்ள முல்லைச் செடி.

 மாலை நேரத்தில் பச்சை பசேல் என்றிருக்கும் முல்லைச் செடியில், வெள்ளை அரும்புகளைப் பார்க்கக் கொள்ளை அழகுதான் !!

 பூக் கட்டுவது என்றால் எனக்குக் கொள்ளை விருப்பம். அக்காவின் மகள் தினமும் மாலையில் தோட்டத்தில் இருக்கும் முல்லை அரும்புகளைப் பறித்து வந்து நான் கட்டுவதற்காகக் காத்திருப்பாள்.

ஊரில் இருந்தவரை முல்லை, மல்லி, கனகாம்பரம் என பறித்து 'பூ' கட்டும் ஆசையைத் தீர்த்துக்கொண்டேன். நாங்களும் கையால் மட்டுமின்றி காலாலும் கட்டுவோமே !!


ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்காக வாங்கிய அரும்பு. எங்க வீட்ல பூவைப் பிச்சிப்பிச்சிப் போட்டு கசக்குற‌ ஆள் காலேஜுக்குப் போறதால அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.


                                                                  கட்றோம், கட்றோம், ........

                                                        கட்டிகிட்டே இருக்கோம் ......

முழுவதையும் கட்டி முடிப்பதற்குள் கொஞ்சம் பூத்தும்விட்டது. பூத்த பூவைக் கட்டுவதென்பது எனக்குக் கொஞ்சம் சவால்தான். உங்களுக்கு ?? 

7 comments:

 1. அழகான முல்லை..... படத்தில் பார்க்கும்போதே அதன் வாசனை நாசிக்குள்....

  ReplyDelete
 2. மிக அழகான புகைப்படங்கள்! கொள்ளை அழகுமனதைக் கவர்ந்தது!

  ReplyDelete
 3. ‘முல்லைச்செடியில்
  வெள்ளை அரும்புகள்
  கொள்ளை அழகு’

  அடடே! நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா...!

  ReplyDelete
 4. முல்லைபூக்கள் வெகு அழகு! உங்கள் ஊரிலும் கொசு உண்டா என்று ஒரு நிமிடம் தோன்றியது. பிறகுதான் புரிந்தது இது நம்மூரில் எடுத்த புகைப்படம் என்று!
  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். வாத்துக்களுக்கும் நன்றிங்க.

   Delete
 5. மொதோ:) படத்தப் பாத்துட்டு யு.எஸ்.ல எடுத்த படமோன்னு திகைச்சுப்போயிட்டேனாக்கும்! ;)

  முல்லை எனக்கு மிகப்பிடித்த பூ சித்ராக்கா..அதை சரம் தொடுப்பதும் மிகப் பிடிக்கும். ஆனா இந்த முறை பூக்கள் கிடைத்தும், கட்ட நேரமும் சின்ன மேடத்தின் அனுமதியும் கிடைக்கலை. அப்படியும் விடாம கொஞ்சம் முயற்சித்தா, இந்தம்மா எல்லாப் பூவையும் கையில் அள்ளி, கசக்குவதும் கிள்ளுவதுமா இருந்ததால் நான் இடத்தைக் காலி பண்ணிட்டேன். அவ்வ்வ்!

  ஆடிவெள்ளிக்கு இவ்ளோ பூ கட்டினீங்களா?? கட்டின பூவை எல்லாம் என்ன செய்தீங்க..அதைச் சொல்லவே இல்ல??

  விரிந்த பூக்களை கட்டுவது எல்லாருக்கும் கடினமான வேலைதான்.

  //எங்க வீட்ல பூவைப் பிச்சிப்பிச்சிப் போட்டு கசக்குற‌ ஆள் காலேஜுக்குப் போறதால அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அந்த ஆளுக்கும் பூ கட்ட கத்துக் கொடுக்கலையா? கர்ர்ர்ர்ர்ர்!

  ReplyDelete
  Replies
  1. மகி,

   அக்கா வீட்ல எடுத்ததுதான். சுற்றிலும் மரவல்லி தோட்டம் இருந்ததால முழு நீல பிண்ணனில எடுக்க முடியல.

   அவங்க ஊர்ல திருவிழா, வீட்ல‌ ஒரு கூட்டம், அறிவுகால்( தெருக்கதவு) சாமி படங்களுக்கும் பூ போட வேண்டும். அதான் இவ்ளோ பூ.

   எங்க பாப்பா சின்ன வயசுல எட்டஎட்ட கட்டுவா. இப்போ கட்ட விருப்பமில்லையாம். ஆனா கட்டுவதற்கு வசதியா அடுக்கிய‌டுக்கி வச்சா.

   Delete