செவ்வாய், 28 அக்டோபர், 2014

திருவீரட்டானேஸ்வரர் திருக்கோயில் __ திருவதிகை'பண்ருட்டி'யையொட்டி 'திருவதிகை' என்று ஒரு ஊர். சொல்லும்போது 'திருவதி' என்றே சொல்லுவோம். இங்கு பழமையான, புகழ்பெற்ற சிவன் கோயில் ஒன்று உள்ளது.  இன்னும் நிறைய கோயில்களும் உள்ளன.

முகூர்த்த நாட்களில் இங்கு ஏகப்பட்ட திருமணங்கள் நடக்கும். அதற்கு காரணமில்லாமல் இல்லை. கருவறையில் மூலவருக்குப் பின்னால் உள்ள சுவரில் அம்மையப்பன் கல்யாணத் திருக்கோலம் சிற்பமாக உள்ளது.

அர்ச்சகர் சொல்லும்போது தீபாராதணை வெளிச்சத்தில்  இக்காட்சியைக் காணலாம். கொஞ்சம் கவனம் சிதறினாலும் ...... பரவாயில்லை, நின்றிருந்து அடுத்த ஆராதணையின்போது கண்குளிரப் பார்த்துவிட்டு வரலாம்.


நாமும் கோவிலின் உள்ளே போய் வணங்கிவிட்டு வருவோமே !


                                                              திருநீற்று மண்டபம்

                                                              தீர்த்தவாரி மண்டபம்

உள்ளே நுழைந்ததுமே வலது பக்கத்தில் புத்த சிலையொன்று உள்ளது. அப்படியென்றால் ...... என்றால் ........ அந்த நாளில் எங்கள் ஊர் பக்கம் புத்த சமயமும் தழைத்தோங்கி இருந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்.
                                                               குளத்தின் நுழைவாயில்
            
                                                                      சூல தீர்த்தம்          
            
                               கீழே கொடிமரத்திலேயே விநாயகர் சிலை உள்ளது.
                                                                                                                                                    (தொடரும்)

12 கருத்துகள்:

 1. நல்ல ஒரு கோயில் பற்றியத் தகவல் சகொதரி! மிக்க நன்றி பகிர்விற்கு! புகைப்படங்களும் அழகாக உள்ளன!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துளசிதரன் வி. தில்லைஅகத்து,

   உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

   நீக்கு
 2. 'சிவசிவ', எங்க ஊர் கோவிலுக்கு சென்ற பீல்தான் உங்க போட்டோ பார்த்ததும். அழகா இருக்கு படங்களெல்லாம். கொடிமரபடம் ஜூப்பர். பகிர்வுக்கு நன்றி சித்ரா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப்ரியசகி,

   நம்ம ஊர் கோயிலுக்குப் போவதில் இருக்கும் திருப்தியே தனிதான். வேண்டும்போது டக்கென எடுத்துப் பார்த்துக்கொள்ளலாம் என்பதாலேயே இங்கே பதிந்து வைத்தேன்.

   நீக்கு
 3. திருநீற்றின் மனம் கமழும் பதிவு. திருவீரட்டானேஸ்வரக் கோவிலிற்கு சென்று வந்ததைப் போலவே இருந்தது.உங்கள் எழுத்தில் ஊர் பாசம் வெளிப்படுகிறது.
  வாழ்த்துக்கள் சித்ரா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜலஷ்மி,

   திருநீற்றின் மணம் வருவதாக சொன்னதில் மகிழ்ச்சி. நீங்க சொல்லும் ஊர்பாசமும் நிஜம்தான்.

   நீக்கு
 4. கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம். புகைபடங்கள் அருமை. குளம் அழகோஅழகு..பிரதிபிம்பமும் தெளிவாக தெரிகிறது. தரிசிக்க கூட்டிச் சென்றமைக்கு நன்றி சகோதரி.

  நன்றி
  வாழ்க வளர்க
  உமையாள் காயத்ரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உமையாள் காயத்ரி,

   உடன் தரிசிக்க வந்தமைக்கும் நன்றி. தங்களின் பாராட்டுக்கும் நன்றி.

   நீக்கு
 5. அருமையான கோவில். திருவதிகை பற்றி பல முறை கேள்விப்பட்டிருந்தாலும் இக்கோவிலுக்கு சென்றதில்லை.

  படங்கள் மிக அருமை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க பயணக் கட்டுரையில் இந்தக் கோயிலையும் சேர்த்துக்கோங்க. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.

   நீக்கு
 6. படங்களை பார்க்கும்போதே கோவிலுக்கு நேரில் சென்று விட்ட உணர்வு வந்து விட்டது மேடம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆறுமுகம் அய்யாசாமி,

   வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

   நீக்கு