Monday, November 3, 2014

திரு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் __ __ திருவதிகை __ __ ( தொடர்ச்சி )சுவாமி கர்ப்பக்கிருகம் தேர்போல வடிவமைக்கப்பட்டு, பதுமைகளால் அலங்கரிக்கப்பட்டு, அவற்றுள் சில எட்டிப் பார்ப்பதுபோன்ற‌ அழகைக் கீழேயுள்ள படங்களில் காணலாம்.


                                               மேலும் சில அழகிய காட்சிகள்.
                                  முருகன் சந்நிதியின் முன் உள்ள மயில் வாகனம். 
                       
              வெளிப்பிரகாரத்தில் வரிசையாக உள்ள சிவலிங்கத் திருமேனிகள்

                                   அவற்றுள் மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனி இது.

தமிழ்நாட்டில் வேறெங்கும் காணமுடியாத 'பஞ்சமுக லிங்கம்' அதிலொன்று.

                                                               நாவுக்கரசர் சந்நிதி

                        தாயார் பெரியநாயகி சந்நிதியின் முன்பாக உள்ள நந்தியார்

          திரும்பும்போது இருட்ட ஆரம்பித்து, விளக்குகள் போடபட்டுவிட்டன.

         மீண்டும் ஒருமுறை கோபுர தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினோம்.

                     கோயிலுக்குப் பக்கத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தேர்.

10 comments:

 1. சிவன் தொண்டே பெருந்தொண்டு
  ஊரில் உள்ள சமயங்களில் திருமாணிக்குழி பூலோகநாதர் கோவில் திருவதிகை வீராட்டானேஸ்வரர் கோவில் இப்படியாக பொழுதுகள் கழியும் ...

  சிவலோகமாகவே அமைய பெற்றிருக்குமோ அக்காலத்தில் நம் ஊர் சுற்றம் எத்தனை எத்தனை சிவன் கோவில்கள் அற்புதம் திருவதிகை , திருகண்டீஸ்வரம் , கைலாசநாதர் கோவில், பூலோகநாதர் கோவில் , ஆகாய லிங்கம், எய்தனூர், திருமாணிக்குழி , திருமாணிக்குழி அகத்தியர் லிங்கம், திருபாதிரி புலியூர்.....

  ReplyDelete
  Replies
  1. தினேஷ்குமார்,

   சின்ன வயசுல‌ உறவுத் திருமணத்திற்கு சென்றபோது பூலோகநாதர்(மண்டபத்தின் பெயரும் இதுதான்) கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். எதுவும் நினைவிலில்லை. முடிந்தால் மீண்டும் போகவேண்டும். 'அகத்தியர் லிங்கம்' என்றதும் திருமாணிக்குழியும் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது. சமீபத்தில்தான் பாடலீஸ்வரர் கோயிலுக்கும் சென்று வந்தேன்.

   பின்னூட்டம் நெல்லிக்குப்பத்து வலைப்பதிவரிடமிருந்து என்றதும் ஒரு மகிழ்ச்சி. உங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

   Delete
 2. படங்கள் எல்லாமே அழகா இருக்கு சித்ரா. நாங்களும் உங்க பகிர்வு மூலம் வீரட்டானேஸ்வரரைத் தரிசித்தாயிற்று. எங்களையும் தரிசிக்க வைத்த பலன் உங்களுக்கே. "பஞ்சமுக"லிங்கம் இப்போதான் பார்க்கிறேன். எங்க ஊர் கோவிலுக்கு போய் வந்த உணர்வு.மிக்க நன்றிகள் சித்த்ரா பகிர்வுக்கு.

  ReplyDelete
  Replies
  1. ப்ரியசகி,

   இங்கே கோயில் பதிவு இருப்பதைப் பார்க்கும்போது எனக்குமே மீண்டும் உறவுகளுடன் கோயிலுக்குப் போன ஓர் உணர்வு. இங்குள்ள கோயில்கள் என்னதான் பளபளப்பாக இருந்தாலும் 'சரி ஒரு தடவ போயாச்சு, அவ்வளவுதான்" என்பதாகத்தான் தோன்றும்.

   பஞ்சமுக லிங்கத்தில் மற்ற முகங்களைப் பார்க்க முடியவில்லை என்பது கொஞ்சம் வருத்தமே. ப்ரியசகி, பலனை ஆளுக்குக் கொஞ்சம்கொஞ்சமா எடுத்துப்போமே !

   Delete
 3. கோபுரமும் அதில் இருக்கும் அழகழகான சிற்பங்களும் மனத்தைக் கவர்ந்தன. எத்தனை பெரிய கோபுரம்!

  பஞ்சமுக லிங்கமும் இப்போதுதான் பார்க்கிறேன்.
  நம்மூர், நம் கோவில்கள் என்றாலே மனது நிறைந்துவிடுகிறது, இல்லையா?

  ReplyDelete
 4. அருமையான படங்கள். நிச்சயம் அங்கே பயணிக்கத் தோன்றுகிறது......

  ReplyDelete
 5. பொறுமையா அழகழகாப் படமெடுத்திருக்கீங்க சித்ராக்கா..ரொம்ப நல்லா இருந்தது இந்தப் பதிவுகள் எல்லாமே!

  ReplyDelete
  Replies
  1. மகி,

   சிறு வயதிலிருந்தே பலமுறை இங்கு வந்துள்ளதால், முக்கியமாக எங்கள் திருமணத்திற்கு அடுத்த நாள் நாங்கள் போன முதல் கோயில் என்பதாலும் ரசித்து ரசித்து படமெடுத்தேன். அக்காவின் மகனும் தன்னுடைய (புது !) ஐபேடில் ஆர்வமுடன் படமெடுத்தான்.

   இப்போ நினைத்தாலும் சந்தோஷமா இருக்கு.

   Delete
 6. இப்போதான் எல்லாத்தையும் பார்க்கிறேன். படங்கள் கண்கொள்ளா காட்சி.. பஞ்சமுக சிவலிங்கம் பசுபதீசுவரரை ஞாபகப் படுத்தியது. ஸந்தோஷம். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. காமாக்ஷிமா,

   வாங்க ! வாங்க ! ஊருக்குப் போய் வந்ததின் மலரும் நினைவுகளாகத்தான் இந்தப் பதிவுகள். நீங்களும் 'திருவதி'க்குப் போயிருப்பீங்கனு நினைக்கிறேன்.

   Delete