திங்கள், 10 நவம்பர், 2014

மறைந்திருந்து ...... !!


மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன !!


யாரு, என்ன பண்ணிட்டு, எதுக்காக ஒளிஞ்சிருக்காங்க‌ ????

பழத்தைக் கடித்துக்கொண்டிருக்கும் கிளியைப் படமெடுக்கலாம் என முயற்சித்தால் ......... அது காமிரா கூச்சத்தினால் பழம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஓடி ஒளிந்துகொண்டது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 சகோதரி வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் ஒரு கொய்யா மரத்தில் பழுக்கும் பழங்களுக்கு நாங்கள் மட்டுமல்லாமல் கிளி, அணில், ஓணான் என எல்லோருமே வாடிக்கையாளர்கள்தான்.
 
மரத்திலேயே நன்கு பழுத்த பழம்.பழத்தைவிட செங்காய்தான் சுவையாக இருக்கும்.


                                     கொய்யாவைக் கவரக் காத்திருக்கும் ஓணான்.
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

18 கருத்துகள்:

 1. கிளி கொய்யா பழத்தை கொய்ய காத்திருக்கிறதோ ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்முகில்,

   கொய்யாவைக் கொய்து விட்டுத்தான் ஒளிஞ்சிட்டிருக்கு.

   நீக்கு
 2. கீகீ keeee :) கிளியக்கா //கொய்யாபழம் ஒளிஞ்சி சாப்பிட்டிருக்காங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஏஞ்சல்,

   சாப்பிட்டுவிட்டு ஒன்றுமே தெரியாத மாதிரி போய் ஒளிஞ்சாச்சு.

   நீக்கு
 3. இது கொய்யாப்பழம் ருசிக்க வந்த பச்சைக்கிளி போல் தெரிகிறதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆறுமுகம்அய்யாசாமி,

   அல்ரெடி ருசி பாத்துட்டுத்தான் ஒளிஞ்சிருக்காங்க.

   நீக்கு
 4. பச்சைக்கிளி..முத்துச்சரம்..பவளக்கொடி..யாரோ?!

  பச்சைக்கிளியக்கா கொய்யா மரத்தில குந்தியிருக்காங்க..கரீக்டா? :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகி,

   "யாரு?" ___ இதுக்கு மட்டும் பதில சொல்லிட்டு எஸ்கேப்பா !!

   "என்ன பண்ணிட்டு, எதுக்காக" __________ இதுக்கெல்லாம் பதிலைக் காணோமே !!

   நீக்கு
  2. //"என்ன பண்ணிட்டு, எதுக்காக" __________ இதுக்கெல்லாம் பதிலைக் காணோமே !!// ஆங்.....கிளியக்கா கொய்யா மரத்தில உட்கார்ந்து பனம்பழம் கிடைக்குமான்னு யோசிச்சுகிட்டு இருக்காங்க சித்ராக்கோவ்! ;)))) நீங்க போட்டோ எடுப்பீங்கன்னு தெரியாததால சீவிச் சிங்காரிச்சுகிட்டு வரலையாம், அதனால ஒளிஞ்சிகிட்டு வாலை மட்டும் காட்டறாக கிளியக்கா!! :)))))
   -------------------------------
   இதுக்கு மேலயும் எங்கிட்டக் கேள்வி கேப்பீங்க?? ஹாஹ்ஹ்ஹ்ஹா..ஹோஹ்ஹோஓஓ!!
   --------------------------------
   http://mahikitchen.blogspot.com/2012/09/blog-post_18.html இந்த இணைப்பு தங்களின் மேலான கவனத்திற்கு..நன்னி ஹை! :))))

   நீக்கு
  3. உங்கூரு பச்சக்கிளியப் பாக்கவே பயமா இருக்கு. இதுல இந்தக் கிளியிடம் கேள்வி வேறயா !

   நீக்கு
 5. கிளியார் தான் மறைந்திருக்கிறார்...!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. உமையாள்காயத்ரி,

   ஆமாம், கிளியார்தான் ஒளிஞ்சிருக்கார்.

   நீக்கு
 6. என்ன!! ஒரு கிளியார்தான் வந்தாரா.எங்க வீட்டில்(ஊரில்) நிற்கும் மரத்திற்கு எங்கேயிருந்துதான் கூட்டமா வாராங்களோ!!!எனக்கும்,அவைக்கும் போட்டியே நடக்கும் கொய்யாவை கொய்ய. எனக்கும் பழத்தை விட செங்காய்தான் பிடிக்கும்.
  ஓணான்!!! இவையெல்லாம் ஊரிலதான் காணமுடியும். பகிர்வுக்கு நன்றி சித்ரா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப்ரியசகி,

   கிளிகள் கூட்டமாத்தான் வர்றாங்க. ஆனா ஆளைப் பார்த்ததும் ஓட்டம்தான். இந்த ஓணான்கூட‌ ஒரு நாள் விடாம தினமும் வந்தார். இன்னும் தும்பி, பட்டாம்பூச்சி என கொண்டாட்டம்தான்.

   நீக்கு
 7. கண்டேன் கிளியாரை. ;) ஓணான்... பழம் சாப்பிடும் என்று இப்போதான் தெரிகிறது. பூச்சி புழுக்களை மட்டும் சாப்பிடும் என்று நினைத்திருந்தேன்,

  இதே இனம் ஊரில் இருந்தது. செங்காய் சுவைதான். எப்போதும் மரத்தில் கிளிகளும் அணில்களும் வௌவாலும் குரங்குகளும் கொட்டமடிக்கும். தினமும் பாடசாலை விட்டு வந்து என் பிள்ளைகள் மரம் ஏறுவார்கள். நாங்கள் நாட்டை விட்டுக் கிளம்ப இரண்டு நாட்கள் முன்னதாக, இனி யாருக்காக இருக்க வேண்டும் என்பது போல, அன்று அடித்த காற்றில் மரம் மொத்தமாக முறிந்து விழுந்தது. ;(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புனிதா,

   ஓ, ஓணான் பழம் சாப்பிடாதா ! தினமும் அங்கே வந்துகொண்டிருந்ததே ! பாதி கடிபட்ட பழம் மரத்துல இருந்துச்சுன்னா அணில், ஓணான் இப்படி ஏதாவது கடிச்சிருக்கும்னு பேசிப்போம்.

   இரண்டாவது பத்தியைப் படிக்கும்போது மனம் வலிக்கிறது :(

   நீக்கு
 8. அருமையான புகைப்படங்கள்! செங்காய்தான் சுவை ஆம் சகோதரி! எந்தப் பழமானலும், அணில்கள், காக்கைகள் என்று கூட்ட்டம் கூட்டமாக வந்து ரவுண்டு கட்டி அடிக்கும் பாருங்க....அத்தனை அருமை! காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஓ! ஓணான் கூட பழங்கள் சாப்பிடுமா?!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thulasidharan V Thillaiakathu,

   ஆமாங்க, எல்லா பழங்களிலும் பழத்தைவிட செங்காய்தான் அதிக சுவையாய் இருக்கும். இங்கும் பறவைகளின் வருகை அதிகமாக இருந்தது.

   ஓணான் பழத்தைத்தான் சாப்பிட வருதுன்னு நெனச்சிட்டோம் :)

   நீக்கு