செவ்வாய், 18 நவம்பர், 2014

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் _____ சிட்டுக்குருவி


"எங்கள் வீட்டுத் தோட்டத்தில் __ மிளகாய் அறுவடை" என்ற பதிவைப் போட விருப்பம்தான். கொஸகொஸன்னு முளைத்து வந்த மிளகாய் நாற்றுகள் முளைத்த தடமே இல்லாமல் போய்விட்டது. சிட்டுக்குருவிகளும், புறாவும் பண்ணிய அட்டகாசத்தில் ஏற்கனவே இருந்த பருப்புகீரை, புளிச்சகீரையேகூட‌ காணாமல் போய்விட்டது.

ஆனாலும் இந்த குருவிகள் வந்து போவதில் ஒரு சந்தோஷம். நீங்களும் வந்து ரசிக்க ....

எப்படி முயன்றும் இவர்களைக் காமிராவில் பிடிக்க முடியவில்லை. கதவுகளைத் திறக்க முற்படும்போதே விடு ஜூட். இன்னைக்கு ஒருவழியா ஏமாத்தி எடுத்தாச்சு.

                                       யாரோ நம்மை கண்காணிக்கிற மாதிரி தெரியுதே !

                                                                  உஷாராகும் சிட்டு

                                                    ஆஹா, துளிர் ஒன்று தெரியுதே !

                                         துளிரை ஒருகை பார்த்திட வேண்டியதுதான் !
                        
    இப்படித்தான் கொத்திக்கொத்தி துளிர்களை எல்லாம் காலி பண்ணியாச்சு.

                                          குளிர்காய வந்திருப்பாங்களோ !

                                            பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு ....

          ஆளைப் பார்த்ததும் ஒருவர் பக்கத்தில் இருந்த குட்டி ம‌ரத்தில் ஏறியாச்சு.

                                                  மற்றவர் வேறொரு செடியில்

                                        தோட்டத்தில் இறங்கலாமா ? வேண்டாமா ?
                                     
                                                                   இறங்கியாச்சு

                                             எங்கே கண்டுபிடிங்க பார்க்கலாம் !!

                                                    ஜோடியில் ஒருவர் மரத்தில் ...

                                            மற்றவரும் அங்கே போகத் தயாராக ...

புறா ? ......  வேறொரு பதிவில் வருவார்.

19 கருத்துகள்:

 1. ஆஹா...குருவியார் சும்மா சூப்பரா கலக்குறார்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உமையாள்,

   இவர்களின் கலக்கலுக்குக் காரணம் இலையுதிர் காலம்தான்.

   நீக்கு
 2. நம்மூர் குருவி போல அளவில் இருந்தாலும் உடலின் வண்ணம் வேறு மாதிரி இருக்கிறது இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரஞ்ஜ‌னி,

   ஒருசில குருவிகள் நம்ம ஊர் சிட்டுக்கள் மாதிரியும், ஒருசில பலவண்ண நிறத்திலும் உள்ளன. ஒருவேளை இந்த ஊர் சிட்டுக்களாக இருக்குமோ :)

   நீக்கு
 3. சிட்டுக்குருவிகென்ன கட்டுப்பாடு.... இந்த பாட்டு அவங்களுக்கு தெரிந்தா கண்டிப்பா பாடிட்டு திரிவாங்க. அப்படி அவங்க இங்க வெகு சுதந்திரமா. எங்க வீட்டு கூரையில் இவங்க வரவு அதிகம். 1பக்கமில்லை 3 பக்கத்தில வீடு வைச்சிருக்காங்க. 4வது பக்கம் முன்பக்கம் அதனால் விட்டுவைச்சிட்டாங்க. இப்போ குளிர் நேரம்.வரவு அதிகம். போட்டோ மட்டும் எடுக்கமுடியவில்லை. இனிமே எடுக்கனும். நீங்க அழகா எடுத்திருக்கிறீங்க. என்னா சுறுசுறுப்பு!!!!!!! இவிங்க. உங்க வர்ணனை சூப்பர் சித்ரா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப்ரியசகி,

   வீட்ல அடிக்கடி பாடுவீங்களோ. பாடல்களை நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்க.

   இங்கும் குளிர் ஆரம்பித்திருப்பதால் அடிக்கடி வந்து எட்டிப் பார்க்கிறார்கள். இவங்களை முன்பெல்லாம் வீடியோ எடுத்து வைப்பேன். ஒன்றுமே இல்லாத காய்ந்த செடியில்கூட கலர்கலரா, கூட்டம்கூட்டமா வந்து உக்காருவாங்க. பார்க்கவே அழகா இருக்கும். குட்டியா இருக்கறதால இவங்க எங்க இருக்காங்கன்னு வீட்டுக்குள்ளிருந்தே பார்த்து, ஸூம் பண்ணி எடுப்பதற்குள் எஸ்கேப் ஆகிடுவாங்க.

   உங்க வீட்டு சிட்டுக்களை சீக்கிரமே படம் பிடிச்சு போடுங்க. கீச்கீச் சத்தம் சூப்பரா இருக்குமே.

   நீக்கு
 4. படத்திற்கேற்ற பதங்கள். அழகுக் குருவிகள். பார்த்துக்கொண்டே இருக்கலாம். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் காமாக்ஷிமா, குட்டிக்குட்டியா, கலர்கலரா குருவிகளைப் பார்க்கும்போது சூப்பரா இருக்கும்மா.

   நீக்கு
 5. சென்னை வாசிகள் இந்தப் பறவையைப் பார்த்துப் பல வருடங்கள் ஆச்சு. உங்கள் பதிவில் பார்த்ததும் மனம் சிட்டுக் குருவியாய் பறக்கிறதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பறந்து அப்படியே இந்தப் பக்கம் வாங்க, (காமிராவில்)பிடித்துக்கொள்கிறேன்! குளிர்காலம் ஆரம்பித்துவிட்டதால் வந்திருக்காங்க. வசந்தம் வரை வந்துவந்து போவாங்க.

   நீக்கு
 6. கனவில் வந்த காந்தி

  மிக்க நன்றி!
  திரு பி.ஜம்புலிங்கம்
  திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

  புதுவைவேலு/யாதவன் நம்பி
  http://www.kuzhalinnisai.blogspot.fr

  ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

  பதிலளிநீக்கு
 7. அழகு குருவிகள். அவற்றை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

  நான் இவ்வாண்டின் துவக்கத்தில் எடுத்த சில குருவி படங்கள்.

  Little Birds in Snow

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்முகில்,

   உங்க பக்கத்துக்கும் போய்வந்தேன். வெண்மையான இடத்தில் குட்டிகுட்டியா சிவப்புக் குருவிகள் பார்க்கவே அழகா இருக்கு.

   நீக்கு
 8. ஹலோ! நண்பரே !
  இன்று உலக ஹலோ தினம்.
  (21/11/2014)

  செய்தியை அறிய
  http://www.kuzhalinnisai.blogspot.com
  வருகை தந்து அறியவும்.
  நன்றி
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 9. அருமையான படங்கள். குருவி கொள்ளை அழகு! சகோதரி. மிக மிக அழகாக இருக்கின்றது. ரசித்தோம். மிக்க நன்றி பகிர்ந்ததற்கு!

  பதிலளிநீக்கு
 10. இது, நம்ம ஊர் சிட்டுக்குருவி மாதிரி தெரியலையே மேடம். தேன்சிட்டுக்குருவிகள் கொஞ்சம் கலரா இருக்கும். அதுபோலவும் தெரியுது.

  பதிலளிநீக்கு