Friday, November 7, 2014

மா ம் பழம் !!

                                                        

இங்கு பள்ளிக்கு கோடை விடுமுறை விட்டதும் ஜூன் இரண்டாம் வாரத்தில் ஊருக்குக் கிளம்பிவிடுவேன். இந்த வருடம் ஒருசில வேலைகளால் ஜூலை மூன்றாவது வாரம் புறப்பட்டதால் முதலிலேயே எல்லோரிடமும் கேட்டு உறுதி செய்துகொண்டுதான் கிளம்பினேன்.

'என்ன கேட்டேன்'னுதானே பாக்குறீங்க?

"கடைகளில் இன்னமும் மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துகொண்டிருக்கிறதா?" என்பதுதான் அது.

"எப்போது ஊருக்குப் போவோம் ? எப்போது அவற்றையெல்லாம் சுவைப்போம் ?" என்ற எண்ணம் மனதின் ஓர் ஓரத்தில்  ஓடிக்கொண்டேதான் இருக்கும்.

இங்கு 'அவற்றை' என்பது 'நுங்கு, பச்சை கேழ்வரகு, பச்சை மல்லாட்டை, கரும்பு, மாம்ப‌ழம், நாவப்பழம், (செங்காயாகப் பறித்த புளியங்காய்,  முந்திரிப் பழம், பனங்கிழங்கு,  ஹு ம், இவை மூன்றையும் சாப்பிட்டுப் பார்த்து 13 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது), இந்த லிஸ்ட் இன்னும் நீண்டுகொண்டே போகும்.

நாங்க ரெண்டு பேருமே சரியான பழ விரும்பிகள். அதிலும் மாம்பழம் என்றால் கொள்ளை விருப்பம். இப்போதும் கடைக்குப் போனால் மாம்பழம் இல்லாமல் வீடு திரும்பமாட்டோம். இங்குதான் எல்லாப் பழங்களும் எல்லா நாட்களிலும் கிடைக்கிறதே !

என்னதான் இங்கு சில‌ வகை மாம்பழங்கள் கிடைத்தாலும் சிறு வயது முதல் சாப்பிட்டுப் பழகிய சுவை, நாவை விட்டு அவ்வளவு எளிதில் போவதில்லை.

வழக்கம்போல் இந்தமுறையும் ஊருக்குப் போய் திரும்பும்வரை நீலம், ருமேனியா, பங்கனபள்ளி என‌ இஷ்டத்திற்கும் வாங்கி சாப்பிட்டாச்சு.

ஆனாலும் சாப்பிடாமல் விட்டது ஒட்டு மாங்கா பிஞ்சுகளும், ஒட்டு மாம்பழங்களும்தான். நாங்கள் போனபோது அதன் அறுவடைக் காலம் முடிந்துவிட்டதாம். அடுத்த தடவ ....... உஷாராயிடுவோமில்ல !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விழுப்புரத்திலிருந்து சென்னை செல்லும் சாலையெங்கும் ஆங்காங்கே மாம்பழக் கடைகள் இருந்ததில் எங்களுக்குத்தான் என்னவொரு சந்தோஷம் !

                                                                 சாலையோரக் கடை

                                                             
                                                            மான் தண்ணி குடிக்கிதாம் !!

நீங்களும் இந்த வாரத்தின் கடைசி நாளையும் & அடுத்த வாரத்தின் முதல் நாளையும் இதே சுவையோடு கழிப்பீர்கள் என எண்ணுகிறேன் !!

10 comments:

 1. ஹ்ம்ம்ம்....என்ஜாய் பண்ணிருக்கீங்க..! நல்லாருக்கு படமெல்லாம் பார்க்க!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மகி, முடிஞ்ச‌வரைக்கும் நல்லா எஞ்ஜாய் பண்ணியாச்சு.

   Delete
 2. ஆமாங்க அந்த சீஸன் அப்போ சாப்பிடுறது தனி சுகம் தான். பதனீரை விட்டுட்டீங்களே...சூப்பர் பானம். ஆனா இப்பவெல்லாம் முந்தி மாதிரி டேஸ்ட் அதுல இல்லாம பண்ணிட்டாங்க...

  ReplyDelete
  Replies
  1. உமையாள்காயத்ரி,

   சின்ன்ன்ன்ன வயசுல பதனீர் குடித்த நினைவு. அதன் பிறகு அதைப் பார்த்ததில்லை. அப்போதே சொல்லுவாங்க சர்க்கரையைக் கலந்து விக்கிறாங்கன்னு.

   எங்கே கிடைக்கும்னு ஐடியா இருந்தா சொல்லுங்க. ஊருக்குப் போனால் அந்தப் பக்கம் போகும்போது வாங்கி சுவைக்கலாம்.

   Delete
 3. யாருக்குதான் மாம்பழம் பிடிக்காது. ஊரிலிருக்கும்போது பிஞ்சு,காய்,பழம் என விட்டு வைத்ததில்லை. அதுவும் காயில் உப்பு,தூள் சேர்த்து சாப்பிட ஆஹா என்ன ருசி. அதுதான் என்பக்கத்திலும் பழம் மட்டும் எடுத்தீங்களாஆஆ.
  நீங்க சொன்ன "அவற்றை"ல் 2 தவிர(பச்சைமல்லாட்டை??பச்சை கேழ்வரகு??)மிச்சம் எனக்கும் ரெம்ப்ப்ப பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ப்ரியசகி,

   ஆமாம் ப்ரியசகி, உங்க பக்கத்தைப் பார்த்த பிறகுதான் மாம்பழத்தைத் தேடி எடுத்தேன்.

   வயலில் இருந்து புதிதாக பிடுங்கப்பட்ட வேர்க்கடலைதான் பச்சை மல்லாட்டை. அதேபோல் வயலில் இருந்து பச்சையா கேழ்வரகு கதிரை எடுத்துவந்து நுமுட்டி(எங்க ஊர் வழக்கு) அதாவது கசக்கி எடுத்து திண்பது. அல்லது கதிர்களை தீயில் வதக்கி கசக்கி திண்பது. இதைத் தனியாவோ அ சர்க்கரை கலந்தோ அ பச்சை எள்ளுடனோ சேர்த்து சாப்பிட சூப்பரா இருக்கும்.

   இந்த வாரம்கூட உழவர் சந்தையில் இருந்து பச்சை மல்லாட்டை, கரும்பு வாங்கிவந்தேன்.

   Delete
 4. ஆஹா, மேடம். பாத்தாலே சாப்பிடணும்போல இருக்கு. ஆனா எங்க ஊர்ப்பக்கம் எல்லாம், ஏதோ கல்லு வெச்சு பழுக்க வெச்ச மாம்பழம் தானே கெடைக்குது?

  ReplyDelete
  Replies
  1. எங்க ஊர் பக்கம் மட்டும் விதிவிலக்கா என்ன? எல்லா ஊர்லயும் அப்படித்தாங்க கல்லு போட்டு பழுக்க வைக்கிறாங்க. எது, எப்படியோ மாம்பழம் கிடைச்சுதேன்னு ஒருகை பார்த்தாச்சு.

   Delete
 5. மாம்பழம் ரொம்பவே பிடிக்கும்தான். ஆனால் மரத்திலிருந்து விழுபவை அல்லது மரத்திலிருந்து பறித்து சாப்பிடுவது....கடைகளில் தற்போது வாங்க் பயமாக இருக்கின்றதே! அதனால்....

  ஹப்பா தாங்கள் சொல்லியிருப்பது அதாங்க பச்சை மல்லாட்டை, கேழ்வரகு....ம்ம்ம்ம்ம் மிகவும் ரசிக்க வைக்கின்றன....ம்ம்ம்ம் நடத்துங்கள்!

  ReplyDelete
  Replies
  1. முன்பெல்லாம் செங்காய்களாகப் பறிச்சு வந்து வீட்டிலேயே பழுக்க வச்சு சாப்பிட்டதுண்டு. இபோ வாங்க பயம் இருந்தாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சுவைக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் வாங்கியாச்சு. பிறகு பண்ணையிலிருந்தும் வாங்கி ஒருகை பார்த்தாச்சு.

   ஆமாங்க, பச்சை தானியங்கள் எல்லாமே சாப்பிட சூப்பரா இருக்கும்.

   Delete