Wednesday, January 14, 2015

பொங்கல் வாழ்த்து !


உங்கள் அனைவருக்கும் இனிய, மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!

அப்பா வாங்கி வரும் பொங்கல் வாழ்த்துக்களைப் பங்குபோட்டு எடுத்து, வீட்டிலேயே இருக்கும் சகோதர சகோதரிகளுக்கும், பக்கத்து வீட்டில் இருக்கும் தாய்மாமாவுக்கும், எதிர் வீட்டிலிருக்கும் சித்தப்பா பிள்ளைகளுக்கும், உடன் படிக்கும் தோழிகளுக்கும் அவரவ‌ர்களின் முகவரியை எழுதி, ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பிவிட்டு, அவர்களிடமிருந்து நமக்காக வரும் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்ள, தபால்காரர் வரும் நேரத்திற்கு வாசலிலேயேக் காத்திருந்து மகிழ்ந்தது ஒருகாலம்.

இப்போது வலைப்பூ மூலமாக உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை சொல்வதிலும் ஒரு மகிழ்ச்சி. 

பொங்குக, பொங்கலோ பொங்கல் !!

22 comments:

  1. பொங்கல் வாழ்த்துகளை அட்டைகள் மூலம் பகிர்ந்து கொண்ட காலம் - இனிதான நினைவுகள் தான்!

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் நாகராஜ்,

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  2. உங்களுக்கும்,உங்க குடும்பத்தார்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சித்ரா.
    உண்மைதான் நாங்களும் இப்படியான இனிமையான காலங்கள் அவை. எல்லாம் கடந்து வந்தாச்சு.நினைவுகள் தான் இருக்கு.இப்போ எல்லாம் விரல் நுனியில்.
    நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியசகி,

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      'இதைஇதை எனக்கு அனுப்பு' என செலக்ட் பண்ணி சொல்லிவிட்டு அது வந்து சேரும் வரைக்கும் காத்திருந்ததை எல்லாம் நினைக்கும்போது ...... ஹும் ..... இப்போது கோடி கொடுத்து கூப்பிட்டாலும் யாராலும் ஓரிடத்தில் சேர முடியாத நிலை :(

      Delete
  3. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் அன்பு குடும்பத்திற்க்கும், அனைவருக்கும். பழைய ஞாபகங்கள் வருகிறது, உங்கள் பதிவை பார்க்கும்போது. பொங்கல் என்றாலே எங்கள் ஊர் தான் நினைவிற்க்கு வருகிறது, அனைத்து உறவினர்களும் , குழந்தைகள் , குடும்பத்தின் பெரியவர்கள். ஆனந்தமான நாட்கள், இப்பொழுது நினத்தாலும் கரும்பை விட இனிப்பாக இருக்கிறது அந்த நினைவுகள்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. ராஜேஷ்,

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      என்னதான் வாட்ஸப்பிலும், மெயிலிலும் வாழ்த்துக்கள் வந்தாலும், அன்றைய‌ வாழ்த்து அட்டையைத் திருப்பித்திருப்பிப் பார்த்து திருப்தி அடைந்த‌து வேறு. நீங்கள் எந்த ஊர் பக்கம் ?

      Delete
    2. அப்பாவிற்க்கு நாகப்பட்டினம் , அம்மாவிற்கு சிதம்பரம், அம்மாவின் உறவினர்கள் அனைவரும் பண்ருட்டியில்,நெய்வேலி இருக்கிறார்கள். தற்போது குடும்பம் இருப்பது சென்னையில்.

      Delete
    3. ஓ, சரிசரி. நன்றிங்க, " பொங்கல் என்றாலே எங்கள் ஊர் தான் நினைவிற்க்கு வருகிறது" _____ என்றதால் உங்க ஊர் பக்கம் எது என தெரிந்துகொள்ளும் ஆவலில்தான் கேட்டேன்.

      Delete
  4. பொங்கல் வாழ்த்துகள் அக்கா! மலரும் நினைவுகள்..வாழ்த்து அட்டைகளைத் தேடி எடுப்பதே ஒரு இனிமையான நிகழ்வுதான்..அதை போஸ்ட் பண்ணுவதும்..பதில் எதிர்பார்த்த காலங்களும் இனி மனதோடு மட்டுமே!! :)

    ReplyDelete
    Replies
    1. மஹி,

      நாங்களாக வாங்கியது கிடையாது. அப்பா வாங்கி வருவதுதான். ஆனாலும் அதற்கும் ஒரு பெரிய போட்டியே நடக்கும். இனிய நினைவுகள்தான்.

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete
  5. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
    கடந்த கால நினைவுகளின் இனிமை அருமை.

    ReplyDelete
    Replies
    1. உமையாள்,

      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete
  6. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தன‌பாலன்,

      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete
  7. இனியபொங்கல் வாழ்த்துக்கள் சித்ரா

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சலின்,

      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete
  8. வர வேண்டிய பொங்கல் வாழ்த்தெல்லாம் இன்னும் வரவில்லையென்று, பொங்கல் முடிந்து ஒரு வாரம் கழிந்தும், தபால்காரரை, தேடிச்சென்று விசாரித்தது ஒரு காலம். இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள் மேடம்!

    ReplyDelete
    Replies
    1. ஆறுமுகம்,

      தபால்தலை ஒட்டாமல் வரும் வாழ்த்துக்களை ஆவலுடன், கொஞ்சம் கோபம் கலந்து பணத்தைக் கொடுத்து வாங்கி மகிழ்ந்த‌தும் உண்டு.

      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete
  9. இனிய பொங்கல் வாழ்த்துகள். வாழ்த்து அட்டைகளில்தான் எத்தனை விதம் இருக்கும். யாவையையும் ஞாபகப்படுத்தி விட்டது உன் பதிவு. காலம் மாறினாலும், மனப்பதிவுகள் மாறுவதில்லை. இனிக்கும் ஞாபகங்கள். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. காமாக்ஷிமா,

      குழந்தைகள், சாமி, இயற்கை காட்சி, சினிமா நடிகர்கள் என எத்தனை விதங்கள் ! நினைவுகள் எல்லாமும் மனதில் அப்படியேதான் இருக்கின்றன.

      உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றிம்மா. அன்புடன் சித்ரா.

      Delete
  10. பொங்கல் வாழ்த்து அட்டைகள் எத்தனை விதம் விதமாக இருக்கும்...போஸ்ட் கார்ட் சைசிலிருந்து அதையும் விடச் சிறிய சைசிலிருந்து பெரிய சைஸ் வரை...பல வகையாய்...இனிமையான நினைவுகள்...மனதை விட்டு அழியாத நினைவுகள்...

    ReplyDelete
    Replies
    1. கீதா,

      உங்கள் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete