Monday, February 9, 2015

புயலுக்குப் பின்னே ..... !!


வெள்ளியன்று பலத்த காற்றுடன் ஆரம்பித்த மழை ஞாயிறு இரவு வரை சில நேரம் விட்டுவிட்டும், ப‌ல நேரம் தொடர்ந்தும் பெய்து நிலத்தை மட்டுமல்லாது, மனதையும் நனைத்தது.

                                                   துளிதுளி துளிதுளி மழைத்துளி !

                                 மழைத் துளியைக்கூட விட்டு வைக்காத காற்று !
         'காற்றுடன் மழை'ன்னு நான் சொன்னதை இப்பவாச்சும் நம்புறீங்களா ! 

                                                          மழைத்துளி 'மத்தாப்பூ'வாய்

                    இவ்வளவு மழையும் பெய்த பிறகு வானவில் வராட்டி எப்படி ?

ஞாயிறு மாலை ஒரு முடிவுக்கு வந்ததுபோல் வானவில் தோன்றினாலும் கூடவே மழையும் பெய்துகொண்டுதான் இருந்த‌து.

 மழையின்போது காலை நேர வானம்
                                   திடீர் வெயிலும், இருட்டிய மேகமூட்டத்துடனும்,

                        நேற்று காலை மரத்தின் பின்னனி மட்டும் பளிச்'சென !

                                    இன்று காலை அழகிய நிலவுடன் அமைதியாக !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 இன்று இன்னும் கொஞ்சம் 'பளிச்' நிலவுடன்.
பயந்துடாதீங்கோ, அமாவாசை வரைக்கும்லாம் அப்டேட் பண்ணும் ஐடியா ஏதும் இல்லீங்கோ !

22 comments:

  1. Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  2. ஆகா ......அனைத்து படங்களும் அழகு ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி அனுராதா.

      Delete
  3. அழகழகான படங்கள்! வானவில்...சான்ஸே இல்ல! மனசை அள்ளுது போங்க! பகிர்வுக்கு நன்றி! :)

    ReplyDelete
    Replies
    1. காமிராவுல வந்தது அளவுல கம்மி மஹி. நேர்ல செம சூப்பர். இவ்ளோஓஓ பெரிய வானவில்ல நான் பார்த்ததே இல்ல. ஹும் ... அந்நேரம் ஃப்ளைட்ல போனவங்க முழுசா பார்த்திருப்பாங்க.

      Delete
  4. உங்களுடன் சேர்ந்து நாங்களும் ரசித்தோம், படங்கள் ஸூபர் , மேகங்களும், மழைத்துளியும்,வானவில்லும் சேர்ந்து அழகான பதிவு. இந்தமுறை 50 % உங்களுக்கும், 50 % அலைபேசிக்கும் க்ரெடிட். மழை துளி படம் மிகவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் கொஞ்சமா மதிப்பெண் கூடுதுபோல. பாராட்டுகளுக்கும் நன்றி ராஜேஷ்.

      Delete
  5. ஆஹா...லயித்து லயித்து...படத்தை பிடித்து, அதை எங்களுடன் பகிர்ந்தமை....என முடிக்க முடிய வில்லை. ஏனெனில்...நானும் லயித்து விட்டேன் அதான் செய்தி.....

    ReplyDelete
    Replies
    1. உமையாள்,

      அதை ஏன் கேக்குறீங்க. லயித்தது எல்லாம் உங்க மழை பதிவுலயே வந்து விழுந்துவிட்டதே. உடன் சேர்ந்து லயித்ததுக்கு நன்றி உமையாள்.

      Delete
  6. வா.வ்வ்!! சூப்ப்ப்பரா இருக்கு சித்ரா. போட்டோஸ் அனைத்தும் சூப்பரோ சூப்பர்!!!

    ReplyDelete
    Replies
    1. ப்ரியசகி,

      மூன்றுநான்கு நாள் ஜாலிதான் ஃபோட்டோக்களில். அதனால நல்லா வந்துடுச்சு. 'வாவ்வ்'க்கும் நன்றி ப்ரியசகி :)

      Delete
  7. வணக்கம்
    இரசிக்கவைக்கும் படங்கள்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ரூபன்.

      Delete
  8. அழகான படங்களுடன் அற்புதமான வர்ணனைகள். பாராட்டுக்கள்.

    //பயந்துடாதீங்கோ, அமாவாசை வரைக்கும்லாம் அப்டேட் பண்ணும் ஐடியா ஏதும் இல்லீங்கோ !//

    ஹைய்யா ! அப்போ ஜாலி தான். :)

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும், குதூகலமான பின்னூட்டத்திற்கும் நன்றிங்க‌.

      Delete
  9. படங்களெலலாம் அழகாகவும் அசலாகவும் இருக்கிறது. மழைத்துளியிலிருந்து நிர்மலமான ஆகாயம் வரை மனதைக் கவருகிறது. ரஸித்தேன் அன்புடன்

    ReplyDelete
  10. காமாக்ஷிமா,

    உங்க பின்னூட்டமும் மனதைக் கவர்ந்துவிட்டது.

    ReplyDelete
  11. அழகான படங்கள்....

    அமாவாசை வரை அப்டேட்! ஹாஹாஹா.....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  12. எப்பை இதை மிஸ் பண்ணினோம்...அழகு கொள்ளை அழகு....

    ReplyDelete
    Replies
    1. "அழகு கொள்ளை அழகு" ____ இயற்கையாச்சே !

      வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கீதா.

      Delete