செவ்வாய், 28 ஏப்ரல், 2015

வானத்தின் வர்ண ஜாலம் _ 1


குளிர்காலத்தில் வானம் அப்படியே எடுத்துப்போட்ட மாதிரி ஒரே பழுப்பு நிறமாக இருக்கும். மற்ற சமயங்களில் மேகமே இல்லாமல் ஒரே நீல நிறமாக இருந்து சலிப்படைய வைக்கும்.

வசந்தத்தில்தான் வானம் மேக மூட்டத்துடனும், சூரியனின் தோற்றம் & மறைவின்போது வித்தியாசமான நிறங்களுடனும் ரசிக்கும்படி இருக்கும்.

எங்கள் வீட்டிலிருந்து மறைவின்போது வானம் நடத்தும் நாடகத்தை மட்டுமே பார்க்க முடியும். கிடைத்தவரை என்ஜாய் பண்ண வேண்டியதுதான் என்பதால் அழகான மாலை நேரத்தை சில சமயங்களில் க்ளிக் பண்ணி வைப்பேன்.

சமீபத்தில் அவ்வாறு க்ளிக் பண்ணிய படங்கள்தான் இவை.

 

26 கருத்துகள்:

 1. வணக்கம்
  அழகிய படங்களை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், படங்களை ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி ரூபன்.

   நீக்கு
 2. ஆஹா... வானம் எனக்கொரு போதிமரம்... நாளும் எனக்கது சேதி தரும் என்ற பாடல் வரிகள் காதோரம் ரீங்கரிக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் எம்போன்றவர்களுக்கு வெற்றுவானம் கூட ஒரு வரம்தான். அழகிய காட்சிப்பதிவுகள்... பாராட்டுகள் சித்ரா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. நீங்க அங்கே பாடுவது இதோ இங்கே கேட்கிறதே!!

   எதிர் வரிகையில் வீடுகள் இருப்ப‌தால் அதன் பின்னால் உள்ள அழகான மலையில் சூரியன் மறைவதை எடுக்க முடிவதில்லை. வருகைக்கு நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு

 3. இயற்கை தினமும் இப்படிப் பல நூறு கவிதைகளை எழுதிக்கொண்டுதான் இருக்கிறது. அதைப் படிக்கவும் ரசிக்கவும்தான் நமக்கு நேரமும், பொறுமையும் இல்லாது போய்விட்டது. படங்கள் அருமை மேடம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓடுற ஓட்டத்துல நின்று ரசிக்க நேரம் ஒதுக்குவது சிரமம்தான். வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ஆறுமுகம்.

   நீக்கு
 4. எனக்கும் கீதமஞ்சரி மாதிரி பாட்டுகள் ஞாபகம் வருகிறது. "சித்திர செவ்வானம் சிரிக்கக் கண்டேன்" சூப்பரா அழகா இருக்கு உங்க ஊர் வானம். எனக்கு சூரியன் வருவதும்,மறைவதும் காணலாம். விடிகாலை வானம் ஒருவித அழகென்றால்,அந்திமாலை இன்னொரு அழகு.
  எல்லா படங்களும் அழகா இருக்கு. இயற்கை அழகை ரசித்துக்கொண்டேஏஏஏ இருக்கலாம். நன்றி சித்ரா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆர்ப்பாட்டமில்லாத அந்தப் பாடல் எனக்கும் பிடிக்கும்.

   உதயமும், மறைவும் அழகாய் இருக்குமே, எடுத்துப் போடுங்க, ஜெர்மன் வானத்தையும் பார்க்க வேண்டாமா :) வருகைக்கு நன்றி ப்ரியா.

   நீக்கு
 5. இயற்கையின் அழகுக்கும் அது செய்யும் ஜாலத்திற்கும் ஈடு இணை ஏது? உங்கள் படங்களை ரொம்பவும் ரசித்தேன்.
  சமீபத்தில் ஸ்ரீரங்கம் போயிருந்தபோது கோவிலடி என்ற ஊருக்கு போயிருந்தோம். நகரத்திற்கு அப்பால் இருந்ததால் வானத்தையும் நட்சத்திரங்களையும் ஆனந்தமாக ரசிக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், கிராமத்தில் நட்சத்திரம், நிலா வெளிச்சமெல்லாம் பளிச்னு தெரியும்.

   நேரம் இன்மையின்போதும் வருகை தந்து ரசித்ததில் மகிழ்ச்சிங்கோ.

   நீக்கு
 6. வானம் வர்ணங்கள் அடித்துக் கொண்டு விழா நடத்திக்கொண்டு இருக்கிறதோ? அது சொல்லும் சேதி .........கற்பனை செய்ததில் ......... சொல்லத்தெரியவில்லை. மிஞ்சியது மகிழ்ச்சி தான்.
  அருமையான பகிர்வு. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹும்ம்ம்ம் ? யாரோ புதுசா இருக்காங்களே :)

   என்றாவது ஒரு நாளில்தான் இது மாதிரி வரும். பார்க்க அழகா இருக்கும்.

   ரொம்ப நாட்களாகவே வலைப்பக்கம் வராததால் ஒருவேளை அமெரிக்க விஜயமோ என நினைத்துக்கொண்டேன். வருகைக்கு நன்றிங்கோ !

   நீக்கு
 7. அழகாக படம்பிடித்துள்ளீர்கள் தோழி. வான்வெளியில் வண்ணங்கள் கொட்டி எழிலோவியம் படைத்த கலைஞன் யாரோ ?

  பகிர்வுக்கு நன்றி தோழி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவித்துவ‌மான பின்னூட்டதிற்கும், வருகைக்கும் நன்றி தமிழ்முகில்.

   நீக்கு
 8. மிகவும் அழகான ரஸிக்க வைக்கும் படங்கள். இம்மாதரி சூழ்நிலையில் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றும். அதிக நாட்கள் வெளியிலே வராதிருந்துவிட்டு ஒருநாள் வான வெளியை அண்ணாந்து பார்த்தால் எவ்வளவு அழகான வானம், இதைக்கூட பார்க்காமல் வீட்டினுள்ளே அடைந்து கொண்டு என்று தோன்றும்., உன் இந்தத் தொகுப்பைப் பார்த்ததும் எவ்வளவு ரஸிக்க விஷயம் இருக்கிறது. என்று தோன்றுகிறது.
  படங்கள் வானவில்போல கலர்க்கலராய். அசத்தலாக இருக்கிறது. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காமாக்ஷிமா,

   வேலை, பிரச்சினைகளுக்கு மத்தியில் ரசிக்க நேரம் ஒதுக்குவது சிரமம்தான்.

   வழக்கம்போல் உங்கள் பின்னூட்டமும் வானவில்லாய் மலர்ந்து மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நன்றிம்மா, அன்புடன் சித்ரா.

   நீக்கு
 9. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
  அன்பு வணக்கம்
  உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
  இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
  நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதுவை வேலு,

   உங்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 10. பார்க்க பார்க்க சலிக்காத வானம்...ஈர்க்கும் எப்போதும் அழகு....

  பதிலளிநீக்கு
 11. வர்ண ஜாலம்.... நிஜம் தான்.... எத்தனை எத்தனை வண்ணங்கள்.

  அருமையான காட்சிகள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.

   நீக்கு
 12. இயற்கை நம்க்கு அளிக்கும் பாடங்களும், கவிதைகளும், ரசனைகளும் ஒவ்வொரு நிமிடமும் ....பெருகிக் கொண்டேதான் இருக்கின்றது. மக்கள் நாம் தான் அதனை எல்லாம் ரசிக்காமல் வேலையற்ற எண்ணங்களில் உழன்று கொண்டு ஒவ்வொரு நொடி ஆனந்தத்தையும் இழந்து கொண்டிருக்கின்றோம். நாம் வாழ்க்கையை, இயற்கையின் அற்புதங்களை ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தங்களின் ஒவ்வொரு புகைப்படமும் வெளிப்படுத்துகின்றது. தாங்கள் ரசிக்கின்றீர்கள் என்பதும் தெரிகின்றது. எங்கள் கட்சி......அருமையான புகைப்படக் கலைஞராகவும் இருக்கின்றீர்களே! பேசாமல் ஃபோட்டோக்ராஃபி கற்றுக்கொண்டுவிடலாமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், ஃபோட்டொகிராஃபி கற்றுக்கொண்டால் காமிரா பற்றி ஏதாவது தெரிந்துகொள்ளலாம்.

   "எங்கள் கட்சி" ____ ஹா ஹா ஹா ! ஆமாம், நம்ம ஊர்ல இருந்திருந்தா எப்படியாவது உங்க குரூப்ல இல்லாட்டியும் ஒரு ஓரமா நின்னாவது வேடிக்கைப் பார்த்திருப்பேன், ஹும்ம்ம் ! வருகைக்கு நன்றி கீதா.

   நீக்கு