Monday, May 18, 2015

அணில் # 2

                                          வீட்டின் முன்னால் உள்ள புல் தரையில் !

                சும்மா இருக்கும் அணிலை வம்புக்கிழுத்தால் இப்படித்தான் ஆகும் !!

மேலேயுள்ள படங்கள் எல்லாம் ஜனவரியில் குளிர் காய்ந்தபோது எடுத்தவை ...

21 comments:

  1. Replies
    1. வருகைக்கும், படங்களை ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  2. அழகாக படம் பிடித்துள்ளீர்கள் தோழி.

    நானும் இன்று தான் அணில் பற்றிய பதிவு ஒன்றை எனது புகைப்பட வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது பாருங்களேன்.

    Eastern Gray Squirrel

    ReplyDelete
    Replies
    1. தமிழ்முகில்,

      உங்க பதிவைப் பார்த்துவிட்டு வந்தேன். இரண்டு பதிவுகளின் படங்களும் ஒன்று போலவே உள்ளன. வருகைக்கு நன்றி முகில்.

      Delete
  3. ஊரில் நான் "வளர்ப்புபிராணிகள் பேசத்தொடங்கினால்... கற்பனை செய்தே பார்த்திருக்கேன். உங்க பதிவு ஞாபகப்படுத்தியது அதை. மிக அழகான படங்கள் சித்ரா. அணில் போஸ்க்கு ஏற்றவாறு டயலாக். நல்ல கற்பனை.

    ReplyDelete
    Replies
    1. இங்கும் அதே கதைதான். 'இப்போ அது என்ன நினைக்குது, இப்போ இது என்ன நினைக்குது' என்றெல்லாம் சொன்ன‌துண்டு. இப்பவும் வாக் போகும்போது மரங்களைப்பற்றியும், குருவிகளைப்பற்றியும் ஜாலியா பேசிக்கிட்டேதான் போவோம்.

      நம்மைப் பார்த்து இவங்க யாருக்கும் சுத்தமா பயமே கிடையாது, அதனால்தான் எடுக்க முடிஞ்சுது. வருகைக்கு நன்றி ப்ரியா.

      Delete
  4. ரசனை...ரசனை...அணில் பேச்சு ( மறைமுகமாக சித்ராவின் குரலில்)...நினைத்து பார்க்க சூப்பராக இருக்கு...

    புல் அழகான மெத்தை போல் இருக்கு...அதான் அணிலார்....ஜமாலிக்கிறார்...போல....

    அணிலார் அழகாய் இருக்கிறார்....தங்கள் கை பட்ட புகைப்படத்தாலோ...? நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஹும், நல்ல அழகான புல் தரை, விரட்டவும் ஆள் இல்லை. நம்ம ஊர் அணில்தான் ஒல்லியா இருக்கு. இங்கு இவையெல்லாம் சும்மா புஸுபுஸுன்னு சூப்பரா இருக்கு. ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி உமையாள்.

      Delete
  5. அணில் பிள்ளை அழகு :) எங்க வீட்டுக்கும் ஒருவர் தினமும் வரார் ,birdfeeder இலிருக்கும்ம் உணவை சாப்பிட ..அவருக்கும் பழங்கள் வெட்டி வைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஓ, வீட்டுக்கே வர்றாங்களா ! பார்த்துக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. துறுதுறுன்னு விளையாடுவது ஒரு அழகு. சாப்பிடுவதை ஃபோட்டோ எடுத்துப் போடுங்க.

      வருகைக்கு நன்றி ஏஞ்சலின்.

      Delete
  6. அணில்ப்பிள்ளை அழகா போஸ் குடுத்திருக்கு. சென்னை அணில் மாதிரி நோஞ்சான் இல்லை.நிதானமா,பதட்டமில்லாமல் உன் கமென்ட்டுக்காக போஸ் கொடுத்துள்ளது. நல்ல படங்கள்

    ReplyDelete
  7. அணிலே அணிலே அழகிய அணிலே அருகினில் வாராயோ,தரிசனம் தாராயோதான். எனக்கும் பிளாகருக்கும் இரண்டு முறை திரும்பினால்தான் வரும்.. வின்டர் அணில்,நம்மூர் அணில் ஸம்மர் அணில்.. பயப்படாத அழகு போஸ் கொடுத்திருக்கு. அதுவும் வெயில்காய வந்ததோ என்னவோ? கண்ணுக்கு விருந்து. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. காமாக்ஷிமா,

      இரண்டு பின்னூட்டங்களுமே வந்துவிட்ட‌ன.

      விண்டர்ல குண்டா இருக்கும் இவங்க சம்மரில் மேல் மற்றும் வால் பகுதியில் முடி கொட்டிப்போய் கொஞ்சம் நம்ம ஊர் அணில் மாதிரி பார்க்க பாவமாத்தான் இருக்கும். இங்கு விரட்டும் ஆட்கள் இல்லாததால் ஜாலியா, பயமில்லாம சுத்துறாங்க. அணிலைப் போன்றே பின்னூட்டமும் அழகா இருக்கே ! அன்புடன் சித்ரா.

      Delete
  8. ஒரு நல்ல சிறுகதை ஆசிரியராக வரக்கூடிய எல்லா தகுதிகளும் உங்களிடம் இருக்கின்றன. படங்களுடன் கூடிய கதைகள் எழுத ஆரம்பியுங்கள்.
    அணில் உங்களை நன்றாகவே மிரட்டி இருக்கிறது! அழகான படங்களுக்கும், அதற்கேற்ற வசனங்களுக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கண்டுபிடித்து வெளிப்படுத்தியதற்கு மகிழ்ச்சியும், நன்றியும். எழுத ஆசைதான், ஆனால் கொஞ்சம் சோம்பேறித்தனம்.

      நம்ம ஊர் அணில் மாதிரி இவங்க பயந்து ஓடி ஒளிவதெல்லாம் இல்லை. அப்படியே நின்று பார்ப்பதால் ஏற்பட்ட உணர்வுதான் பதிவாகிவிட்டது. வருகைக்கு நன்றிங்க.

      Delete
  9. படங்களும் அருமை; கற்பனையும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ஆறுமுகம்.

      Delete
  10. மிகவும் ரசித்தோம்! கமென்ட்ஸ் சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. ஓ, உங்களுக்கும் பிடிச்சிருக்கா ! ஒரே மகிழ்ச்சிதான் போங்க ! வருகைக்கு நன்றி கீதா.

      Delete