Tuesday, July 28, 2015

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ மிளகாய் செடி



காய்ந்த மிளகாயின் விதைகளைத் தூவியதில் நிறைய நாற்றுகள் முளைத்தன. அவற்றைப் பிடுங்கி இங்கொன்றும் அங்கொன்றுமாக நட்டு வைத்தேன். இடம் பற்றாக்குறை இருந்தும் நன்றாகவே வளர்ந்தன.

                      நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து,

                                                              பூக்க ஆரம்பித்து .....

                                                      காய்க்கவும் தொடங்கியாஆஆச்சு :)
கீழேபோட மனமில்லாமல் ஜாதிமல்லி தொட்டியில் நடப்பட்ட செடியிலிருந்து ....

புதினா செடிகளுக்கிடையே போட்டிபோட்டு வளர்ந்து காய்க்க ஆரம்பித்துள்ள செடி.
                               இன்று முதன்முதலாக பறித்த மூன்று மிளகாய்கள்

பிஞ்சு மிளகாய்தான், இரண்டாக அரிந்ததும் பச்சைமிளகாயின் வாசம், நெஜமாத்தான், நம்புங்க, சும்மா கமகமனு வந்தது.

                                          பழங்கள் பழுக்க ஆரம்பிச்சாச்சு !!


Monday, July 20, 2015

Silver beach / வெள்ளி கடற்கரை !! __ தொடர்ச்சி

அலையின் வேகம் குறைந்து இறுதியில் நுரைத்தலுடன் அமைதியாக ஓடி வரும்  அலையின் ஓரத்தையும் ரசிப்போமே !! !!

                                           
                                              ஒவ்வொரு கிளிஞ்சலும் ஒரு அழகு !!
மெரீனாவிலும், கடலூரிலுமாக நாங்கள் தேடி எடுத்த கிளிஞ்சல்களுடன், ஏற்கனவே தான் தேடி, சேமித்து வைத்திருந்த கிளிஞ்சல்களை உறவு ஒருவர் கொடுக்கவும் இங்கே எடுத்து வந்துவிட்டாள் மகள்.

              காமாஷிமா, நீண்ட நத்தையார் உயிருடன் இருப்பதைப் பாருங்கோ !!

Tuesday, July 14, 2015

Silver beach / வெள்ளி கடற்கரை !!


பிடித்த்த்த கடற்கரை ..... கடலூர் வெள்ளி கடற்கரை, அது வேறொன்னுமில்லீங்க, நினைத்த மாத்திரத்தில் 'டக்'கென போய்விடலாம். கஸகஸன்னு கூட்டமும் இருக்காது, அதனால நல்லா ஜாலியா சுத்திசுத்தி வரலாம்.


முன்பெல்லாம் பெரியார் கலைக்கல்லூரி வரைக்கும்தான் பேருந்து, ஆட்டோ எல்லாம் போகும். அதற்குமேல் நடைவண்டிதான். ஒரு காக்கா, குருவிகூட இருக்காது. போகவே கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்.

ஆனால் மே மாதத்தில் மட்டும் முதல் மூன்று(ஐந்து?) நாட்கள் கோடைவிழா நடக்கும் சமயத்தில் அங்கே கூட்டம் அலைமோதும்.

இப்போது எல்லாமும் மாறிவிட்டன. கடற்கரை வரை வாகனங்கள் செல்ல சாலை வசதி உள்ளது. அதேபோல் குட்டீஸ்களுக்கு விளையாடுமிடமும் உள்ளது. சாதாரண நாட்களிலேயே மக்கள் வந்த வண்ணமுள்ளனர்.

நண்பகல் நேரம், இருட்டிக்கொண்டு, தூறல்வேறு வந்ததால் வெறிச்சோடிக் கிடக்கும் சிறுவர் விளையாடுமிடம்.

வாங்க, அப்படியே நாமும் காலாற நடந்து கடலையும், அலையையும் ரசிப்போம் !

                                           கரையில் மோதி உள்வாங்கும் அலை !!

அலை போனபின் ..... ஹைய்யோ !! ஆனால் உயிருடன் இருந்ததால் எடுக்கவில்லை !

                                  அலையில் ஆட்டம் போட்ட மூன்று சிறுவர்கள் !

அலைபேசியில் படமெடுக்கவும் 'என்ன எடுங்க, என்ன எடுங்க" என அம்மூவரில் இருவர் மட்டுமே போஸ் கொடுத்தனர்.

மூன்றாமவருக்கு ஆசையும் வெட்கமும் போட்டிபோட .... ஹா ஹா .... ஆசை வென்றுவிட்டது. 
கூட்டம் இல்லாததால், "இன்றைக்கு வருமானம் அவ்வளவுதான்' என்ற சோகத்தில் !!

                                                                             மேலும் சில படங்கள் அடுத்த பதிவில் ....