Wednesday, July 8, 2015

மீண்டும் பூண்டு & சின்ன வெங்காயம்

                                                                          பூண்டு

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் பூச்சி வராமல் இருப்பதற்காக ஐந்து தொட்டிகளில் சென்ற வருட பூண்டு அறுவடையின்போது கிடைத்த குட்டிக்குட்டிப் பூண்டுகளையும், இரண்டு தொட்டிகளில் பூண்டுப் பல்லும் நட்டு வைத்தேன்.

                             02 /02 /15  ல்   பூண்டுப்பல் இப்படி முளைத்து வந்திருக்க

பூண்டு விதைகளோ கீழேயுள்ள மூன்று தொட்டிகளில் மட்டும் இப்படி புல் மாதிரி(தேடிக் கண்டுபிடித்தால்தான் தெரியும்) வந்திருந்தது. பூண்டுதான் எனத் தெரியாமல் இவற்றில் ஒன்றைப் பிடுங்கிவிட்டேன்.

பிறகு சுதாரித்து முகர்ந்து பார்த்தால் அவ்வ்வ்வ்வ் அது பூண்டு செடிதான். மீண்டும் நட்டு வைத்தேன். பயன் இல்லை.

முதலில் கொஞ்சம் நோஞ்ஜானாக இருந்த விதைச்செடிகள் பிறகு நன்றாக வளர்ந்துவிட்டன.
மே(05/28/15) மாதக் கடைசியில் இலைகள் கொஞ்சம் பழுத்தாற்போல் இருக்கவும் இரண்டு செடிகளை மட்டும் பிடுங்கிப் பார்த்தேன். ஒன்றில் பூண்டு, மற்றதில் ஙேஏஏஏ !

பிறகு ஜூன்(06/08/15) மாதத் தொடக்கத்தில் பயபக்தியுடன் ஒன்றைப் பிடுங்கினேன். ஹைய்ய்யோ பூண்டு இருந்தது :))))))

                                                               காய்ந்தபோது (6/12/15)

இப்போது(6/12/15) ஒரு செடி மட்டும் பாக்கி இருந்தது, அதற்குமேல் பொறுமை இல்லை, பிடுங்கிவிட்டேன், ஆனால் பூண்டுதான் மிஸ்ஸிங்.

ஒரு வாரம் காயவைத்தும் ஈரமாகவே இருந்தது. எனவே தனித்தனியாகப் பிரித்துக் காயவைத்து(06/18/15) சமையலில் சேர்த்தாச்சு.

பூச்சி வராமல் இருப்பதற்காக வளர்க்கப்படும் பூண்டுச் செடியில் இருந்து பூண்டு கிடைத்தால் மகிழ்ச்சிதானே :)

     *********************************************************************************
                                                             சின்ன வெங்காயம்

வாங்கிய சின்ன வெங்காயத்தில் இரண்டு முளைத்திருந்தன. அவற்றை சும்மா தொட்டியில் நட்டு வைத்தேன். எங்கே வரப் போகிறது எனப் பார்த்தால் ......... இரண்டும் கொத்துக் கொத்தாக முளைத்துவந்தன :)

                                                           வளர்ந்து வரும் நிலையில்

                                                           அறுவடைக்குத் தயாராக

மெல்லியவை சின்ன வெங்காயத் தாள்கள், கொஞ்சம் பெரியதாய் இருப்பவை, ஆமாங்க  பெரிய வெங்காயத் தாள்களேதான்.

சாம்பார் என்றால் மட்டும் எல்லாவற்றையும் பறித்துவிடுவேன். மற்ற நாட்களில் தேவையானதை மட்டும் பறித்துக்கொள்வேன். நிறைய பறிச்சாச்சு.

சென்ற வருடம் நட்டு வைத்த பெரிய வெங்காயத் தாள்களும் இன்னமும் ஜம் ஜம்மென்று உள்ளன.

வெங்காயத்தாள்தான் எனக்கு வேண்டும், அதனால் வெங்காயம் இருக்கா? இல்லையா? என பிடுங்கிப் பார்க்கவில்லை.

நிறைய வீடுகளில் பெரிய வெங்காயம் பல்பு மாதிரி வெளியில் வந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

             **************************************************************************
கொசுறு : விரைவில் எங்க வீட்டில் ____ ம் & ____ ம் காய்க்கப் போகின்றன என்பதற்காகத்தான் கீழேயுள்ள இந்தப் படங்கள், ஹா ஹா !!


*********************************************************************************

10 comments:

  1. பூண்டு அறுவடை காணக் காண ஆசையாக உள்ளது. வெங்காயத் தாள், வெங்காயம் நன்றாக வந்துள்ளது.

    கடைசி இரண்டு படங்களில், முதல் படம் கொடியில் மலர்ந்த மலர் போன்று உள்ளது. என்ன என்று தெரியவில்லை. இரண்டாவது மிளகாயின் மலர்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. பூண்டு நல்ல வாசனையும்கூட. போன வருஷம் அஞ்சு வாரங்கள் ஊருக்குப் போயி வந்து பார்த்தால் வெங்காயம் அப்படியே இருந்துச்சு.

      ஆமாம், மிளகாய் பூதான். இன்னொன்னு பாவக்கான்னு நினைக்கிறேன். நிறைய கதையெல்லாம் இருக்கு, காய்த்ததும் வந்து சொல்றேன். நன்றி முகில்.

      Delete
  2. உங்கள் ஆர்வம் மேலும் செழிக்கட்டும்... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி தனபாலன்.

      Delete
  3. வெங்காயம்,பூண்டு,பருப்புக்கீரை அடுத்து பாகற்காயா? lதானாக முளைத்த பாகற் கொடியா? ஜமாய்சித்ரா ஜமாய். மிளகாய் நிறைய காய்க்கும். தொக்கு செய்துவிடு. ஸாம்பாருக்கு காய்கள் ரெடியா தொட்டித் தோட்டம். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. காமாஷிமா,

      நம்ம ஊர் கடையில் குட்டிக்குட்டி பாவக்காயா இருக்கே(உங்க பிட்லை ஞாபகமும் வந்தது), வங்கலாம்னு பார்த்தால் ஒன்னுமே நல்லால்ல, ஆனால் பழம் ஒன்று வெடித்து நல்ல சிவப்பு நிறத்தில் விதை வெளியில் சிதறி இருந்தன. ஐந்து விதைகள் எடுத்து வந்து போட்டதில் ஒன்று மட்டும் முளைத்து வந்துள்ளது.

      காய்த்த பிறகுதான் தெரியும் அது பிட்லையாகுமா அல்லது புளிக்குழம்பு ஆகுமா ? ஹா ஹா ஹா !! அன்புடன் சித்ரா.

      Delete
  4. பூண்டு வெங்காயம் இரண்டுமே ஒரே மாதிரிதான் இருக்கும் ....அதாங்க செடி...

    சி.வெங்காயம்...முளை விட்டுருந்துச்சுனா மண்ணில் வைத்து வளர்ப்பதுண்டு....துளசி வீட்டில் பெரிய தோட்டம்....கீதா வீட்ட்ல் ஹும் சென்னைல அதனால பால்கனில தம்மாத்துண்டு...வளர்த்ததுண்டு....ஆனா இப்ப இல்ல ரெண்டு செல்லங்கள் இருக்கே....துளசி வீட்டுலயும் ஒரு செல்லம் உண்டு...ஆனா பெரிய்ய்ய்ய்ய்ய தோட்டம் செல்லத்திற்குனு தனி இடம் அதனால ப்ராப்ளம் இல்ல....அதுவும் துளசி கிராமம்...கீதா மாநகரம்...(என்ன பெருமைப்பா!!! ஆனா தோட்டம் இல்லையேனு ஆதங்கமும் உண்டு....)

    உங்க ஃபோட்டோஸ் அருமையா இருக்கு சரி சரி எங்களை நினைச்சுக்கிட்டு சாப்பிடுங்க....

    ReplyDelete
    Replies
    1. சகோ துளசி & கீதா,

      ////// கீதா மாநகரம்...(என்ன பெருமைப்பா!!! ///// ______ மெட்ரோ ரயில் வந்தபிறகும் பெருமை வராட்டி எப்படி ? ஒரு நாளைக்கு ஏறி & இறங்கி பதிவோட வாங்க !

      ////// அதுவும் துளசி கிராமம் //// ________ அப்படின்னா சுத்தமானக் காற்று & நீர். இது கொஞ்சம் பொறாமையா இருக்கு :)

      ம் ம் காய்ச்சதும் நெனச்சிட்டே சமைச்சு சாப்பிட்டுட்டு, என்ன சமைச்சேன்னும் வந்து சொல்றேன். நன்றி கீதா.

      Delete
  5. நானும் பூண்டு ரோஜா செடியில் பூச்சிவராம இருக்க போட்டேன். பின் பக்கத்தில் காலியாக இருந்த இடத்தில் மிகுதியான இடத்தில் போட்டுவைத்துவிட்டுவந்தேன்.அவ்வ் என்ன மாதிரியோ எனதெரியாது. வந்துபார்த்தால்தான் தெரியும். உங்க பூண்டு நல்லமாதிரி வந்திருக்கு. நாங்களே பயிரிட்ட காய்களுக்கு தனிசிறப்பும்,ருசியும் சித்ரா. அடுத்த போகமும் தயார் போல. பதிவு+படங்கள் போடவும்.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியா, ஒன்னும் பயப்பட வேணாம், பூண்டு , வெங்காயம் எல்லாம் வெயிலுக்கு தாக்குப் பிடிக்கும். பூச்சிக்காகத்தான் நானும் எல்லாத் தொட்டியிலயும் பூண்டு நட்டு வச்சிருக்கேன்.

      மிளகாய் காய்ச்சிருக்கு, ஆனால் பாவக்கா பூக்கிறதோடு சரி, காய் விடவில்லை. ஆனால் தோட்டத்தில் பாவக்காயின் கசப்பு வாசனை ஜோரா வருது. நன்றி ப்ரியா.

      Delete