Tuesday, July 14, 2015

Silver beach / வெள்ளி கடற்கரை !!


பிடித்த்த்த கடற்கரை ..... கடலூர் வெள்ளி கடற்கரை, அது வேறொன்னுமில்லீங்க, நினைத்த மாத்திரத்தில் 'டக்'கென போய்விடலாம். கஸகஸன்னு கூட்டமும் இருக்காது, அதனால நல்லா ஜாலியா சுத்திசுத்தி வரலாம்.


முன்பெல்லாம் பெரியார் கலைக்கல்லூரி வரைக்கும்தான் பேருந்து, ஆட்டோ எல்லாம் போகும். அதற்குமேல் நடைவண்டிதான். ஒரு காக்கா, குருவிகூட இருக்காது. போகவே கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்.

ஆனால் மே மாதத்தில் மட்டும் முதல் மூன்று(ஐந்து?) நாட்கள் கோடைவிழா நடக்கும் சமயத்தில் அங்கே கூட்டம் அலைமோதும்.

இப்போது எல்லாமும் மாறிவிட்டன. கடற்கரை வரை வாகனங்கள் செல்ல சாலை வசதி உள்ளது. அதேபோல் குட்டீஸ்களுக்கு விளையாடுமிடமும் உள்ளது. சாதாரண நாட்களிலேயே மக்கள் வந்த வண்ணமுள்ளனர்.

நண்பகல் நேரம், இருட்டிக்கொண்டு, தூறல்வேறு வந்ததால் வெறிச்சோடிக் கிடக்கும் சிறுவர் விளையாடுமிடம்.

வாங்க, அப்படியே நாமும் காலாற நடந்து கடலையும், அலையையும் ரசிப்போம் !

                                           கரையில் மோதி உள்வாங்கும் அலை !!

அலை போனபின் ..... ஹைய்யோ !! ஆனால் உயிருடன் இருந்ததால் எடுக்கவில்லை !

                                  அலையில் ஆட்டம் போட்ட மூன்று சிறுவர்கள் !

அலைபேசியில் படமெடுக்கவும் 'என்ன எடுங்க, என்ன எடுங்க" என அம்மூவரில் இருவர் மட்டுமே போஸ் கொடுத்தனர்.

மூன்றாமவருக்கு ஆசையும் வெட்கமும் போட்டிபோட .... ஹா ஹா .... ஆசை வென்றுவிட்டது. 
கூட்டம் இல்லாததால், "இன்றைக்கு வருமானம் அவ்வளவுதான்' என்ற சோகத்தில் !!

                                                                             மேலும் சில படங்கள் அடுத்த பதிவில் ....

18 comments:

 1. கடற்கரை என்றாலே...ஒரு சந்தோஷம்தான்....கடல் அலைகள் மனதை அமைதிப்படுத்தும் ஒன்று....அருமையான படங்கள்....

  ReplyDelete
  Replies
  1. சகோ துளசி & கீதா,

   ஆமாங்க, பிரம்மாண்டமான கடலையும், அலைகளையும் பார்க்கும்போது மனத்துள் மகிழ்ச்சி அலைகள் அடிக்கத்தான் செய்கிறது. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோ துளசி & கீதா.

   Delete
 2. Replies
  1. வருகைக்கு நன்றி தனபாலன்.

   Delete
 3. கடலூர் வெள்ளி கடற்கரை....அழகு......

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அனு.

   Delete
 4. ஆஹா மிளகாய் பஜ்ஜியாஆ. எனக்கு ரெம்ப பிடிக்கும். கூடவே மாங்கா சுண்டலும். எங்க ஊரில் கூட்டம் கூடினால் மட்டுமே இப்படி விற்பாங்க. மற்றும்படி வெறிச்சோடியிருக்கும். அழகா இருக்கு கடற்கரையும்,அலைகளும். எனக்கு அலைகளில் கால் நனைக்க, அதனைப்பார்த்துக்கொண்டு இருக்க ரெம்ப பிடிக்கும்.அழகாக படம் எடுத்திருக்கிறீங்க சித்ரா.

  ReplyDelete
  Replies
  1. மிளகாய் பஜ்ஜி சாப்பிட ஆசைதான், ஆனால் நிறத்தைப் பார்த்ததுமே வாங்கப் பிடிக்கவில்லை.

   கடலைப் பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரம் இருந்தாலும் அலுப்பு வராது. வீடு திரும்பும்வரை அலையில்தான் நிற்பேன். கூடிய சீக்கிரம் ...... உங்க ஊர் கடலையும் பார்த்துவிடுவோமே !! நன்றி ப்ரியா.

   Delete
 5. அழகான புகைப்படங்கள். கடலில் விளையாடி மகிழ்ந்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன. பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், உங்கள் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி முகில்.

   Delete
 6. நிஜமாவே வெள்ளிக்கடற்கரையோ என்று சொல்லுமளவிற்கு அலைகளின் நிறம். கடலூர் நான்கைந்து முறை வந்திருக்கிறேன். சமுத்திரம் வரை போனதில்லை. போகாவிட்டால் என்ன எங்க ஜில்லா எங்க பொண்ணு இருக்கீங்க ஒண்ணொண்ணா காட்டி ஸந்தோஷத்தைக் கொடுத்து விடுங்க அது போதும். எனக்கு. ஆமாம் அந்தப்பசங்க நம்மூருப்பசங்க . இவ்வளவு மிளகாய் பஜ்ஜிக்கு பாக்கி இருக்கே. மிளகாய்தானே. நாளாக்குச் சிலவாகி விடும். அந்தக்கவலை எனக்கு. உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் படங்கள். அட்டஹாஸம். மெச்ச வார்த்தைகள் போதாது. அன்புடன்.
  நீங்க என்ன நீண்ட நத்தையாரா கடல் அலுத்து விட்டதா. இப்படி அம்போ என்று கிடக்கங்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. காமாஷிமா,

   முன்பெல்லாம் யாரும் போக மாட்டாங்கன்னு நினைக்கிறேன். கடலைப் பார்க்க பாண்டிச்சேரிக்குத்தான் போவோம். இப்போது பயமில்லாமல் போகலாம்.

   நம்ம ஊர் பசங்கதான். கால்சட்டை இல்லாததால் குட்டிப் பையனுக்கு வெட்கம். உள்ளே நத்தை மாதிரிதான் இருக்கு. மெரீனாவிலும் இதைப் பார்த்தேன். மிளகாய் பஜ்ஜி சாயந்திரமானால் காலியாயிடும்னு நினைக்கிறேன்.

   வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றிமா, அன்புடன் சித்ரா.

   Delete
 7. பார்க்கப் பார்க்க சலிக்காத அழகு கடலும் கடற்கரையும். கடலூர் கடற்கரைக்கு ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன். அவ்வளவாக கூட்டமில்லாமல் இருப்பதும் ரசனைக் கூட்டலுக்கு ஒரு காரணம். படங்கள் அழகு சித்ரா.

  ReplyDelete
  Replies
  1. ஓ, கடலூருக்கு வந்திருக்கீங்களா !! மனிதர்களின் சத்தம் இல்லாமல் கடலின் இரைச்சல் மட்டுமே இருப்பதுவும் அழகுதானே. வருகைக்கு நன்றி கீதா .

   Delete
 8. கடற்கரை யாருக்குத்தான் பிடிக்காது? அலையில் எத்தனை நேரம் நின்றாலும் எனக்கு அலுக்கவே அலுக்காது. கடலும், கடலைச் சார்ந்த இடங்களும் கண்ணுக்கும், மனதுக்கும் குளிர்ச்சி! அந்த நத்தையாரை க்ளோசப்பில் எடுத்திருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. நானும் உங்களை மாதிரிதான், அலையில் எவ்வளவு நேரம் நின்றாலும் அலுக்காது. உடன் வருபவர்தான் திண்டாட வேண்டும். நத்தையை குளோசப்பில் எடுத்தேன், தேடி எடுக்க வேண்டும். வருகைக்கு நன்றிங்க.

   Delete
 9. பார்க்க எவ்வளவு இதமாக இருக்கிறது

  ReplyDelete
 10. பிரம்மாண்ட கடலும், ஆர்ப்பரித்து வரும் அலையையும் பார்க்க மனதிற்கு இதம்தான். வருகைக்கு நன்றி ஜலீலா.

  ReplyDelete