Friday, August 28, 2015

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ மிதி பாவக்காய் !



'இவ்ளோஓஓ பாவக்காயா !!'னு கண்ணு வைக்கிறவங்க பதிவு முடிஞ்ச பிறகு, வைக்கலாமா ? வேண்டாமா ? ன்னு  முடிவு பண்ணி வைங்க.

ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் நம்ம ஊர் கடைக்குப் போனபோது ஒரு அட்டைப் பெட்டியில் குட்டிகுட்டிப் பாவக்காய்கள் இருக்கவும், ஆச்சர்யமாகி, ஏனென்றால் அதற்குமுன் இந்த பாவக்காயை நான் பார்த்ததே இல்லை. காமாஷிமா ப்ளாக்கில் ஒருதடவை பார்த்திருக்கிறேன், வாங்கலாம் எனப் பார்த்தால் ஒன்றும் நன்றாக இல்லை.

அவற்றுள் ஒரு காய் மட்டும் பழுத்து வெடித்து விதைகள் நல்ல சிவப்பு நிறத்தோலுடன் 'பளிச்' என கண்ணைப் பறிக்கவும், எடுத்துக்கொண்டு வந்து 'எங்கே முளைக்கப் போகிற‌து !!' என சும்மா ஒரு தொட்டியில் போட்டுவிட்டு ஏதாவது முளைத்து வந்துள்ளதா என தினமும் ஒருமுறை எட்டிப் பார்த்து ........ பிறகு சுத்தமாக மறந்தே போனேன்.

மே மாதத்தில் ஒருநாள் பருப்புக் கீரையைப் பறிக்கும்போது அவற்றிற்கிடையில் ஒரு குட்டி புது செடி ஒன்று வந்திருக்கவும், இலைகளை வைத்து அது பாவக்காய் என முடிவு செய்து, இலையில் சிறிது கிள்ளி கசக்கி முகர்ந்து பார்த்தால் :) பாவக்காயேதான் !!

                                  பிறகு அதை ராஜமரியாதையுன் கவனித்து .........


அருகில் இருந்த மிளகாய்ச் செடியைப் பற்றிப் படர்ந்து, வளர்ந்து, பூக்கள் விட்டும் காய் வராததால், காத்திருந்து, பிறகு காய்கள் வந்து ..... பெருசாகும் எனப் பார்த்தால் .... விட்டது விட்டபடியே இருந்து காய்ந்து போனது.

ஆண் பூ, பெண் பூ இரண்டும் ஒரே செடியில் பூக்கிறது. பெண் பூதான் காய்க்கிறது, ஆண் பூ கொட்டிவிடுகிறது

நிறைய காய்கள் காய்த்தாலும் சமையலுக்குப் பயன்படாமல் போகிறது. விதை வீரியமில்லாததால் காய்களும் பயனற்று உள்ளது. கொண்டைக்கடலை அளவுதான் உள்ளது.

இருந்தாலும் செடியைப் பிடுங்க மனமில்லாமல் "அழகாத்தானே இருக்கு, இருந்துட்டுப் போகட்டுமே" என விட்டுவிட்டேன். ஒரு காய் பெருசானாலும் ஓடி வந்து உங்களிடம் சொல்லிவிடுகிறேன் !

சந்தேகங்களுக்குப் பதிலளித்த தோட்டம் சிவா'வுக்கும் நன்றி.

       கையைக் காலை ஆட்டி இவங்க நாட்டியமாடும் அழகே தனிதான் !


                                              இனி காய்களைப் பார்ப்போமா !!

12 comments:

  1. மிதி பாகற்காய்க் கதை சுவாரஸ்யம்.! இறுதியில் என்ன அ..ழ..குன்னு
    சொல்ல வந்து சிவப்பு மிளகாய்ப் பழத்தைப் பார்த்ததும் அப்படியே வார்த்தைகளை
    விழுங்கிக் கொண்டு போகிறேன்!..

    பொறுமையுடன் காத்திருங்கள் காய்கள் சற்றேனும் பெருக்கலாம்!
    பறித்துச் சமைக்கலாம்!...:)

    ReplyDelete
    Replies
    1. இளமதி,

      இனி பயப்பட வேணாம், மிளகாய்ப் பழத்தைத் தூக்கிட்டுப்போய் மிளகாயோடு சேர்த்துட்டேன்.

      கொடி முழுவதும் காய்கள்தான். பார்க்கலாம் நீங்க சொன்ன மாதிரி ஒன்னாவது பெருசா ஆகுதான்னு !! நன்றி இளமதி!

      Delete
  2. வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்திருக்கீங்க. அழகு. கடை பாவக்காய் என்பதால் தான் சரியாக காய்க்க வில்லை என்று நினைக்கிறேன்.

    மிதிபாகல் விளைச்சல் எடுக்க இந்த முறை காய்த்த பத்து காய்களையும் அப்படியே விட்டு வைத்திருக்கிறேன் (விதை எடுக்க). அடுத்த சீசனிலாவது கண்டிப்பாக வெற்றி பெற திட்டம். பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. சிவா,

      ஆமாம், அதேதான், எவ்வளவு நாட்கள் ஐஸ்'ல இருந்துச்சோ !

      இவை குட்டிக்குட்டியா கூஜா மாதிரி அழகா இருக்கவும் எடுத்துத் தள்ளியாச்சு :)

      பரவாயில்லை, பத்து காய்கள் வந்திருக்கு ! நாமே விதை பிடித்து விளைச்சல் பார்க்குபோது அதில் ஒரு கூடுதல் சந்தோஷம் ! வருகைக்கு நன்றி சிவா !

      Delete
  3. ஸேம் பின்ச் :)நானும் வளர்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அஞ்சு,

      விதை வாங்கிப்போட்டு வளர்ந்ததா ? இல்லை என்னை மாதிரியா :)

      நிறைய காய்கள் காய்த்து பெருசானதும், அறுவடை செஞ்சு, சமைச்சு எடுத்துட்டு வாங்க அஞ்சு, எல்லாருமா சேர்ந்து சாப்பிடலாம் :)

      Delete
  4. மிதி பாவக்காய் நல்லாத்தானே வந்திருக்கு சகோதரி! ஐயோ இது கண்ணு இல்ல...சந்தோஷமாகச் சொல்லுகின்றோம்...ஹஹஹ்

    எப்படியோ உங்கள் பதிவுகள் மிஸ் ஆகி இருக்கு...பார்த்துடறோம்...

    ReplyDelete
    Replies
    1. நிறைய காய்கள் வருது, ஆனா பெருசா ஆகமாட்டிங்கிது. குட்டிகுட்டியா இருந்து காய்ஞ்சு போகுது :(

      படத்தப் பெருசாக்கிப் போட்டதால தெரியுது, இல்லாட்டி எல்லோருமா சேர்ந்து தேட வேண்டியிருந்திருக்கும் :)))

      போடுங்க போடுங்க, நீங்களே இல்லாட்டி வேறு யார் வந்து திருஷ்டி போடப்போறா :) வருகைக்கு நன்றி சகோ துளசி & கீதா.

      Delete
  5. மிதி பாவற்காய் படங்கள் எல்லாமே ரசிச்சு,ரசிச்சு எடுத்து போட்டிருக்கிறீங்க. உங்களுக்கு கண்டிப்பா வரும். அழகா இருக்கு படங்கள் சித்ரா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ப்ரியா, ரசிச்சு ரசிச்சுதான் எடுத்தேன் !

      இனி காய் பெருசா ஆகாது. பிடுங்க மனசில்லை, இருந்துட்டுப் போகட்டும் என விட்டுட்டேன். வருகைக்கு நன்றி ப்ரியா.

      Delete
  6. காயைப் பார்த்தால் நன்றாகவே இருக்கிறதே. தினமும் அதைப் பார்க்காமல் இருங்கள். கட்டாயம் ஒன்றிரண்டாவது பெரிசாகும். மறந்தே போய்விசடுங்கள். கட்டாயம் பலன் கிடைக்கும். ஒரு கொடிஇருந்தாலே தினமும் காய் கிடைக்கும். வேருக்கு வெயில் போதவில்லையா? அல்லது தண்ணீர் அதிகமா? நம் கண்ணே விழுந்திருக்கும். பூசணிக்காய்கள் இம்மாதிரி வெதும்பும் போது இப்படித்தான் சொல்வார்கள். பார்க்கவும். இதையும் ட்ரை செய்து. ஒன்று இரண்டாவது தேரட்டும். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. காமாஷிமா,

      நீங்க சொல்லியுள்ள ஐடியாவும் நல்லாருக்கு, பார்க்காமல் இருக்க முயற்சிக்கிறேன்.

      இப்போது இங்கே வெயில்தான். ஆனால் குறிப்பிட்ட நேரம்தான் எங்க பேட்டியோவில் வெயில் விழும். தண்ணீரையும் குறைத்துப் பார்க்கிறேன். விதையும்கூட‌ பிரச்சினையாய் இருக்கலாம் அம்மா. எத்தனை நாட்கள் ஐஸ் பெட்டிக்குள் இருந்ததோ ! அன்புடன் சித்ரா.

      Delete