Sunday, September 27, 2015

எங்கள் வீட்டுத் தோட்டம் ___ மணத்தக்காளி கீரை !


சென்ற மாதத்தில் ஒருநாள் நம்ம ஊர் கடையில் அதிசயமாக மணத்தக்காளி கீரை வந்திருந்தது. வாங்கிவந்து கீரையை ஆய்ந்துகொண்டு,  தண்டுகளை (வேரில்லாதவைதான்) சும்மா 'பார்ப்போமே' என நட்டு வைத்தேன்.

ஆஹா, அடுத்த நாளே 'துளிர்த்துவிடும்' என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.

                                           கபகபனு இலைகள் பெரிதாகின.

இனி நினைத்த மாத்திரத்தில் வீட்டிலிருந்து பறித்துக்கொள்ளலாம் என சந்தோஷப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே .................

......................... கருப்பு எறும்புகள் வர ஆரம்பித்துவிட்டன.  இலைகள் சுருண்டு, அதன் அடிப்பகுதியில் கருப்புநிற முட்டைகள் இருந்தன.  இதுதான் இலைப்பேனோ !!

தொட்டியில் பூண்டு நட்டு வச்சிருக்கேன். அது முளைத்து வருவதற்குள் பூச்சி வந்துவிட்டதே. பூச்சி விழுந்த, சுருண்ட இலைகளை எல்லாம் பறித்து கசக்கி குப்பையில் போட்டுவிட்டு,  .................

........................ பூண்டு அரைத்து ஒவ்வொரு இலையின் மேலும், பின்னாலும் தடவி விட்டேன். இப்போது 'பரவாயில்லை' எனும் அளவிற்கு இலைகள் நன்றாக உள்ளன. மேலும் பூக்களும் பூக்க ஆரம்பித்துவிட்டன.

காய் காய்த்து, பறித்ததும் நிச்சயம் இங்கே எடுத்து வருவேன் :)

18 comments:

  1. மணத்தக்காளி கீரை அழகு. காய் வந்த்தும் அதை வற்றல் குழம்பு கூட வைக்கலாம்.நான் பக்கத்தில் community garden ல் மணத்தக்காளி செடியை கண்டு பழம் பறித்து வந்தேன். சிலவற்றை மண்ணில் கசக்கி விட இப்போது தான் துளிர்த்துள்ளன. சற்றே வளர்ந்ததும் படம் பதிவிடுகிறேன். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. ஓ, கம்யூனிட்டி கார்டனுக்கு வாலண்டியரா போறீங்களா ?

      ஆமாம் முகில், காய் காய்த்தால் புளிக்குழம்பு வைக்கலாம் என்றிருக்கிறேன். உங்க வீட்டு செடிகளையும் போடுங்க, பார்க்கிறோம். வருகைக்கு நன்றி முகில்.

      Delete
  2. இப்படி எல்லாம் போட்டு என்னைய பெருமூச்சு விடச்செய்கிறீங்களே சித்ரா. இது நியாயமா... .ஏற்கனவே போட்டவிட்டு போன மிளாகாய் இப்பதான் பூத்து காய்க்க தொடங்குது. "காய் பறிக்கபோறீயா என சவால் விட்டு, குளிர் வந்துவிட்டது. சாடியை தூக்கி உள்ளே வைசிட்டமுல்ல..
    நல்ல வெயில் போல உங்க இடத்தில். காய்த்தால் அப்படி பார்சல் ப்ளீஸ்.....
    3வது படத்தில் இலைகள் அழகாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியா,

      உங்க ஊர் குளிர்ல கொஞ்சம் எங்க பக்கம் அனுப்பினா நானும் பார்சல் அனுப்பி விடுகிறேன். முதலில் நல்லா ஹெல்தி'யாதான் துளிர்க்க ஆரம்பித்தது. பிறகுதான் இப்படி ஆகிவிட்டது. இங்கு நல்ல வெயில்தான். இன்றுதான் ஏதோ அதிசயமா மேகமூட்டத்துடன் இருக்கிறது.

      எங்க வீட்டு மிளகாய் பழுத்து அறுவடை ஆகிக்கொண்டிருகிறது. சீக்கிரமே போட்டுவிடுகிறேன். நன்றி ப்ரியா.

      Delete
  3. வாவ்...தண்டிலிருந்தே செடி வளர்த்துட்டீங்களே!! சபாஷ்!! :) :)

    இந்த செடியின் பிரச்சனையே இந்த கருப்பு பூச்சிகள்தான் சித்ராக்கா..இதனுடன் தொட்டியில் இருக்கும் மற்ற செடிகளையும் பாழ் பண்ணிடும். :( நான் உங்க அளவுக்கு பூண்டு வைத்தியமெல்லாம் செய்யல..ஒரேஒரு செடி இருந்தப்ப பூச்சி விழுந்த இலைகளை மட்டும் கத்தரிக்கோலால கட் பண்ணி விடுவேன். அப்படியே செடி பொழச்சிடுச்சு..இப்ப கேட்கவே வேணாம், எல்லாஆஆஆஆத் தொட்டிகள்லயும் இந்த கீரைச்செடிகள்தான்!! நேரமும் இல்லாததால் பூச்சி விழுந்த இலைக்கு பதிலா செடிகளையே இப்போ வெட்டிப் போட்டுடறேன்...ஹிஹி...!!! :)

    ஒரு முறை பழம் பழுக்க வைச்சிருங்க, அப்புறம் இவர் உங்க வீட்டுத் தோட்டத்தில நிரந்தர உறுப்பினர் ஆகிருவார். ஆல் த பெஸ்ட்டூ!!

    ReplyDelete
    Replies
    1. மகி,

      நீங்க சொல்றதப் பார்த்தா இந்த மணத்தக்காளி கீரை எங்க வீட்டு பருப்பு கீரை மாதிரி போல. பிடுங்கி பிடுங்கி போட்டாலும் வந்துட்டேதான் இருக்கு. தொட்டியைச் சுற்றி உப்பு தூவி தனியே வச்சிருக்கேன், பார்க்கலாம்.

      "அப்புறம் இவர் உங்க வீட்டுத் தோட்டத்தில நிரந்தர உறுப்பினர் ஆகிருவார்" _____ ஆறுதலா இருக்கு, நன்றி மகி.

      Delete
  4. மணத் தக்காளி கீரையா? சூப்பர். இந்த வருஷம் பூண்டு விளைச்சல் நிறைய இருந்தால் எனக்கு கொஞ்சம் அனுப்புங்கோ ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லையே, பூண்டு முளைத்து வருமுன்னே கிராக்கி வந்திருக்கே ! அப்படின்னா லம்ப்ஆ ஒரு அமௌண்ட என்னோட அக்கௌண்ட்ல போட்டு முதல் ஆளா பதிவு பண்ணிக்கோங்க :)

      நன்றி அபிநயா.

      Delete
  5. அதுஸரி.மிதிபாகல் ஒருகாயாவது ஒழுங்காக வந்ததா? பச்சை மணத்ததக்காளிக்காய் வதக்கி வத்தக் குழம்பு அவ்வளவு நன்றாக இருக்கும். அதிலும் சிவப்பு நிறப் பழங்கள் பழுக்குமே அந்த வகை. இலையை வதக்கித் துவையல்கூட அரைக்கலாம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். நல்ல விவஸாயி ஆகி விட்டாய். மொத்தம் எத்தனைத் தொட்டிகள்? வருவது குளிர்காலம். கடுகுக்கீரை நன்றாக வரும். முயற்சி செய். முயற்சிகள் நன்றாக இருக்கிறது. பேங்க் அக்கவுண்டும் பலமாக ஏறும். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. காமாஷிமா,

      பாகல் செடி தானாவே காய்ஞ்சு போச்சு :(

      ஓ, சிவப்பு பழங்கள் நன்றாக இருக்குமா ! பழுக்கும்போது சொல்கிறேன்மா. 'இனிமே வாங்கக்கூடாது வாங்கவேக் கூடாது'னு நினைத்து நினைத்தே சின்னசின்னதா பத்து தொட்டிகள் வாங்கியிருக்கேன் :) வீடு மாறும்போது இவற்றையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டும். அதனால்தான் நிறைய தொட்டிகள் வாங்கவில்லை.

      கடுகுக் கீரைக்கு குளிர்காலம் ஏற்றதா ? இங்கு அது நிறைய கிடைக்கும். விதை கிடைத்தால் போட்டுப் பார்க்கிறேன்.

      "பேங்க் அக்கவுண்டும் பலமாக ஏறும்" ______ உங்க கமெண்ட்ஸ்'கள்தானே பேங்க் பேலன்ஸ். எண்ண முடியாத அளவுக்கு அது ஏறிப்போய் கிடக்கு :))))) நன்றிமா, அன்புடன் சித்ரா.

      Delete
  6. ஆஹா..... வெளிநாட்டில் ஒர் தமிழ் விவசாயி.... கேட்கவே சந்தோஷமா இருக்கு. அதுவும் மணத்தக்காளி கீரை - உடம்புக்கும் நல்லது..... எஞ்சாய்!

    ReplyDelete
    Replies
    1. "வெளிநாட்டில் ஒர் தமிழ் விவசாயி" ______ கேட்க எனக்குமே சந்தோஷமா இருக்கு :))

      நன்றி வெங்கட்.

      Delete
  7. ஆரோக்யமாக வாழ வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி கவியாழி கண்ணதாசன் !

      Delete
  8. மணத்தக்காளி கீரையை ஒடித்து வைத்தால் தளிர்க்கும் என்று இப்போது தான் கேள்வி படுகிறேன். நானும் முயற்சித்து பார்க்கிறேன்.

    நீங்கள் சொல்வது மாதிரி இலையின் அடியில் கருப்பாக சின்ன சின்ன முட்டை மாதிரி வருவதும், நிறைய கட்டெறும்புகள் கூட்டம் கூட்டமாய் அதில் ஊர்வதும் மணத்தக்காளி செடியில் எரிச்சலான ஒரு விஷயம். நான் கூட இது கீரை என்பதால் அவ்வளவு பிரச்னை வராது என்று நினைத்திருக்கிறேன். ஆனால் இந்த பிரச்னை வந்தால் செடி அவ்வளவு தான் (இந்த முறை அதிஸ்டவசமாக இந்த பிரச்னை வரவில்லை). அவைகள் இலை பேன்கள் மாதிரியா, இல்லை எறும்புகள் தான் ஏதும் செய்கிறதா என்று நான் யோசிக்க வில்லை. நீங்கள் பூண்டு தடவி இருப்பது நல்ல முயற்சி. கட்டெறும்புகள் போய் விட்டனவா? நான் நிறைய செடிகள் போடும் போது இது போல தேய்த்து கட்டுப்படுத்த முடியாமல் பிடுங்கி போட்டு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சிவா,

      எளிதில் கிடைக்காத கீரை என்றால் இப்படி முயற்சிப்பதுண்டு. புளிச்சகீரை குச்சிகூட துளிர்க்கிறது.

      பூண்டு தடவிய பிறகு எறும்புகள் வருவது நின்ற இரண்டு நாட்களில் ஃப்ரூட் ப்ளை வர ஆரம்பிச்சு(இச்செடிக்கு மட்டும்), இப்போ மஞ்சள் தண்ணீர் தெளிச்சு விட்டிருக்கேன். ஏற்கனவே காமாக்ஷிமா சொன்னதுதான் இந்த மஞ்சள் தண்ணீர் வைத்தியம், இடையில் மறந்தேவிட்டேன். மீண்டும் உங்க ப்ளாகில் ஒருவர் சொல்லியதும் நினைவு வந்து தெளிச்சிருக்கேன். தொட்டியில் வெங்காயம் & பூண்டு செடிகள் துளிர்க்க ஆரம்பித்திருப்பதால் இனி பூச்சி பிரச்சினை வராது'னு நினைக்கிறேன்.

      பிடுங்கிப் போட முடியாதே, இருப்பது ஒரு செடிதான் :)

      Delete
  9. மணத்தக்காளிச் செடி இப்படி வைத்தாலும் நன்றாக வளர்ந்துரும். வேறு கீரை வகைகள் கூட....வேர் இருந்தால் வைத்தால் வந்துவிடும்..மணத்தக்காளிக் கீரை ரொம்ப சுவையாகவும் இருக்கும்..நலதும் கூட சுவையுங்கள்!!!!

    பூச்சி வராமல் இருக்க நம்ம ஏஞ்சலின் சகோ நிறைய டிப்ஸ் கொடுத்துருக்காங்களே அவங்க வலைல....

    ReplyDelete
    Replies
    1. மணத்தக்காளி செடி துளிர்த்ததில் எனக்கே ஆச்சரியம். இப்போ நிறைய காய்கள் வந்தாச்சு. பூச்சி அவ்வளவா வராது, ஏனோ இந்த செடிக்கு மட்டும் வந்திருக்கு. ஏஞ்சல் கொடுத்த டிப்ஸையும் பார்த்தேன்.

      நன்றி சகோ துளசி & கீதா !

      Delete