Sunday, February 14, 2016

San Francisco !சென்ற புதன்கிழமையன்று சான் ஃப்ரான்சிஸ்கோ செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே இரண்டொருமுறை போயிருந்தாலும், " Downtown இப்போ எப்படி இருக்கு ? முன்பு இருந்த மாதிரியே இருக்கா ? இல்லை மாற்றம் ஏதேனும் வந்திருக்கா"னு எட்டிப் பார்த்துட்டு வந்தேன்(வந்தோம்) :)

சென்ற வருடம் Golden gate park போய் வந்ததையே இன்னும் பதியாமல் இருக்கும்போது இதையாவது சூட்டோடு சூடாக பதிவாக்கிட முடிவு பண்ணி போட்டாச்சு. என்னவொன்று, வெறும் கட்டடங்களேதான் பதிவில் உள்ளன. நான் பார்த்ததும் அதைத்தானே.

கூடிய சீக்கிரம் இன்னொரு முறையும் போகவேண்டி வரும். முடிந்தால் அப்போது இயற்கையுடன் வருகிறேன். ஏற்கனவே ஒருமுறை பசிபிக் பக்கமாக போனபோது எடுத்த படங்கள் இங்கே உள்ளன.


எங்கும் விண்ணை முட்டும் கட்டிடங்கள். நிமிர்ந்து பார்த்தால் கழுத்துவலி வந்திடும், இல்லாட்டி கழுத்து சுளுக்காவது வந்தே தீரும். அப்படியும் ஒரு சில படங்கள் எடுத்தேன். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு !

 இங்கே உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.


                    கட்டிடக் கூட்டங்களுக்கிடையில் அழகான புல்வெளியும் கண்ணைக் கவர்ந்தது.

                                      *********************************************

சென்ற ஞாயிறன்று எங்கள் ஊரில் நடந்த Super Bowl 50 கால் பந்தாட்டத்துக்கு (உண்மையில் கைப் பந்தாட்டம்தான்) சான்ஃப்ரான்சிஸ்கோவில் உருவான super bowl city. எங்கும், எதிலும் இதைப்பற்றிய பேச்சாகத்தான் இருந்தது.


நம்ம ஊரில் நடந்த கால் பந்தாட்டத்தைத்தான் நேரில் பார்க்க முடியல, வந்ததே வந்தோம், அப்படியே super bowl city யையாவது நேரில் பார்த்து வரலாம் என போனால், அங்கே பல நாட்கள் கொண்டாட்டம் முடிவுக்கு வந்த நிலையில் எல்லாவற்றையும் அப்புறப்படுத்திக்கொண்டு இருந்தனர்.

நாங்கள் அங்கே நின்று பார்த்துக்கொண்டிருக்கும்போதே 50 ல் உள்ள 5 ஐ தனியே பிரித்து எடுத்தனர் :))))

சில நாட்களுக்குமுன் ஆட்டம்பாட்டம், கொண்டாட்டத்துடன் இருந்த  இந்த‌ super bowl city இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது.

                                     ***********************************************
சான் ஃப்ரான்சிஸ்கோ போனால் கட்டாயம் இந்த cable car ல் ஏறிப்பார்க்க வேண்டும் என்பார்கள்.  ஆனால் இதுவரை ஏறியதில்லை. அதில் ஏற ஒரு பெரிய நீண்ட வரிசை நிற்கும் என்பதும் ஒரு காரணம். இயந்திரமயமாக்கப்பட்ட இந்த நாளிலும் manual ஆக operate செய்வது இதன் சிற‌ப்பாம்.                                 

*********************************************                         

10 comments:

 1. மிகவும் ரசித்தோம் சகோ..படங்கள் அழகு...

  கீதா: சான்ஃப்ரான்சிஸ்கோ இரு முறை சென்றதுண்டு அங்கிருந்த போது ஹும் 9 தே மாதங்கள்தான்...இதுல பெருமை வேறு ஹிஹிஹி.....அதுவும் மழை நேரத்தில். பல சாலைகள் அப்படியே மேடேறி இறங்கும் அழகாக இருக்கும். அப்போது தெரியும் கடல் அழகு...

  சித்ரா 17 மைல் ட்ரைவ் சென்றிருக்கின்றீர்களா? இல்லை என்றால் சென்று பாருங்கள் அழகாக இருக்கும்.

  பல நினைவுகளைத் தட்டிப் எழுப்பின உங்கள் படங்கள்...அருமையா இருக்குப்பா உங்கள் படங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா, சாலைகள் மேடும் பள்ளமுமாக அழகாகத்தான் இருக்கும்.

   17 மைல் ட்ரைவ் கேள்விப்பட்டதோடு சரி, போனதில்லை. நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்க. எனக்கும் இனி சான் ஃப்ரான்சிஸ்கோ என்றால் கீதாவின் நினைவும் வரத்தான் செய்யும் :)

   Delete
 2. நீலவானம்,வெயில்,கட்டிடங்கள் போட்டோஸ் பார்க்க ரெம்ப அழகா இருக்கு. வாட்டர் பால்ஸ் அழகு.எங்களுக்கு பெரிய சிட்டியில் அதுவும் ப்ராங்க்போர்ட் ல் இப்படிதான் பெரிய கட்டிடங்கள் இருக்கு. சிட்டியில் பச்சை புல்வெளி பார்ப்பது கஷ்டம்தான். எங்க இடம் ஒரே பச்சைபசேல்தான்....!!
  ஆசை அடுத்ததடவை நிறைவேத்திடுங்க. கேபிள் கார் ஆசையை.....!!

  ReplyDelete
  Replies

  1. ஆமாம் ப்ரியா, வெயிலும் குளிரும் சேர்ந்தார்போல் சூப்பரா இருந்துச்சு. அப்படியே உங்க ஊர் பசுமையையும் போடுங்க.

   நிறைவேறினால் கண்டிப்பா சொல்றேன் :)

   Delete
 3. படங்கள் அழகா இருக்கு அக்கா... ரசித்து எழுதியிருக்கிங்க. .

  ReplyDelete
 4. எவ்வளோ பெரிய்யயய கட்டடங்கள் ....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அனு, நிமிர்ந்து பார்க்கும் அளவில்தான் கட்டிடங்கள் உள்ளன.

   நன்றி அனு.

   Delete
 5. எப்படி பார்க்கத் தவறினேன் தெரியவில்லை. அழகான கட்டிடங்கள். பார்த்து ரஸிக்க வேண்டிய இடங்கள். பார்த்து ரஸித்தேன். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. பார்த்து ரசித்து கருத்தும் பதிந்ததற்கு நன்றிம்மா, அன்புடன் சித்ரா.

   Delete