Thursday, May 26, 2016

கோடை விடுமுறை !!

பள்ளி வாழ்க்கையை விட்டு விலகி பல வருடங்கள் ஓடிவிட்டாலும், நம் ஊரிலிருந்து எவ்வளவு தொலைவில் சென்று தங்கி இருந்தாலும், இன்னமும் ஏப்ரல் & மே மாதங்கள் இரண்டும் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏப்ரல் மாதம் வந்தாலே ஒரு புத்துணர்ச்சி வந்துவிடும். தேர்வு நடந்துகொண்டிருக்கிறதே என்றுகூட யோசிக்கத் தோணாது.

அதுவும் ஏப்ரல் 10 தேதியானால் அவ்வளவுதான், 'இன்னும் ஒன்றிரண்டு நாட்கள்தான், சித்திரை 1 வந்துவிடும்' என சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் போய்விடும்.

இப்போது புரிந்திருக்குமே நான் எங்கே வருகிறேன் என்று.

ஆமாங்க நம்ம ஊர் கோடை விடுமுறையைத்தான் சொல்கிறேன். நல்லவேளை அந்நாளில் கோடை வகுப்புனா என்னன்னே தெரியாமல் வள‌ர்ந்தாச்சு. இல்லாட்டி, 'கோடை விடுமுறை ஏன்தான் வருகிறதோ!" என்றே வருத்தப்பட்டிருப்போம்.

இதோ மே மாதம் முடியப்போகும் இப்போதும் எனக்குள் தானாகவே ஒரு சோகம் வந்துவிட்டது. அது அடுத்த வாரம் பள்ளி திறந்துவிடுவார்களே என்றுதான் !

என்னதான் புதுத்துணி, புது நோட்டு, புது புத்தகங்கள் என்றாலும் முகம் மட்டும் கொஞ்சம் வாடிப்போய்தான் இருக்கும்.

ஜூன் 1 திங்கள் கிழமையில் வந்தால் அவ்வளவுதான், 'ஒரு வாஆஆரம் தொடர்ந்து போக வேண்டுமே' என்றிருக்கும்.

அதுவே திங்கள் தவிர்த்து மற்ற எந்த நாட்களில் வந்தாலும் எங்களுக்குப் பிரச்சினையில்லை.

செவ்வாய் என்றால் கண்டிப்பாக புதன்கிழமைதான் பள்ளி திறப்பார்கள். ஆரம்பத்திலேயே இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும்.

மற்ற நாட்களில் ஆரம்பிக்குமானால் பிரச்சினையே இல்லை, இரண்டுமூன்று நாட்கள் பள்ளி, உடனேயே விடுமுறை வந்துவிடும் என ஆயிரம் கணக்கு போடுவோம்.

'வெயில் காரணமாக பள்ளி ஒரு வாரம் கழித்து திறக்கப்படும்' என்றால் அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணை ஏது ?

இப்படியெல்லாம் பிள்ளைகள் மட்டுமா கணக்கு போடுவார்கள் ? ....... ஹா ஹா ஹா :))))

*************************************************************************************

(பள்ளியில் படித்த காலங்களில் தோழிகளுக்குள் நாங்கள் பேசிக்கொள்வதுதான் இந்தப்பதிவு)

*************************************************************************************

11 comments:

  1. உங்கள் பதிவு என்னை இளமையாக்கி விட்டது என்றே சொல்லலாம். கோடை விடுமுறையில் சித்திரை மாத வெயிலை வீணாக்காமல் நாங்களே காய்ந்து விளையாடிக் கொண்டிருப்போம். இப்பொழுது குழ்ந்தைகளுக்கு கோடை விடுமுறை இல்லை ...அது கொடுமை விடுமுறை.

    ReplyDelete
    Replies
    1. நினைவுகள்தானே நம்மை இளமையாக வைத்திருக்கிறது. 'கொடுமை விடுமுறை' ___ உண்மைததாங்க.

      போட்ட ஆட்டத்தினால் கோடை முடிந்து வரும்போது எல்லோருமே கொஞ்சம் இளைத்து & கறுத்துபோய்தான் இருப்போம். நினைக்கும்போதே இனிப்பா இருக்கு.

      Delete
  2. எங்களுக்கும் கொண்டாட்டம் தான் சித்ரா. ஏனெனில் எங்களுக்கு சிங்கள மொழி பேசும் சிங்களவர் இருப்பதால் அவங்களுக்கும் வேறு விடுமுறை வரும். அதுவும் எங்களுக்கு லீவு விடுவாங்க. பெளர்ணமி தினம் லீவு. நீங்க நினைப்பது போல்தான் நாங்களும் வெள்ளி ,திங்கள் லீவு வந்தால் கொண்டாட்டம். சித்திரை லீவு குறைவு. ஆவணியில் தான் நீண்ட விடுமுறை. ம்..மறக்கமுடியாது பள்ளி நாட்களை...

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊர் விடுமுறை வித்தியாசமா இருக்கே ப்ரியா ! எழுதினா நாங்களும் தெரிஞ்சிப்போம்ல !

      ஒன்றரை மாதங்கள் விடுமுறை என்றாலும் அந்த ஒன்றிரண்டு நாட்கள் கூடுதலாகக் கிடைக்கும்போது அதிலொரு சந்தோஷம்.

      Delete
  3. ஏப்ரல் மே தாக்கத்தை மட்டுமா .....தாகத்தையும்னும் போட்டுக்கங்க....(இந்தத் தாகம் ன்றது இரண்டிற்கும் பொருந்தும் இல்லையோ தண்ணீர், விடுமுறை விருப்பம்...) துளசி டீச்சர் என்பதால் இப்போதும் அப்படியே ஹிஹிஹிஉ...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இரண்டிற்குமே பொருந்தும்தான் !

      ஹா ஹா ஹா கடைசி வரிய சரியா கணிச்சிட்டீங்க !

      Delete
  4. சித்ரா பெண் காலேஜிலிருந்து அவ்விடத்திய கோடை விடுமுறைக்கு வர இந்த ஜூன் தானே பாக்கி இருக்கு. எங்கெல்லாம் போவதாகப் ப்ளான். இந்தியக் கோடை விடு முறையை மறந்து அமெரிக்க கோடை விடுமுறையைப்பற்றி இனி ப்ளான்தான் பாக்கி இருக்கும். இந்தியப் பற்று நம்மூர் வெயில் மறக்க முடியுமா? நல்ல மலரும் நினைவுகள். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. காமாக்ஷிமா,

      வருடந்தோறும் ப்ளான் எல்லாம் நல்லாத்தான் போடுவோம். அதை நிறைவேத்துறதுக்குள்ள விடுமுறையே முடிஞ்சிடும். இந்த வருடமும் ப்ளான் ரெடி ஆயிடுச்சு, அது நிறைவேறணும், நிறைவேறியதும் இங்கே வந்து சொல்லாமல் எங்கே போய் சொல்லப்போகிறேன் :) அன்புடன் சித்ரா.

      Delete
  5. சகோதரியே, கோடை விடுமுறை மட்டும் அல்ல, சனி, ஞாயிறு முடிந்து திங்கள் வருகிறது என்ற உடனே வெயிலிலும், குளிர் காய்ச்சல் வந்து விடும். ஞாயிறு இரவு எத்தனை நாட்கள் படுக்கையில் கண்ணீருடன் புரண்டதுண்டு. பத்தாம் வகுப்பில் ஒருமுறை தஞ்சையில் தமிழ் மாநாடு என்று ஒரு வாரம் கூடுதல் விடுமுறை எதிர்பார்க்காமல் கிடைத்தது. ஒரு ஆண்டுக்கான ஊதியம் ஒரு நாளில் கிடைத்ததை விட சந்தோஷம். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாரத்தில் பிடிக்காத நாள் என்றால் அது ஞாயிறுதான். அடுத்த நாள் ஓட வேண்டுமே :(

      தஞ்சையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டை மறக்க முடியுமா ?

      1994 ல் ஒரு வார அரையாண்டு விடுமுறையில் பெங்களூர் வாசம். விடுமுறை முடியும் முதல்நாள் மாலை ஊருக்குப் புறப்பட(சோகமாய்) தயாராய் இருந்தேன். ரேடியோவில் கூடுதலாக ஒரு வாரம் விடுமுறை என்ற செய்தியைக் கேட்ட‌தும் அடைந்த சந்தோஷத்தை அளவிட முடியாது. அடித்துப்பிடித்து ஓடிப்போய் முன்பதிவை கேன்சல் செய்து அடுத்த வாரத்தில் புக் பண்ணியதை இன்னமும் மறக்க முடியாது.

      அந்நாளைய நிகழ்வை நினைத்துப் பார்க்க வைத்துவிட்டது உங்கள் பின்னூட்டம்.

      Delete
  6. மலரும் நினைவுகளை தூண்டி விட்டீர்கள் சித்ரா....

    ReplyDelete